திருக்குறள் :
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: வெஃகாமை
குறள் எண்: 175
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
பொருள்:
கலைஞர் உரை :
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
பழமொழி :
Accept if the counsel be good no matter who gave it.
அறிவுரை நல்லதாய் இருப்பின் யாராயினும் கேள் .
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன்.
2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.
பொன்மொழி :
மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.
பொது அறிவு :
1. தமிழர்கள் அதிகமாக வாழும் தென்னாப்பிரிக்க நகரம் எது?
டர்பன் .
2. உலகிலேயே மிகவும் ஆழமான ஏரி எது?
பைகால்.
English words & meanings :
நீதிக்கதை
கதை :
கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.
ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.
மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.
இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.
ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.
மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.
நீதி :
பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment