திருக்குறள் :
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புறங்கூறாமை
குறள் : 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
பொருள்:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெரியாதவர் , புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
பழமொழி :
Give every man thy ear,but few man
thy voice .
ஒவ்வொருவரிடமும் கேள், சிலரிடம் மட்டுமே சொல்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்
பொன்மொழி :
பொறுமையும் நேரமும் இரண்டு மிகவும் சக்திவாய்ந்த போர்வீரர்கள். --லியோ டால்ஸ்டாய்
பொது அறிவு :
1. இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை அறிமுகம் செய்தவர் யார்?
ஜவர்கலால் நேரு .
2. யோக கலையை கற்றுத் தந்தவர் யார் ?
பதஞ்சலி முனிவர்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
செர்ரி பழங்கள் உங்கள் நரம்புகளை அமைதி படுத்துகின்றன. அவற்றில் உள்ள மெலடோனின் உங்கள் உடலினுள் இயங்கப்படும் கடிகாரத்தை முறைபடுத்தி உங்களின் தூங்கும் மற்றும் துயிலெழும் நேரங்களை சரி செய்கிறது. இதன் மூலம் கிடைக்கும் நல்ல, அமைதியான, இடையூறு இல்லாத தூக்கம் போன்றவை இயற்கையாகவே சருமத்திற்கு பொலிவும், முதுமையில்லாத தன்மையும் அளிக்கின்றன. மேலும் செர்ரி பழங்கள் இதய ஆரோக்யத்தை மேம்படுத்தி, ஆரோக்ய கூந்தல் அளித்து, உடலின் இரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுகிறது.
கணினி யுகம்
Windows key + G : Open Game bar when a game is open.
நீதிக்கதை
தேவதைக் காட்டிய வழி
ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்.
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.
அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.
நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது.
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.
கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான்.
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment