Wednesday, March 20, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.03.2024

   

உலக காடுகள் தினம்




திருக்குறள்: 

 பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

விளக்கம்:

போர்ப்படை, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும் பெற்றவரே அரசருள் சிறந்தவர்.

பழமொழி :

Reason rules the world

அறிவே உலகை ஆள்கிறது

இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

உடல் உழைப்பு உடலைப் பலப்படுத்துவதைப் போலவே, சோதனைகளும் மனதைப் பலப்படுத்துகின்றன. --செனிக்கா

பொது அறிவு : 

1. எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?

விடை: கேரளா 

2. தமிழ் மகள் என்று அழைக்கப்படுபவர் யார்?

 ஔவையார்.

English words & meanings :

 Waddle - walk like a duck வாத்து போல நடத்தல்
Wager - to bet பந்தயம் கட்டுதல்

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை: பித்தப்பை கோளாறு, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கல் பிரச்னை போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் காசினிக் கீரை பொடியை காலைநேரத்தில் குடித்துவந்தால், நீரிழிவு கட்டுப்படும்

மார்ச் 21

பன்னாட்டு வன நாள் (International Day of Forests

பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.


உலகக் கவிதை நாள் (World Poetry Day

உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) 


உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.

எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

 ஆறு பேர் நண்பர்கள் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவினைக் காண இரவில் வழிநடந்து சென்றார்கள். செல்லும் வழியில் பெரிய ஆற்றைக்கடந்து செல்லவேண்டியிருந்தது. அவர்களில் ஒருவன் இரவில் ஆறு தூங்கும் என்று சொல்வார்கள்; ஆறு, தூங்குதா? விழித்திருக்கிறதா? என்று பார்த்து இறங்கவேண்டும் என்றான். மற்றவர்களும் அதுவே சரி என்றார்கள். சோதனை பார்ப்பதற்காக, வழிப்போக்கர்கள் சமைத்துக் கரையில் போட்டுப்போன கொள்ளிக் கட்டையை எடுத்து ஆற்றில் நனைத்தார்கள். நனைத்ததும் "சுரீர்” என்ற சத்தம் கேட்டது . ஆறு விழித்துக்கொண்டிருக்கிறது. "போகலாம்" என்று ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அறுவரும் மறுகரையை அடைந்தனர்.

அடைந்து சரியாய் வந்து சேர்ந்தோமா? என்று எண்ணிப் பார்க்கவேண்டும் என்று ஒருவன் சொன்னான். அவ்விதம் ஒவ்வொருவரும் தன்னை விட்டு எண்ண ஐந்துபேர்கள் வந்தோம். "ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது" என்று பொழுது விடியுமளவும் புலம்பிக்கொண்டே இருந்தார்கள். அவ்வழியே ஒரு வழிப்போக்கன் வந்தான். ஏன் அழுகிறீர்கள்? என்றான். அப்போது அவர்கள் நாங்கள், "ஊரில் இருந்து அறுவர் வந்தோம். ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது. ஐந்து பேர் இருகிறோம். ஒருவரை இழந்தோமே” என்று அழுகிறோம்'' என்றார்கள். வழிப்போக்கன் பார்த்து, "இவர்கள் தனக்கும் பிறர்க்கும் உதவி இல்லாமல் இருக்கும் உவர் நிலத்திற்கு ஒப்பாவர் என நினைத்தார்.ஒவ்வொருவரையும் தனி தனியாக நிற்க வைத்து அனைவரும் இருப்பதை கூறினார்.பிறகு அவர்கள்

காணாத ஒருவனை கண்டறிந்து கொடுத்த அவனை வணங்கினார்கள். அவன் நீங்கள் சென்று கல்வி கற்றுக்கொள்ளுங்கள். அதன் பின் வெளியூர் செல்லலாம் என்று ஊர் செல்லச் செய்தான். வள்ளுவரும், கல்லாதவர், உலகில் எண்ணப்படும் மக்கள் கணக்கினைப் பெருக்க வாழ்கிறார்கள்.   உதவி

செய்யாத உவர் நிலத்திற்கு ஒப்பாக இவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

இன்றைய செய்திகள்

21.03.2024

*உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது.

*உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் டெல்லி; கெஜ்ரிவாலுக்கு கவர்னர் கடிதம்.

*கேரளாவில் முதன் முதலாக வாக்களிக்க காத்திருக்கும் 2,88,533 இளைஞர்கள்.

*ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் ரூபாய் 1229.85 கோடி வருவாய் ஈட்டிய ரயில்வே துறை.

*மியாமி ஓப்பன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி.

Today's Headlines

*Finland tops the world's happiest country list for the seventh year in a row.

*Delhi is the most polluted capital of the world; Governor's letter to Kejriwal.

*2,88,533 youth waiting to vote for the first time in Kerala.

*Railway Department earned Rs 1229.85 crore from canceled tickets.

*Miami Open Tennis: India's Sumit Nagal lost in qualifying round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

 

No comments:

Post a Comment