Grasp all lose all.
பேராசை பெருநஷ்டம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.
2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.
பொன்மொழி :
நீ வெற்றிக்காக போராடும் பொழுது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்று சொல்வார்கள் - கண்ணதாசன்
பொது அறிவு :
01.இந்தியாவின் முதன்மையான வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
டேராடூன் - உத்தராகண்ட்
Dehradun, Uttarakhand
02.இந்தியாவில் எந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் அதிகம் உள்ளன?
நந்தன்கானன் உயிரியல் பூங்கா -ஓடிசா
Nandankanan Zoological Park - Odisha
English words :
Preening-cleaning
Bifurcated-splitted
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
பல நூற்றாண்டுகளாக பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதற்கு சந்திரனின் ஈர்ப்பு விசை முக்கிய காரணம் ஆனது. இந்த நிகழ்வு ""ஓதத் தடை"" (Tidal Braking) என்பதனால் ஏற்படுகிறது. சந்திரனின் ஈர்ப்பு என்பது பூமியின் நீர்ப்பரப்புகளை (மற்றும் ஓரளவு திடப்பரப்புகளையும்) இழுத்து, பூமி சந்திரனை நோக்கி சிறிது புடைப்பு ஏற்படுத்துகிறது. இந்த உராய்வு, ஆற்றல் பரிமாற்றம் காரணமாக பூமியின் சுழற்சி உந்தம் குறைக்கப்படுகிறது. இதில் சந்திரன் ஒரு கைத் தடை (Handbrake) போலவே செயல்படுகிறது.
பிப்ரவரி 27
- பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்
நீதிக்கதை
காவல்காரன்
மகத நாட்டின் மன்னர், தான் புதிதாக அமைத்த அழகிய தென்னந்தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவருக்கு ராமனின் நினைவு வந்தது. அரசவையில் கோமாளியைப் போல் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வருகிறான். ஆகையால் அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள் என்றார்.
அரசே! நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்வேன் என்றான் ராமன். அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் ராமன். பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான். பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வாரம் சென்றது. தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.
தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக் கிடப்பதைப் பார்த்தார். கோபம் கொண்ட அவர், நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லா கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்? என்று கோபமாகக் கேட்டார். அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை, என்றான். இதைக் கேட்ட அரசர், இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டார். அப்பாடா! தப்பித்தோம்! என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ராமன்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment