 |
| இந்திரா காந்தி |
திருக்குறள்:
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
விளக்க உரை:
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
பழமொழி :
If the intention to achieve is deep in your heart, you can achieve anything with your consistent effort.
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.
2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.
பொன்மொழி :
அனுபவம் என்பது சிறந்த ஆசிரியர். நமக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கிறது - பிளினி.
பொது அறிவு :
01.ரப்பர் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள் எது?
ரப்பர் மரத்தின் பால்-லேடெக்ஸ்
natural latex from rubber trees
02. இந்தியாவில் கருப்பு மிளகு அதிகமாக விளையும் மாநிலம் எது?
கர்நாடகா- Karnataka
English words :
perplexed-confused
mischief-playful behaviour
தமிழ் இலக்கணம்:
'ன' என்ற எழுத்துக்கு றன்னகரம் என்றும் பெயர் உண்டு.இது வரும் சொற்களில், அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டு: கன்று, இன்று, சென்றான், மன்றம், தென்றல்.
நவம்பர் 19
இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
உலகக் கழிவறை நாள்
உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே.
நீதிக்கதை
அற்பமாக எண்ணாதே
ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அதற்கு அப்பால் அதை மிக ஒட்டி ஒரு வறண்ட நிலப் பகுதியும் இருந்தது. இத்தோட்டத்தில் பல அழகிய மலர்கள் இருந்தன. ரோஜா, சாமந்தி, முல்லை, கனகாம்பரம் போன்ற பல மலர்கள் இருந்தன. வறண்ட பகுதியில் கள்ளிச் செடிகள் வளர்ந்திருந்தன. எல்லா செடிகளும் ஒற்றுமையாக இருந்தன. ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டன. காட்டு செய்திகளை மலர்கள் சொல்லும். வறண்ட நிலப் பகுதியில் நடக்கும் காரியங்களை கள்ளிச்செடிகள் அவர்களோடு கூட பகிர்ந்து கொள்ளும். ஆனால் இந்த ரோஜா செடிகள் மட்டும் தலைக்கனம் பிடித்தவையாக இருந்தன. அவைகள் இந்த கள்ளிச் செடிகளை பார்த்து “எப்படி முள்ளோடு இருக்கிறது எவ்வளவு குண்டாக இருக்கிறது ஒரு உருவம் இல்லாமல் இருக்கிறது” என்று சொல்லி கேலி செய்வது உண்டு. அதைக் கேட்டு கள்ளிச்செடிகள் சோகமாக இருப்பது உண்டு. சில நாட்கள் கழித்து கோடை காலம் வந்தது. காட்டில் சில மாதங்களாக மழை பெய்யவில்லை. ஆகவே கோடைகாலத்தில் குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. மிருகங்களும் பறவைகளும் நீர் தேடி வேறு இடம் செல்வதற்கு தயாராகி விட்டன. செடிகள் பாவம் அவைகளால் எங்கும் செல்ல முடியாது எனவே அவைகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தாங்கள் இறந்து விடுமோ என்று பயந்தன. அந்த வேளையில் கள்ளிச்செடிகள் எல்லாம் நாங்கள் எங்களுடைய நீரை உங்களுக்கு வேரின் வழியாக தருகிறோம் என்று சொல்லி அவைகளை ஆறுதல் படுத்தின. அதன்படியே தாங்கள் சேமித்து வைத்திருந்த அதிகப்படியான நீரை வேரின் வழியாக இந்த செடிகளுக்கு கொடுத்து உதவின. சிறிது நாட்களிலே மழை பெய்ய தொடங்கி எல்லா செடிகளும் பிழைத்து விட்டன. இப்பொழுது ரோஜா செடிகள் தங்கள் தலைக்கனம் குறைந்து தாங்கள் தேவை இல்லாமல் பேசியதை எண்ணி வருந்தி கள்ளிச்செடிகளிடம் மன்னிப்பு கேட்டன.
நீதி: பிறரை அற்பமாக எண்ணுவது மிகவும் கொடிய குணம். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் எனவே ஒருவரை உருவ கேலி செய்வது மிகவும் தவறு. மற்றவர் மனம் வருந்தும்படி ஒருநாளும் பேசக்கூடாது. நம்முடைய அழகும் திறமையும் அல்ல நம்முடைய குணங்களே மிகவும் முக்கியமானதாகும்.
இன்றைய செய்திகள்
19.11.2025
⭐இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்
⭐தென்காசி மாவட்டத்தில் கனமழை -- குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிப்பு.
⭐அமெரிக்காவிடம் இருந்து ஆண்டிற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்.
⭐இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்.
⭐அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை கடும் சரிவு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Today's Headlines
⭐Tamil Nadu has become the sports capital of India - Minister Anbil Mahesh
⭐Bathing at the Courtallam Main Falls has been banned due to heavy rains in the Tenkasi district.
⭐India signs deal to import 2.2 million tonnes of LPG per year from US.
⭐Enrollment of new international students at US universities plummets.
*SPORTS NEWS*
🏀The much-awaited Ashes series between Australia and England is set to begin on the 21st. * Players from both teams are training hard for the series.
No comments:
Post a Comment