Tuesday, March 5, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.03.2024

  

 வாலண்டீனா தெரஸ்கோவா




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

விளக்கம்:

பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

பழமொழி :

One lie makes many

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.


பொன்மொழி :

மனம் நிறைந்த அன்புடன்
செய்யப்படும் ஒவ்வொரு
செயலும் சந்தோசத்தை
கொண்டு வந்தே தீரும்.

பொது அறிவு : 

1. உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது எது?

விடை: ரேடியம் 

2. முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?

விடை: காய்சின வழுதி

English words & meanings :

 Legible.       தெளிவான 
Semifinal.    அரையிறுதி
Punishment தண்டனை
Hitch            முடிச்சு, தடை
Corporeal    உடல்வருத்தும் தண்டனை

ஆரோக்ய வாழ்வு : 

புதினா கீரை : வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய பெரியவர்களுக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி  கிடைக்கும்.

மார்ச் 06


வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா என்பவர் சோவியத் ஒன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வசுத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.

1961ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வலண்டீனா தெரெசுக்கோவா தெரிவு செய்யப்பட்டார்.

சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார்.[5] ‘சோவியத் ஒன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’என பல்வேறு விருதுகள் குவிந்தன.

நீதிக்கதை

 கைமாறிய வாழைப்பழம்

ஒரு சிறுவனுக்கு வாழைப்பழம் ஒன்று கிடைத்தது. தெரிந்தவர் அவனுக்கு அளித்து, 'சாப்பிடு' என்று கொடுத்தார். சிறுவன் பழத்தை வாங்கிக் கொண்டான். பழத்தைத் தொட்டுப் பார்த்ததுமே சற்று 'கொழ கொழ' வென்று இருந்ததால், அதை அவன் சாப்பிட விரும்பவில்லை.

அந்தப் பழத்தை, அப்பாவிடம் கொடுத்தான். "நீ சாப்பிடு, உனக்குத்தானே கொடுத்தார்.?" என்றார் அவனுடைய அப்பா.

"எனக்கு இப்பொழுது வேண்டாம். நீங்கள் சாப்பிடுங்கள்" என்றான் சிறுவன்.

சிறுவனின் தந்தை பழத்தைப் பார்த்தார். பழம் சாப்பிடும் படியான நிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார். மனைவியை அழைத்தார்.

"இந்தப் பழத்தைச் சாப்பிடு. நானே சாப்பிடுவேன். ஆனால் எனக்கு பசியில்லை" என்று கூறி மனைவிக்கு அப்பழத்தை தானம் செய்தார்.

மனைவி பழத்தைச் சாப்பிடலாம் என்று தான் கையில் வாங்கிக் கொண்டாள். வாங்கிய பிறகுதான் பழம் மிகவும் பழுத்துவிட்டது என்பதை அறிந்தாள். தோலை உரித்துப் பார்த்தால் ஒரு வேளை அது அழுகிய பழமாகவும் இருக்கக் கூடும் என்று எண்ணினாள். அதனால் அவள் அப்பழத்தை உரிக்காமலே, இதை யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்தாள். அப்போது வீட்டு வேலை செய்யும் வேலைக்காரப் பெண் வந்தாள்.

"வேலாயி, இங்க வா, ரொம்ப களைப்பா இருக்கிறாயே, இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு" என்று கையில் இருந்த வாழைப்பழத்தை அவளிடம் தந்தாள்.

பழத்தைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரி, அதைத்தின்ன முடியாது என்பதை அறிந்து கொண்டாள். எஜமானி கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லத் தயக்கமாக இருந்ததால் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.

பிறகு வாசல்பக்கம் சென்றாள். பழத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் வாசற்பக்கம் வேலாயி வந்தாள். அப்போது தெருவில் பால்காரன் பசுமாட்டுடன் சென்றதைப் பார்த்தாள்.

அழுகிய பழத்தைத் தின்னமுடியாமல் தூக்கிப் போடுவதை விடவும், பசுவுக்கு அளித்தால் புண்ணியம் கிடைக்குமே என்று நினைத்தாள். பழத்தைக் கொண்டு போய் பால்காரனிடம் கொடுத்து, "பசுவுக்கு இதைக் கொடுத்துவிடு" என்றாள்.

பால்காரன் பழத்தை வாங்கினான். “ஏம்மா, அழுகிய இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் பசுவுக்கு ஒத்துக்கொள்ளாது” என்று கூறி குப்பைத் தொட்டியில் விட்டெறிந்தான்.

பழம் நல்ல நிலையில் இருந்தால் சிறுவனே அதைச் சாப்பிட்டிருப்பான். நன்றாக இல்லை என்று தெரிந்ததால் தான் சிறுவன் அப்பாவுக்கும், அப்பா அம்மாவுக்கும், அம்மா வேலைக்காரிக்கும், வேலைக்காரி பசுவுக்கும் தானம் செய்தார்கள்.

தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று தோன்றியதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.03.2024

*மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்- சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

*இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.

*"தமிழகத்தில் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்"-
வானிலை மையம் அறிக்கை.

*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கியது.

*முத்தரப்பு டி20 தொடர் சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து.

Today's Headlines

*CCTV cameras should be installed in drug stores- Chennai District Collector orders.

 *Indian Embassy advises Indians in Israel to be safe.

 *"Temperature in Tamilnadu to increase by three degree Celsius"-
 Meteorological Department report.

 *Madurai AIIMS Hospital construction work started.

 *Netherlands won Tri-T20 Series Champions.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, March 4, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2024

   

பசால்ட் & கிரானைட் பாறைகள்




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

விளக்கம்:

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

பழமொழி :

One good turn deserves another.

உப்பிட்ட வரை உள்ளளவும் நினை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.


பொன்மொழி :

நேரத்தை வீணாக
தள்ளிப்போடாதே..
தாமதங்கள் அபாயகரமான
முடிவை தரக் கூடியவை

பொது அறிவு : 

1. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?

விடை: கால்சியம் பாஸ்பேட்


2. பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகை பாறையை சார்ந்தது?

விடை: தீப்பாறை 

English words & meanings :

 Multilingual - using more than one language பலமொழிப்புலமை
Moans(v)- grieves புலம்பல்

ஆரோக்ய வாழ்வு : 

புதினா கீரை: பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீதிக்கதை

 புற்றும் பாம்பும்


இரண்டு பேர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் பேசிக் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அடர்ந்த புதர்களும் பாம்புப் புற்றுகளும் இருந்தன.

"அதோ பாம்புப் புற்று தெரிகிறது. நாம் அதைச் சுற்றிக் கொண்டு சற்று தள்ளியே போகலாம், வா" என்று ஒருவன் கூறினான்.

ஆனால் மற்றவனோ, "அது பாம்புப் புற்றுதான். ஆனால் பாம்பு இருக்கிறதா, இல்லையா என்றே தெரியாது. நாம் எதற்காக பயந்து சுற்றிக்

கொண்டு போக வேண்டும். வா,வா,புற்றின்

அருகிலேயே செல்லலாம்" என்றான்.

முதலில் கூறியவனோ, "நான் சுற்றிக் கொண்டு தான் போகப் போகிறேன்" என்று உறுதியாகக் கூறினான். அவ்வாறே பாம்புப் புற்று இருக்கும் இடத்துக்கு சற்று தொலைவாகவே சென்றான். மற்றொருவனோ, "சுத்த பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாயே" என்று கூறி நகைத்துவிட்டு பாம்புப் புற்றுக்கு அருகிலேயே சென்றான். அப்போது அவனுடைய காலடி பட்டு புற்று மண் சரிந்தது. மண் சரிந்து புற்று வாயில் விழுந்ததும், புற்றுக் குள்ளிருந்த நாகப்பாம்பு சீறிக் கொண்டு வெளியில் வந்தது.

புற்றை மிதித்தவன் பாம்பைக் கண்டதும் அரண்டு போனான். "பாம்பு, பாம்பு" என்று அலறியபடியே, தன்னுடன் வந்த நண்பனை நோக்கி விரைந்து ஓடினான்.

மூச்சிரைக்க ஓடி வந்தவனுக்கு நண்பன் குடிக்க தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்தான்.

"நண்பா, நீ முன்யோசனையுடன் கூறியதை ஏற்றுக் கொள்ளாமல், நான் நடந்து கொண்டேன். என்னை மன்னித்துக் கொள்" என்றான்.

"புற்று என்றால் பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். அதுபோல்தான் பெரியவர்கள் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று கூறுவதும். அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கும். பெரியவர்கள் சொல்வதை நாம் மதித்து நடந்தால் அதனால் நமக்கு நல்லதே விளையும்” என்றான் நண்பன்.

"சரியாகச் சொன்னாய்" என்று ஆமோதித் தான் இவன் "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது இது போன்ற சம்பவங்களைப் பிரதிபலிப்பதுதான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.03.2024


*போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் 6 ஆம்  தேதி பேச்சுவார்த்தை.

*கலைஞர் அருங்காட்சியகத்தில் இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி.

*பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம்- தமிழ்நாட்டை பின்பற்றும் டெல்லி.

*'நீங்கள் நலமா' புதிய திட்டம்  6 ஆம் தேதி தொடக்கம் - முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

*ரஞ்சித் கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை.

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக களம் இறங்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Today's Headlines

*Negotiations with transport unions on 6th.

 * Public is allowed to visit the Kalaingar  museum from today.

 *Scheme to provide ₹1000 per month to women- Delhi is  following Tamil Nadu.

 * 'Neengal nalama' new program launched on 6th - CM M K Stalin's announcement.

 *Ranjith Cup Cricket: Mumbai beat Tamil Nadu and reached the final.

 *Fans are waiting for Mahendra Singh Dhoni to become the captain of Chennai Super Kings.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, March 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2024

   

புதினா கீரை




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

விளக்கம்:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

பழமொழி :

One doth the act, another hath the blow

பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.


பொன்மொழி :

ஒருவனின் தெளிவான
குறிக்கோளே.. வெற்றியின்
முதல் ஆரம்பம்.

பொது அறிவு : 

1. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?

விடை: ஆள்பர்சேலின்

2. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?

விடை: காரி

English words & meanings :

 Lament - mourn;புலம்புகின்ற.              Lenient- mild and tolerant disposition or effect; கருணை.

ஆரோக்ய வாழ்வு : 

புதினா கீரை :
புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் 'மென்தால்' என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது.புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை  குறையும். 

மார்ச் 04

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.[1] தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 பொன் முட்டை

ஒரு ஊரில் ஒரு ஏழைத் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் சற்று பேராசை பிடித்தவன். அவன் ஒரு வாத்து வைத்திருந்தான். அவனுடைய அதிருஷ்டம் தினமும் காலையில் எழுந்தவுடன் தவறாமல் ஒரு பொன் முட்டை அளித்துவிடும்.

அந்தத் தொழிலாளி பொறுமையை இழந்தான். இந்த வாத்தின் வயிற்றில் முட்டைகள் நிறைய இருக்கின்றன போல் தெரிகிறது. அதனை ஒவ்வொன்றாக தினமும் நமக்குக் கொடுக்கிறது. ஏன் அப்படிச் செய்கிறது என்று தெரியவில்லை. என்னால் பொறுக்க முடியவில்லை, அதன் வயிற்றிலிருந்து எல்லாப் பொன் முட்டைகளையும் எடுத்து கடைக்குப்போய் விற்று நாம் சீக்கிரமே பணக்காரனாக ஆகி விடலாம். இதை இப்போதே செய்துவிடவேண்டும் என்று நினைத்தான் அந்த முட்டாள் தொழிலாளி.

நல்ல நாள் பார்த்துத்தான் இந்த வாத்தின் வயிற்றை அறுக்க வேண்டும் அப்பொழுதுதான் நமக்கு நிறைய பொன் முட்டைகள் கிடைக்கும் என்று நினைத்தான்.ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்தான். வாத்தை கட்டிப்போட்டான். அதனை குப்புறப்படுக்கவிட்டு அதன் வயிற்றை அறுத்தான். அந்தோ பரிதாபம் அது வீறிட்டு இறந்தது. அதன் வயிற்றில் ஒரு தங்க முட்டைதான் இருந்தது. கையை விட்டுப்பார்த்தான், எதுவும் கிடைக்கவில்லை.

"ஆஹா! நான் ஏமாந்துவிட்டேனே! தினமும் தவறாமல் எனக்கு ஒவ்வொரு பொன் முட்டையாகத் தந்த இந்த வாத்தை நானே கொன்றுவிட்டேனே! பேராசை பெரு நஷ்டமாகி விட்டதே " என்று தலையிலும் வாயிலும் அடித்துக் கொண்டு புலம்பினான்.

அவன் புலம்பினதால் வாத்து உயிர் பெற்றுவிடுமா? இருப்பதைக் கொண்டு நலமாக வாழ்வது நன்மை பயக்கும்.

இன்றைய செய்திகள்

04.03.2024

* இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமர் ஆகிறார் - ஷெபாஸ் ஷரீப்.

*மார்ச் 10ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

*பிரதமர் மோடி மீண்டும் இன்று தமிழகம் வருகிறார். இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

*ரஞ்சித் கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாட்டிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் சதம் விளாசினார் -
ஷர்துல் தாக்கூர்.

*20 கல்லூரிகள் பங்கேற்கும் தென்னிந்திய கால்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்.

Today's Headlines

* Shebaz sharif becomes Prime   Minister of Pakistan for the second time
 

 * Agricultural organizations have announced that there will be a nationwide rail strike on March 10.

 *Prime Minister Modi is again coming to Tamil Nadu today.  This time he is going to address the grand election campaign public meeting in Chennai.

 *In Ranjith Cup cricket Shardul Thakur scored a century in the semi-final against Tamil Nadu .

 *South Indian football tournament  starts today in Chennai and 20 colleges will be participated in this tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்