keep trying until failure kneels before you.
முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.
இரண்டொழுக்க பண்புகள் :
1.கோபம் என் அறிவை மறைக்கும்.
2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.
பொன்மொழி :
எல்லா விஷயங்களையும் நன்மையானதாகவே பார்க்க மனதை பழக்குங்கள்- புத்தர்
பொது அறிவு :
01.தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம் - Villuppuram
2.காவிரியின் மிக நீளமான கிளை நதி எது?
அமராவதி ஆறு- Amaravathi River
English words :
terrible-extremely bad
jostle -to push
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
பட்டுப் புழுக்கள் மல்பெரி இலையிலிருந்து வரும் "சிஸ்ஜேஸ்மோன்'' எனப்படும் வாசனைப் பொருளை மோப்பம் பிடித்து வருகின்றன. அவை பிற உணவுப் பண்டங்களை சட்டை செய்யாதிருப்பதன் காரணம் இந்த வாசனைப் பொருள் அவற்றில் இல்லாததே. ஜெனட்டிக் தொழில் நூட்பம் மூலம் சிஸ் ஜேஸ்மோன் வாசனைப் பொருளை வேறு செடிகளுக்குப் பொருத்தி அவற்றையும் பட்டுப்புழுக்களுக்கு உகந்த ஆகாரமாக மாற்றலாம்.
நீதிக்கதை
மாற்றம்
ஒரு நாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என்று எழுதி இருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க, நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.
உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எழுதியிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது.
நீதி :
நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment