![]() |
| வ.உ.சிதம்பரனார் |
Break through a thousand obstacles and move forward.
ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு.
இரண்டொழுக்க பண்புகள் :
1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.
2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.
பொன்மொழி :
ஒருவனுக்கு என்ன நேர்கிறது என்பது அனுபவம் அல்ல; ஏதாவது நேரிடும் போது அவன் என்ன செய்கிறான் என்பதே அனுபவம் -ஆல்டஸ் ஹக்ஸ்லி
பொது அறிவு :
01.தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
தாண்டிக்குடி, திண்டுக்கல்
Thandigudi, Dindigul
02.உலகிலேயே இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு எது?
பிச்சாவரம் அலையாத்திக் காடு
Pichavaram Mangrove Forest
English words :
epitaph- words written on the
Tombstone,craned-to stretch one's neck to see
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
பறவை வளர்ச்சியின் வரலாற்றின் காரணமாகவும், முட்டைகள் கூட்டில் இருந்து உருண்டு விழாமல் இருக்க பறவைகள் கட்டும் கூட்டின் அமைப்பிற்கு ஏற்ப முட்டை வடிவம் அமைகிறது என்று காரணம் சொல்லப்பட்டு வந்தது. சமீபத்திய ஆய்வில் 1,400 மேலான பறவை வகைகளின் 50,000 முட்டைகளின் அமைப்பை ஆராய்ந்த ஆய்வாளர்கள் குழு (Stoddard et al. 2017) பறவையின் பறக்கும் வாழ்க்கைத் தேவைக்கேற்ப முட்டையின் வடிவங்கள் அமைகின்றன
நவம்பர் 18
நீதிக்கதை
ஒரு ஊரில் ஒரு காடு இருந்தது. அந்த காட்டில் பலவிதமான பறவைகள் இருந்தது. அதில் சிட்டு என்ற ஒரு குருவியும் இருந்தது. அந்த குருவிக்கு உயர உயர வானத்தில் பறக்க மிகவும் பிடிக்கும். அது எப்பொழுதும் வானில் பறந்து கொண்டே இருக்கும். அது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
ஒரு நாள் அந்த காட்டிலே ஒரு பெரிய புயல் வந்தது. மரங்கள் எல்லாம் ஆடியது. இந்த குருவியால் மேலே பறக்க முடியவில்லை. அப்படி பறக்க முயற்சித்த போது ஒரு மரத்தின் கிளை அதன் மேல் உடைந்து விழுந்தது. அது கீழே மயங்கி விழுந்து விட்டது. அது விழித்த பொழுது ஓரளவு புயல் அடங்கி இருந்தது. ஆனால் பறக்க முயற்சித்த போது அந்த குருவியால் பறக்க முடியவில்லை. அது மிகுந்த வேதனை அடைந்தது. ஏனென்றால் அதற்கு காற்றில் பறப்பதுதான் மிகவும் பிடிக்கும். பறக்க முடியாமல் போனதற்காக அழுது கொண்டே இருந்தது.
அப்பொழுது அந்த வழியாக ஒரு வயதான முதியவர் வந்தார். அவர் அந்த குருவியை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். நான் பறந்து கொண்டிருந்தேன் இப்பொழுது என்னுடைய இறக்கைகள் உடைந்து விட்டது. என்னால் பறக்க இயலவில்லை என்று கூறியது. அப்பொழுது அந்த முதியவர் பறக்க முடியாவிட்டால் என்ன நட என்று கூறினார். நான் எப்படி நடக்க முடியும் நான் எப்பொழுதும் பறந்து கொண்டே இருப்பவளாச்சே என்று அந்த சிட்டு கூறியது.
அவர் ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கப்படும் உனக்கு பறக்க முடியவில்லை ஆனால் கால்கள் உள்ளதால் நடக்க முடியும் எனவே நடந்து செல் என்று சொன்னார். அந்த குருவியும் அவர் சொன்னதற்காக நடக்க முயற்சித்தது முதலில் அதனால் நடக்க முடியவில்லை. ஆனால் சிறிது நாட்கள் கழித்து நன்கு நடக்க ஆரம்பித்தது.
இப்பொழுது குருவி தன்னைச் சுற்றி நடக்கும் அநேக காரியங்களை கவனிக்க ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்ததினால் இலைகளுக்கு அடியில் இருக்கும் சிறுசிறு பூச்சிகள், உணவு கொண்டு சாரை சாரையாக செல்லும் எறும்புகள், அங்கங்கே கிடைத்த தானியங்கள், அழகிய மலர்கள், மலர்களை சுற்றி வட்டமிடும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பல பல காரியங்களை அது பார்த்து மகிழ்ந்தது.
நான் எப்பொழுதும் மேலே பறந்து கொண்டிருந்ததனால் இவை எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது இவைகளை நான் பார்த்து ரசிக்க கடவுள் கிருபை செய்துள்ளார் என்று அது எண்ணி மகிழ்ந்தது.
ஒரு நாள் இப்படியாக அது நடந்து நடந்து அழகிய காரியங்களை பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதனுடைய உடலில் ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தது. தன் இறக்கைகளை விரித்து பார்த்தது அந்த சிட்டுகுருவியால் இப்போது பறக்க முடிந்தது. இப்பொழுது இந்த குருவி பறப்பது மட்டுமல்ல நடந்தும் உலகத்தையும் காட்டையும் ரசித்துக் கொண்டிருக்கிறது.
நீதி: ஒருவேளை நம்முடைய வாழ்விலே ஒரு பிரச்சனை வரும்போது அதுவும் நன்மைக்காகவே என்று எண்ணிக் கொண்டு வேறு ஒரு வழியை நாம் தேடினால் நம்மை படைத்தவர் நமக்கு நிச்சயமாக ஒரு வழியை தருவார்.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment