திருக்குறள் :
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புறங்கூறாமை
குறள் எண்: 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
பொருள்:
அறம் பேசும் மனித மனத்தின் தன்மையை புறம் பேசும் தன்மையால் கண்டு கொள்ளலாம்.
பழமொழி :
Tomorrow never comes
கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது
இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்
பொன்மொழி :
மனிதராகப் பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்கள், அதை தொடர்ந்து செய்கிறார்கள்.
பொது அறிவு :
1. எல்லா வகையான தவளைகளும் எந்த குடும்பத்தில் அடங்கும்?
ரானாடே.
2. பறவைகளின் தாடைகள் என்னவாக மாறுகின்றன?
அலகுகளாக .
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
அன்னாசி பழத்தில் பிரோமெலான் என்னும் நொதி (enzyme) உள்ளது. தொண்டை வலி, கீல் வாதத்தினால் உண்டாகும் வீக்கம் மற்றும் கட்டிகளை குறைக்க இந்த நொதி உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் அன்னாசி பழம் கீல்வாத நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
கணினி யுகம்
Windows key + A: Open Action Center.
ஏப்ரல் 25
உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.[1] மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.
2012 ஆம் ஆண்டில் அண்ணளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.
புதுமைப்பித்தன் அவர்களின் பிறந்தநாள்
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.
மார்க்கோனி அவர்களின் பிறந்தநாள்
மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.
நீதிக்கதை
நீங்கள் தான் கடவுள்
ஒரு ஊரில் கணவனை இழந்த சீதா என்று ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை. அவள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவளால் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலை. எனவே குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்துவிட்டு, இவள் தினமும் வேலைக்குச் செல்வாள்.
இப்படி இருக்க ஒருநாள் மாலை நேரம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி தொலைப்பேசியில் அழைத்து குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறினாள். அலுவலகத்தில் இருந்து கிளம்பி மருந்து வாங்க மருந்துக் கடைக்கு சென்றாள். மருந்து வாங்கிவிட்டு தனது மகிழுந்திடம் வந்தாள். மகிழுந்தின் சாவியை உள்ளேயே வைத்து பூட்டியதை உணர்ந்தாள்.
என்ன செய்வது எனத் தெரியவில்லை. வீட்டில் இருந்து வேலைக்காரி மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகிறது என்று கூறினாள். சீதாவிற்குக் கண்கள் கலங்கின. இறைவா... எனக்கு உதவி செய் எனக் கடவுளிடம் கண்ணீர் வர வேண்டினாள். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் ஒருவர் நீண்ட முடியும் தாடியும் வைத்துக்கொண்டு பல நாள் குளிக்காத ஒரு முரடன் போல வந்து சேர்ந்தார்.
சீதா கடவுளே... இது தான் நீ செய்த உதவியா...? என்று மனதில் நினைத்துக்கொண்டு வந்தவரிடம் வண்டியின் சாவி உள்ளே மாட்டிக்கொண்டது எனக் கூறினாள். வந்தவர் சீதாவிடம் தான் உதவி செய்வேன் என்று கூறி ஒரு நிமிடத்தில் மகிழுந்தின் கதவை திறந்து கொடுத்தார். சீதா நன்றி கூறி நீங்கள் தான் கடவுள் என்று கூறினாள். அதற்கு அவர் இல்லை.... நான் நேற்று தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரு மகிழுந்து திருடன்... ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து நேற்று தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.
சீதா மகிழ்ச்சியுடன் நான் கடவுளிடம் உதவிக் கேட்டேன். அதற்கு அவர் ஒரு வல்லுநரை அனுப்பி வைத்துள்ளார் என்று கூறி நன்றியுடன் விடை பெற்றார். அவர் செய்த சிறிய உதவியின் அளவை உணர்ந்தார்
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment