திருக்குறள் :
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: வெஃகாமை
குறள் எண்: 173
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
பொருள்:
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்
பழமொழி :
Face the danger boldly than live with in fear
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.
2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்
பொன்மொழி :
வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.
பொது அறிவு :
1. இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்குவது எந்த நகரம் ?
மும்பை.
2. இருண்ட கண்டம் எனப்படுவது எது ?
ஆப்பிரிக்கா.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
இதய நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கம் போன்ற சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதோடு, உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த மூலிகையாக இருக்கும் கறிவேப்பிலையை மருத்துவரின் ஆலோசனை பெயரில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கணினி யுகம்
ஏப்ரல் 12
நீதிக்கதை
கதை :
ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது.
அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான்.
தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான்.
அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான்.
நீதி :
ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment