Thursday, April 23, 2020

புத்தகம் 2 - ஆயிஷா

*ஆயிஷா*

இது  ஒரு குறு நாவல், ஆனால் இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் நம் மனதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.

ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.

துறுதுறு பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா. கேள்விகளால் ஆன ஆயிஷா. விடைகளை மட்டுமே எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு கேள்விகளால் ஆன ஆயிஷா பிரச்சினை ஆகிறாள். இந்த கதை சொல்லும் ஆசிரியைக்கும் அப்படியே.

ஆனாலும் ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.

சின்னச் சின்ன கேள்விகளால் ஆயிஷா தன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறாள்.

இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.

பதிவு
பழனிமுத்து ஆசிரியை
காரமடை ஒன்றியம்

இந்த புத்தகத்தை PDF ஆக பதிவிறக்க

https://drive.google.com/file/d/1VxhVm19eOzsWHiW9L88y_xa-jHNioURm/view?usp=drivesdk

No comments:

Post a Comment