நாம் அடிக்கடி சொல்லுவோம் நடுக்கடலில நிக்கிற மாதிரி இருக்கு நடுக்காட்டில் நிக்கிறேன் என்று....ஆனால் அதை நம்மால் கற்பனை பண்ணி பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் எர்னஸ்ட்ஹெமிங்வே.......அவருடைய நாவல்தான் 'The old man and the sea' "கிழவனும் கடலும்"..... ஒரு ஏழை கிழவன்.... மீன் பிடிக்கும் தொழிலில் கைதேர்ந்தவன் கடலின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவன் இப்படியான ஒரு கிழவன் மீன்பிடிக்கச் சென்று, இரவில் நடுகடலில் தனியாக நிற்கும் அந்த காட்சி வாசிக்கும்போது அப்படியே நம் மணக்கண்முன் வந்து நிற்கும்...... கடைசியில் கிடைக்கும் ஒரு பெரிய மீன்.... இரவு முழுவதும் பல போராட்டங்களை கடந்து கரை வந்து சேரும்போது வெறும் எலும்பு மட்டுமே மிச்சம்...... அந்த எலும்பை பார்த்த மற்றவர்களுக்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது..... ஆனால் போராட்டத்தை தனியாக எதிர்கொண்ட அந்த கிழவன் வழக்கம்போல தனது இயல்பு நிலையிலேயே இருப்பான்....
வாழ்க்கையினை எப்படி வாழ வேண்டும் என இந்த கிழவன் வாழ்ந்து காட்டியிருப்பார்.... விடாமுயற்சி தன்னம்பிக்கை செயலில் உறுதி எப்பொழுதும் இயல்பாக இருத்தல் பெருமை இல்லாமலிருப்பது என வாழ்க்கைக்கு தேவையான பல குணாதிசயங்களில் இவர் வெளிப்படுத்தியிருப்பார்.
வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பநற்காகதான் நம் 6-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்திலும் இக்கதை இடம்பெற்றுள்ளது.....
வாழ்க்கையை படிப்போம்
இந்தக் கிழவனைப்போல் வாழ்வோம்...
பதிவு
இ.அனிதா
ஆசிரியை
கோயம்புத்தூர்
இந்த புத்தகத்தின் PDF ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1L8nYXDPB2aLL53tABfUbIxpw50avuOzH/view?usp=drivesdk

No comments:
Post a Comment