Tuesday, October 27, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2026

பில் கேட்ஸ்




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:52. தெரிந்து வினையாடல்

குறள் எண்:518

குறள்:

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

பொருள்:

இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.

பழமொழி :

Think before you act.

எண்ணித் துணிக கருமம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. தோல்வியைக் கண்டு துவள மாட்டோம்; வெற்றிக்காக முயல்வோம்.

2. மரங்களை வளர்ப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்.

பொன்மொழி : 

கற்பனைக்கு உயிர் கொடுப்பது படைப்பாற்றல்; படைப்பாற்றலுக்குச் சிறகு கொடுப்பது முயற்சி!”

Thought for the Day :

“Creativity turns imagination into reality, and persistent effort turns ideas into achievements.”

பொது அறிவு : 

1. சுருக்கு எழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்? 

சர் ஐசக் பிட்மன். 

2. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH44 எந்த இரு நகரங்களை இணைக்கிறது? 

ஓசூர் - கன்னியாகுமரி

English words :

1. Mundane – Ordinary – சாதாரணமான

2. Inevitable – Unavoidable – தவிர்க்க முடியாத

புவியியலும் சுற்றுசூழலும் :

அதி முக்கிய சதுப்புநிலக் காடுகள் (மாங்குரோவ்) குறித்து காண்போம்
* கடலோரச் சதுப்பு நிலங்களிலும் ஆற்றுக் கழிமுகங்களிலும் வளரும்.
* உப்புத்தன்மையைத் தாங்கும் தாவரங்கள் இங்கு காணப்படும்.
* கடலோர அரிப்பைக் குறைக்கவும் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவவும் செய்கின்றன.
* காணப்படும் இடங்கள்: பிச்சாவரம், முத்துப்பேட்டை.

NMMS :

MAT 

ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் உலக மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது? 

(1) டிசம்பர் 10. 

(2) அக்டோபர் 24. 

(3) செப்ம்பர் 2. 

(4) டிசம்பர் 5. 

விடை : (1) டிசம்பர் 10

அக்டோபர் 28

பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

நீதிக்கதை

 தூக்கத்தை வென்ற தொலைக்காட்சி!


ஒரு ஊரில் கவின் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். படிப்பில் ஆர்வமுள்ளவனாக இருந்தாலும், இரவு நேரங்களில் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தான்.


கவின் தினமும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்குவான். ஒரு திரைப்படம் முடிந்ததும் மற்றொரு திரைப்படத்தைப் பார்ப்பான். சில நாட்களில் நள்ளிரவு வரை விழித்திருந்து தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு, காலையில் தாமதமாக எழுவான்.


இதனால் பள்ளிக்குச் செல்லும்போது அவனுக்குத் தூக்கம் வரும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கவனிக்க முடியாமல் போனது. விளையாட்டு நேரத்திலும் சோர்வாக இருந்தான். ஒருநாள் வகுப்பில் ஆசிரியர் கேட்ட எளிய கேள்விக்குக்கூட அவனால் பதில் சொல்ல முடியவில்லை.


இதைக் கவனித்த வகுப்பாசிரியர், கவினைத் தனியாக அழைத்து, “கவின், உனக்குத் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் பிடிப்பது தவறல்ல. ஆனால், அவற்றைப் பார்ப்பதற்காக இரவு தூக்கத்தைத் தியாகம் செய்வது தவறு. நல்ல தூக்கம் இருந்தால்தான் மறுநாள் புத்துணர்ச்சியுடன் படிக்கவும் விளையாடவும் முடியும்” என்று அன்புடன் அறிவுரை கூறினார்.


ஆசிரியரின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட கவின், அன்று முதல் சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கினான். வீட்டுப்பாடங்களை மாலையிலேயே முடித்தான். தொலைக்காட்சி பார்ப்பதற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினான். இரவு நேரத்தில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, சரியான நேரத்தில் உறங்கச் சென்றான்.


சில நாட்களிலேயே கவினுக்கு காலையில் சுறுசுறுப்பாக எழ முடிந்தது. வகுப்பில் பாடங்களைக் கவனமாகக் கேட்டான். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றான்.


ஒருநாள் அவனுடைய ஆசிரியர், “கவின், உன்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.


அதற்குக் கவின், “ஆசிரியரே, திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்ப்பதற்காகத் தூக்கத்தை இழக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். பொழுதுபோக்கு நமக்கு மகிழ்ச்சி தர வேண்டும்; நம் உடலுக்கும் படிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது” என்றான்.


ஆசிரியர் அவனைப் பாராட்டினார். கவினின் நல்ல மாற்றத்தைப் பார்த்த மற்ற மாணவர்களும் இரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதைக் கட்டுப்படுத்தி, சரியான நேரத்தில் உறங்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டனர்.


நீதி: இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்துத் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்க்கக் கூடாது. சரியான நேரத்தில் உறங்கி, போதுமான தூக்கத்தைப் பெற்று, உடல்நலத்தையும் கல்வியையும் பாதுகாக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்

28.10.2026

🗒️வேகம் குறைந்த அர்னாப் புயல்: நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் மழை ஆனது  மேலும் வலுவடைந்து அதி தீவிரமடையும் .

🗒️30-ந்தேதி விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

🗒️கொச்சியில் நவம்பர் 20 முதல் 22 வரை 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விளையாட்டுச் செய்திகள்

🏀காமன்வெல்த் கபடி: அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி.

🏀தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: தமிழகத்துக்கு மேலும் இரு தங்கம். யுவின் ஆனந்தன் ஒரு நிமிடம் 54.24 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனை.

Today's Headlines

🗒️ Arnab Cyclone Slows Down: Rain in Tamil Nadu is expected only after November 1. The cyclone is likely to become stronger and develop into a very severe storm.

🗒️ GSLV-F18 Rocket Launch on October 30: Fishermen have been banned from going into the sea.

🗒️ Tri-Services Photo Exhibition in Kochi: The 14th Tri-Services Photo Exhibition will be held in Kochi from November 20 to 22.

Sports News

🏀 Commonwealth Kabaddi: The Indian women's team has entered the semi-finals.

🏀 National Junior Athletics Championship: Tamil Nadu won two more gold medals.

🏀 Yuvin Anandan Creates a Record: Yuvin Anandan reached the finish line in 1 minute and 54.24 seconds, setting a record.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment