Friday, September 10, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.09.21

 திருக்குறள் :

அதிகாரம் - 4 அறன் வலியுறுத்தல் 

குறள்: குறள் : 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல் . 

பொருள்:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

பழமொழி :

Give and spend and God will send

இட்டார்க்கு இட்ட பலன்


இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன. 

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

வேறு பிறவி என்பது கிடையாது.உண்மையில் பிறப்பும் இறப்பும் ஒன்றெனக் கொண்டால் நன்மையை மட்டுமே நினைக்கத்தூண்டும்.
________ ரமண மகரிஷி

பொது அறிவு :


1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?

வேளாண்மை 


2. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம் ______

பெங்களூர்




English words & meanings :


Convince - cause (someone) to believe firmly in the truth of something.


Allocate - distribute (resources or duties) for a particular purpose.


ஆரோக்ய வாழ்வு :


* சிவப்பு வண்ண வெண்டைக்காயை உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் தான் பல வருட ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த ஆய்வு, 1995-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வந்தது.

* சிவப்பு நிற வெண்டைக்காயை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இந்த வெண்டைக்காய் மிகவும் உதவுகிறது. 


கணினி யுகம் :

Ctrl + A -- Select all contents of the page.

Ctrl + B -- Bold highlighted selection.


செப்டம்பர் 11 :

* மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுநாள்   




சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2] கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

* இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாள்




இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 11, 1957)[1] ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர்.[2] தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.[2] மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
நீதிக்கதை

தானத்தில் சிறந்தவன் கர்ணன்

பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லோரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார். 

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத்தர, தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப்பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் தருமர். 

உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோபார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்கமலை. மற்றொன்று வெள்ளிமலை. இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப்பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? என்று கேட்டார். உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்துவிட்டுக் கிளம்பினான். 

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசுதான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக்காட்டிலும் தான, தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.

இன்றைய செய்திகள்

11.09.21

★பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்' என அழைக்கப்படும், பாரதியார் நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வரின் 14 அறிவிப்புகள்.

★கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

★வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுஏள்ளது.

★ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்.

★கரோனா பாதிப்பு எதிரொலி; 5-வது டெஸ்ட் போட்டி ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

★ஆப்கானிஸ்தான் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கவும், குறிப்பாக கிரிக்கெட் விளையாடவும் தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர்.


Today's Headlines


★ Bharathiyar Memorial Day will henceforth be known as 'Mahakavi Day', 14 Chief Minister's Announcements on the occasion of Bharathiyar Centenary

 ★ Radhakrishnan, Principal Secretary, Department of Medical and Public Welfare, has advised the District Collectors to increase corona testing.

 ★ The deadline for filing income tax has been extended to December 31.

 ★ Taliban brutal attack on journalists covering Afghanistan.

 ★ Due to Corona impact echo, the 5th Test was Cancelled which was announced by England Cricket Board 

 ★ Taliban militants have banned Afghan women from participating in sports, especially cricket.




Prepared by
Covai women ICT_போதிமரம்

Wednesday, September 8, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.09.21

 திருக்குறள் :

அதிகாரம்-3 நீத்தார் பெருமை 

குறள்-28: 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். பொருள்: சான்றோர்களின் பெருமையை இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்.

பழமொழி :

Do well what you have to do. செய்வன திருந்தச் செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன. 

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

மனம் ,உடல்,செயல் ஆகிய மூன்று நிலைகளிலும் தூய்மையைக் கடைபிடிப்பவரே தொண்டுள்ளம் கொண்டவராகிறார்.
------காந்தியடிகள்


பொது அறிவு :

1.உலகில் பிளாஸ்டிக் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 

ஜெர்மன்.

 2."இசைக் கருவிகளின் ராணி "என அழைக்கப்படுவது எது? 

வயலின்.



English words & meanings :

* Broigus - angry,irritated.

* Athleisure - casual clothing



ஆரோக்ய வாழ்வு :

1)கொரோனா காலகட்டத்தில் மனித உடலுக்கு அதிகம் தேவைப்படும் வைட்டமின் D யானது மீனில் அதிகம் உள்ளது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். மூளை வளர்ச்சியை அதிகரிக்கவும் கண்பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது.


2)காளானிலும் வைட்டமின் D அதிகம் உள்ளது.இது சூரிய ஒளியில் வளர்வதால் வைட்டமின் D, B1, B2, B3, காப்பர் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன.மேலும் இதயநோய் , புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.



கணினி யுகம் :


Ctrl+ V - Paste , 

Ctrl+ P - Print

செப்டம்பர் 9 :





1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் அவர்களின் பிறந்தநாள்

35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.


நீதிக்கதை

குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு அப்பத்தை எடுத்தது. அந்த அப்பத்தை இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. பின் யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன. 

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசில் அப்பத்தை இரண்டாக வெட்டி ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்திப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத்விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்துவிட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. 

அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இதுவரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் ஏமாந்து கவலையுடன் திரும்பிச் சென்றன. 

நீதி :
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பல நஷ்டங்களை தவிர்க்கலாம்.


இன்றைய செய்திகள்

09.09.21

◆ வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க மேலும் 4 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் அறிவிப்பு.

◆ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேறியது.

◆ கரோனா தொற்றைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.

◆ காற்றை சுத்திகரிக்கும் நாட்டின் முதல் பனிப்புகை கோபுரம் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.

◆ மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

◆ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா டாப்10 வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

◆ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு.



Today's Headlines

🌸  Tamilnadu chief minister announced for the opening of four new courts for the hearing of prevention of atrocities Cases

🌸   The resolution seeking the repeal of the Citizenship Amendment Act was passed in the Legislative Assembly.

 🌸Health Minister informed that  tests will be conducted in cycle for students and teachers in all schools to prevent corona infection.

 🌸The country's first air purifier tower has been opened in Delhi.

 🌸A powerful earthquake shakes Mexico.  The quake measured 7.1 on the Richter scale.

 🌸Indian bowler Bumra has been ranked  top 10  in the bowlers ranking  released by International Cricket   Council.

🌸 Indian team led by Viswanathan Anand participates in the Online Chess Olympiad competition



Prepared by
Covai women ICT_போதிமரம்

Tuesday, September 7, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.09.21

 திருக்குறள் :

அதிகாரம்:வான்சிறப்பு

திருக்குறள்:11

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

விளக்கம்:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

பழமொழி :

ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது

BEND THE TWIG BEND THE TREE

இரண்டொழுக்க பண்புகள் :

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன. 

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய்.நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் அவ்வாறே ஆகிவிடுவாய்.நீ உன்னை வலிமை உடையவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிவிடுவாய்.

---- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :


1.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது? 

கங்கை நதி.

2.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

பி.டி. உஷா.


English words & meanings :

1. Sit on the fence - delay in making a decision when you have to choose between two of your favorite sides

2. Heart in the mouth - very nervous.


ஆரோக்ய வாழ்வு :

 1) பப்பாளிப் பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பற்கள், எலும்புகள் வலிமை அடையும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


2)பப்பாளியில் விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி இருப்பதால் இரத்தத்தில் நோய் கிருமிகளை தங்கவிடாமல் உடலைப் பாதுகாக்கும்.


3)டெங்குவை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது பப்பாளி.

கணினி யுகம் :

Ctrl + S - Save

Ctrl + C - Copy



செப்டம்பர் 8 


* தேசிய கண் கொடை நாள் (National Eye Donation Day)

        👀 உலகிலேயே இலங்கை கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.


* அனைத்துலக எழுத்தறிவு நாள்  ( International literacy day)




        📚  இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.


நீதிக்கதை

எல்லாம் நன்மைக்கே

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்துவிட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். 

வழக்கம்போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே! அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன. 

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். 

அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான். 

அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர். 

நீதி :
எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.


இன்றைய செய்திகள்

08.09.21

★ தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

★மின் உற்பத்தி திட்டத்துக்கு ஆலோசனை பெற மத்திய அரசு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்.

★2021-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. 

★உலக நாடுகளில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

★50 ஆண்டுகளுக்குப்பின் ஓவலில் இந்தியா வரலாற்று வெற்றி: ரிவர்ஸ் ஸ்விங்கில் படம் காட்டிய பும்ரா; உமேஷ், ஜடேஜா, தாக்கூர் அபாரம்.


Today's Headlines


  🌺 The Chennai metrology department announced that there may be a mild shower of rain for 5 days.


  🌺 To get advice/council for the power generation there is a treaty signed with a central government organization           in the presence of CM.


  🌺  For the 2021 NEET for UG medical entrance exam the hall tickets are published.


  🌺  First time in the World Cuba started vaccination for kids.


   🌺   After 50 years India won a historical victory at the Oval against England. Pumra, Umesh, Jadesha and        Takkur rocks in the field


Prepared by
Covai women ICT_போதிமரம்

Sunday, January 3, 2021

MICE TEST - 04.01.2021

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:184*


1.தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் யார்?


 a) நீதிபதி.மீனாகுமாரி

b) நீதிபதி.துரை சந்திரன்

c)நீதிபதி.எஸ்.பாஸ்கரன்

d) நீதிபதி.வினீத் கோத்தாரி


2. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன.பின்வரும் எந்த நாடு அதில் இல்லை?

a)இந்தியா

b)சீனா

c)ரஷ்யா

d)பிரிட்டன்

e)அமெரிக்கா

f)பிரான்ஸ்


3.மலேசியாவின் தேசிய நலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தேர்வாகியுள்ள நூல் எது?

a)காவல் கோட்டம்

b) பொன்னியன் செல்வன்

c) மூன்றாம் உலகப் போர்

d)வேள்பாரி


4.செப்டம்பர் 2021வரை 7 இடங்களில் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதில் பின்வரும் எந்த இடங்கள்  இல்லை?


a)கீழடி,ஆதிச்ச நல்லூர்,சிவகளை

b)கொடுமணல்,மயிலாடும் பாறை

c)உத்திரமேரூர்,மேலூர்

d)கொற்கை,கங்கை கொண்ட சோழபுரம்


5.மஹாராஷ்ட்ராவில் எந்த நகரின் பெயர் சம்பாஜி நகர்

என மாற்றம் செய்யப்பட உள்ளது?


a) அகமத்நகர்

b)அமராவதி

c)சிவாஜி நகர்

d)ஔரங்காபாத்


6.பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்

Pompeii  என்ற இடம் எங்குள்ளது?


a.இத்தாலி

b.பிரான்ஸ்

c.ஜெர்மனி

d.க்ரீஸ்


7.தேனீக்கள்,வண்ணத்துப் பூச்சிகள்,குளவி,வண்டுகள் உள்ளிட்ட மகரந்தச் சேர்க்கையாளர்களை பாதுகாக்கும் விதமாக இந்தியாவில் முதன் முதலாக எங்கு  மகரந்த சேர்க்கையாளர் பூங்கா(Pollinator Park) அமைக்கப்பட்டுள்ளது?


a.ஹரியானா

b.இமாச்சலப் பிரதேசம்

c.உத்தரக்காண்ட்

d.சிக்கம்


8.தேசிய சித்த மருத்துவ நாள் எது?


a.ஜனவரி 2

b.ஜனவரி 3

c.ஜனவரி 4

d.ஜனவரி 5


9.ISRO வின் தலைவர் யார்?


a.மயில்சாமி அண்ணாத்துரை

b.வசந்தி

c.சிவன்

d.ராஜா சாரி


10.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் எந்த நாடு, 8 ஆவது முறையாக நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடாக இணைந்துள்ளது? 


a.மெக்ஸிகோ

b.இந்தியா

c.அயர்லாந்து

d.நார்வே

e.கென்யா


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


180 - ன் விடைகள்


1.இந்த ஆண்டின் சிறந்த நபர் என TIMES இதழ் யாரை தேர்வு செய்து சிறப்பித்துள்ளது?

 a) டொனால்டு ட்ரம்ப்

b) ஜோ பைடன்

c)கமலா ஹாரீஸ்

d) b & c


2. NASA வின் நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு(ARTEMIS) தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி வீரர் யார்?


a)காஜா சாரி

b)ராஜா ஜான் உர்புத்தூர் சாரி

c) வீனஸ் வில்லியம்ஸ்

d)சுனிதா வில்லியம்ஸ்


3.கன்னியாகுமரி மாவட்டம்,களியக்காவளை பகுதியைச் சார்நதவரும்,தொல்காப்பியத்தை அரங்கேற்றியவருமான தமிழ் புலவர் யார்?


a)அவினயன்

b)காக்கை பாடினியன்

c)அதங்கோட்டாசான்

d)பணம்பாரன்ன்


4.பாரீஸில் நடைபெறும் 32ஆவது ஒலிம்பிக்கில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படும் விளையாட்டு எது?

a)Scate boarding

b)Sport climbing

c)Surffing

d)Break dance


5.அரவிந்தராஜ் இயக்கத்தில்,யாருடைய வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாகிறது?

a) அப்துல் கலாம்

b)பசும்பொன் முத்துராமலிங்கர்

c)காமராசர்

d)பிரபாகரன்


6.ATAGS(Advanced Towed Artillery Gun System) ஐ உருவாக்கியுள்ள அமைப்பு எது?

a.DRDO

b.ISRO

c.BHEL

d.OFB


7.  iMobile Pay என்ற mobile banking application ஐ உருவாக்கியுள்ள இந்திய வங்கி எது?


a.HDFC

b.ICICI

c.Yes Bank 

d.Axis bank


8.பாலஸ்தீன பிரச்சனக காரணமாக இஸ்ரேலுக்கும் பெரும்பாலான முஸ்லீம் நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது.இந்நிலையில்,அமெரிக்கா மேற்கொண்ட தீவர முயற்சிக்குப்பிறகு.... இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத திக் கொண்ட  5ஆவது அரபு நாடு எது?


a.எகிப்து

b.ஐக்கிய அரபு அமீரகம்

c.மொராக்கா

d.பஹ்ரைன்

e.ஜோர்டன்


9. எவரெஸ்ட் சிகரம் பற்றிய தகவல்களில் ஒன்று மட்டும் தவறு.அது எது?


a.இது,ஆரம்பத்தில் 15 ஆவது சிகரம் என அழைக்கப்பட்டது.

b.நேபாள மக்கள் இதை, சாகர்மாதா என்றழைப்பர்

c.இது பங்களாதேஷ் ,நேபாளத்திற்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியாகும்.(நேபாளம்,சீனாவிற்கு இடைப்பட் ட எல்லைப் பகுதி என்பதே சரி)

d.நில அளவை தலைமை அதிகாரியாக(Surveyor Geneal)இருந்த ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரது பெயரால், இச்சிகரத்திற்கு  எவரெஸ்ட் என  பெயர் சூட்டப்பட்டது.


10.Capital of  Uzbekistan is.....


a.Bishkek 

b.Samarkand

c.Tashkent

d.Ashgabat


Friday, December 11, 2020

MICE TEST - 11/12/2020

 *மைத்துளி வணக்கம்*


*MICE TEST:180 *


1.சமீபத்தில், உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் மஹாராஷ்டிராவைச் சார்ரந்த எந்த நகரத்தை UNESCO சேர்த்தியுள்ளது?


 a) டேராடூன்

b) ஓர்ச்சா

c)குவாலியர்

d) ஓர்ச்சா & குவாலியர்


2. தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த அமைக்கப்பட்டுள்ள ஆணையம் எது? 

a)நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்

b)நீதிபதி குலசேகரன் ஆணையம்

c)நீதிபதி கலையரசன்   ஆணையம்

d)நீதிபதி கோபாலகிருஷ்ணன் ஆணையம்


3.உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

a)8848 மீ

b)8896.86 மீ

c)8858 மீ

d)8848.86 மீ


4.FICCI அமைப்பு வழங்கும்  2019 -2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதைப் பெறப்போவது யார்?


a)இளவேனில்(துப்பாக்கி சுடுதல்)

b)பஜ்ரங் புனியா(மல்யுத்தம்)

c) a) &b)

d) நடராஜன்(கிரிக்கெட்)


5.ICC - T 20  தரவரிசைப் பட்டியலில் Batsmen களில் முதலிடம் யார்?


a)லோகேஷ் ராகுல்(இந்தியா)

 b)டேவிட் மலான் (இங்கிலாந்து)

c)பாபர் ஆஸம்(பாகிஸ்தான்)

d)விராட் கோலி(இந்தியா)


6. பின்வரும் தகவல்களில் எது தவறு?

a.சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளிலிருந்து  பர்த்திவ் பட்டேல் ஓய்வு 

b.விவேக் மூர்த்தி என்பவர் அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

c.மனித உரிமைகள் தினம்:டிசம்பர்.12

d.பாரதியார் பிறந்த தினம்:டிசம்பர்.11


7.சமீபத்தில் எந்த, நாட்டின் இரப்பர் மரங்களில் Leaf fall disease

அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?


a.தாய்லாந்து

b.இந்தோனேஷியா

c.பூடான்

d.மலேசியா


8.Bashan Char என்கிற  தீவு எங்குள்ளது?

a.ஜப்பான்

b.சீனா

c.பங்களாதேஷ்

d.ஆஸ்திரேலியா


9.FORBES இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில்  தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளவர் யார்?

 a.கமலா ஹாரீஸ்(அமெரிக்கா) 

b.ஜெசிந்தா ஆர்டெர்ன்(நியூஸிலாந்து)

c.சாய்-இங்-வென்(தைவான்)

d.ஏஞ்சலா மெர்க்கல்(ஜெர்மனி)


10.பின்வரும் தகவல்களில் எது தவறு?

a.உலக நிலப்பரப்பில் 27% மலைகள் உள்ளன.

b.உலகில் 13% பேர் மலைகளில் வாழ்கின்றனர்

c.சர்வதேச மலைகள் தினம்:டிசம்பர்.12 

d.சர்வதேச மலைகள் தினம்:டிசம்பர். 11


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA


*MICE TEST:177*

1.ICCயின் புதிய தலைவர் யார்?

 a) ஷசாங் மனோகரன்(இந்தியா)

b) இம்ரான் கவாஜா(சிங்கப்பூர்)

c)கிரேக் பார்கிளே(நியூஸிலாந்து)

d) ஜக்மோகன் டால்மியா (இந்தியா)


2. Dr.S.R.ரங்கநாதன் விருது,சிறந்த........வழங்கப்படும் விருதாகும்.


a) மருத்துவர்களுக்கு

b)சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு

c)இசைக் கலைஞர்களுக்கு

d)நூலகர்களுக்கு


3.2020ஆம் ஆண்டின் சிறந்த மாநிலத்திற்கான இந்தியா டுடே விருதை ப் பெறும் மாநிலம் எது?

a) தமிழ்நாடு

b)கேரளா

c)குஜராத்

d) ஆந்திரா


4.உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து எத்தனையாவது முறையாக முதலிடத்தில் உள்ளது?

a) 6 ஆவது

b)7 ஆவது

c)5 ஆவது

d)4 ஆவது


5.சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

a)பிரான்ஸ்

b)பிரேசில்

c)இங்கிலாந்து

d) பெல்ஜியம்


6.ஒவ்வொரு ஆண்டும்,எந்த மாத்த்தின் கடைசி வாரம் GORT வாரம் (Gastro-Oesopharyngeal Reflex Disease-இரைப்பை மற்றும் உணவுக்குழாயில் உணவு எதிரெடுத்தல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக)  அனுசரிக்கப்படுகிறது?

a.அக்டோபர்

b.நவம்பர்

c.டிசம்பர்

d.ஜனவரி


7.தன் 34ஆவது பிறந்த நாளில் 34 அரசுப்பள்ளியில் பயிலும் 10000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தவர் யார்?

a.ஷிகர் தவான்

b.சுரேஷ் ரெய்னா

c.விராட் கோலி

d.சூர்யக்குமார்


8.மறைந்த, இந்திய தகவல் தொழில் நுட்ப துறையின் தந்தையெனப் போற்றப்பட்ட  F C ஹோலி என்பார் எந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்?

a.TCS

b.IBM 

c.WIPRO

d.Infosys


9.நடைபெற உள்ள 93ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ள இந்திய திரைப்படம் எது?

a.ஜல்லிக் கட்டு

.b.ஆதாமின்டே மகன் அபு

c.சூர்ரைப் போற்று

d.அசுரன்


10.மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி எந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றது?

a.1976

b.1986

c.1982

d.1990



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

PUMS, Ganesapuram, Coimbatore


1. P.Bhrathi    -    10/10

2. S.V.Rasiga priya    -  09/10


congrats to all

STAY HOME.... STAY SAFE.......