பசால்ட் & கிரானைட் பாறைகள் |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள்:370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
விளக்கம்:
ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
One good turn deserves another.
உப்பிட்ட வரை உள்ளளவும் நினை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.
பொன்மொழி :
நேரத்தை வீணாக
தள்ளிப்போடாதே..
தாமதங்கள் அபாயகரமான
முடிவை தரக் கூடியவை
பொது அறிவு :
1. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?
2. பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகை பாறையை சார்ந்தது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
புதினா கீரை: பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
நீதிக்கதை
புற்றும் பாம்பும்
இரண்டு பேர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் பேசிக் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அடர்ந்த புதர்களும் பாம்புப் புற்றுகளும் இருந்தன.
"அதோ பாம்புப் புற்று தெரிகிறது. நாம் அதைச் சுற்றிக் கொண்டு சற்று தள்ளியே போகலாம், வா" என்று ஒருவன் கூறினான்.
ஆனால் மற்றவனோ, "அது பாம்புப் புற்றுதான். ஆனால் பாம்பு இருக்கிறதா, இல்லையா என்றே தெரியாது. நாம் எதற்காக பயந்து சுற்றிக்
கொண்டு போக வேண்டும். வா,வா,புற்றின்
அருகிலேயே செல்லலாம்" என்றான்.
முதலில் கூறியவனோ, "நான் சுற்றிக் கொண்டு தான் போகப் போகிறேன்" என்று உறுதியாகக் கூறினான். அவ்வாறே பாம்புப் புற்று இருக்கும் இடத்துக்கு சற்று தொலைவாகவே சென்றான். மற்றொருவனோ, "சுத்த பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாயே" என்று கூறி நகைத்துவிட்டு பாம்புப் புற்றுக்கு அருகிலேயே சென்றான். அப்போது அவனுடைய காலடி பட்டு புற்று மண் சரிந்தது. மண் சரிந்து புற்று வாயில் விழுந்ததும், புற்றுக் குள்ளிருந்த நாகப்பாம்பு சீறிக் கொண்டு வெளியில் வந்தது.
புற்றை மிதித்தவன் பாம்பைக் கண்டதும் அரண்டு போனான். "பாம்பு, பாம்பு" என்று அலறியபடியே, தன்னுடன் வந்த நண்பனை நோக்கி விரைந்து ஓடினான்.
மூச்சிரைக்க ஓடி வந்தவனுக்கு நண்பன் குடிக்க தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்தான்.
"நண்பா, நீ முன்யோசனையுடன் கூறியதை ஏற்றுக் கொள்ளாமல், நான் நடந்து கொண்டேன். என்னை மன்னித்துக் கொள்" என்றான்.
"புற்று என்றால் பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். அதுபோல்தான் பெரியவர்கள் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று கூறுவதும். அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கும். பெரியவர்கள் சொல்வதை நாம் மதித்து நடந்தால் அதனால் நமக்கு நல்லதே விளையும்” என்றான் நண்பன்.
"சரியாகச் சொன்னாய்" என்று ஆமோதித் தான் இவன் "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது இது போன்ற சம்பவங்களைப் பிரதிபலிப்பதுதான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment