Thursday, January 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2025

 

சாவித்திரிபாய் புலே

  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண்:943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

பொருள்:முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

பழமொழி :

Beauty is a short-lived reign.

அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :  

   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  

*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.

பொன்மொழி :

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் --பெர்னாட்ஷா

பொது அறிவு : 

1. கடலில் கலக்காத பெரிய நதி எது? 

விடை : யமுனை. 

2. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்? 

விடை : அன்னை தெரசா

English words & meanings :

 Basketball      -     கூடைப்பந்து 

 Boxing          -       குத்துச்சண்டை

வேளாண்மையும் வாழ்வும் : 

 நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. கடலில் காணப்படும் நீர். 3% மட்டுமே புதுப்புனலாக அதாவது நல்ல நீராக இருக்கும்

ஜனவரி 03

சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது

நீதிக்கதை

 இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு. 


ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவது போல் இருந்தது. சுற்றி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்தது அந்த இடம். 


ரொம்ப தூரம் நடந்ததற்கு பின் அவர் ஒரு அழகான தோட்டத்திற்கு உள்ளே நுழைந்தார். அங்கு நிறைய மரங்களும், பழங்களும், பூக்களும்  இருந்தன . அங்கு மரங்கள் முழுவதும் ஆரஞ்சு பழங்களால் நிரம்பியிருந்தது.  அவருக்கு  கீழே விழுந்த ஒரு ஆரஞ்சுப் பழம் கிடைத்தது. அதை அவர் எடுத்து உண்ண ஆரம்பித்தார்.


அந்த ஆரஞ்சு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூசணி கொடியை பார்த்தார் . அதில் மிகவும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் இருந்தது. அவர் அதை பார்த்ததும் , “இந்த பூசணிக்கொடி இவ்வளவு சிறியதாக இருக்கிறது.ஆனால் காயோ ரொம்ப பெரியதாக இருக்கிறது . ஆரஞ்சு பழமோ சிறியதாக  இருக்கிறது.ஆனா அது பெரிய மரத்தில் காய்க்கிறது.இந்த இயற்கை ரொம்பவே முரண்பாடாக இருக்கிறது . 

இந்த இயற்கையைப் படைத்தவர்களுக்கு கண்டிப்பாக ஒன்றுமே தெரியாமல் தான் இருந்திருக்கும்"

என்று யோசித்தார்


அவ்வாறு சுற்றி இருந்த எல்லா படைப்புகளையும் ஏளனம் செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து  ரொம்பவே தூக்கம் வருவதுபோல் இருக்க மரத்துக்கு அடியில் தலைசாய்த்து அசந்து தூங்கி விட்டார் 


திடீரென்று  அவர் தலையில் ஏதோ வந்து விழுந்தது. அவர் எழுந்து பார்த்தபோது ஒரு ஆரஞ்சு பழம் தன் காலுக்கு பக்கத்தில்  கிடந்தது. உடனே அவருக்கு புரிந்தது இந்த ஆரஞ்சு பழம் தான் தன்னுடைய தலையில் விழுந்தது என்று. 


அப்போதுதான் திடீரென்று அவர் யோசித்தார் “இந்த  ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் தன்னுடைய தலையில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும்” 

என்று பயந்தார் . அவர் மனதில்  "பூசணிக்காய் இருக்க வேண்டிய இடம் தரைதான்" என்று அப்போது நினைத்தார்.


இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு என்பதை அவர் உணர்ந்தார்.

இன்றைய செய்திகள்

03.01.2025

* கல்வி வளாகங்​களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்​பாடுகள் விதிக்க வேண்​டும் என்று தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் அறிவுறுத்​தல்.

* பதவிக் காலம் முடிய​வுள்ள 28 மாவட்​டங்​களில் உள்ள ஊராட்​சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு: அவசர சட்டத்​துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்பு​தலுக்கு அனுப்​பப்​பட்​டுள்ளன.

* 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

* 6-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* National Commission for Women members advise that restrictions should be imposed on the entry of outsiders into educational institutions.

* The Tamil Nadu government has decided to appoint special officers for village administrations in 28 districts whose term is about to end: Files for the Emergency Act have been submitted to the Governor for approval.

* 2024 is the hottest year in India since 1901. In that regard, the India Meteorological Department has announced that 2024 has recorded the highest temperature in the last 123 years.

* A sudden earthquake occurred in Afghanistan yesterday: The National Seismological Center reported that it was recorded as 4.3 on the Richter scale.

* 6th Hockey India League match: Sarachi RAR Bengal Tigers team won.

* Brisbane International Tennis Tournament: Serbian player Djokovic advances to the quarterfinals.

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 1, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2025

  


 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

பழமொழி :

Many hands make work light\

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

இரண்டொழுக்க பண்புகள் :  

   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  

*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.

பொன்மொழி :

எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்? 

விடை: ரோமானியர்கள். 

2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?

 விடை: நியூசிலாந்து

English words & meanings :

 Archery      -      வில்வித்தை

 Badminton       -      பூப்பந்து

வேளாண்மையும் வாழ்வும் : 

 இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்

நீதிக்கதை

 நரியும் புலியும் 


ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான். 


முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.


நரியும்  வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது  வண்ணம் பூசு" என்றது.  அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது.  நரி தனக்குள்  “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல்  சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை. 


வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.  ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி:  பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

02.01.2025

* 2024-ம் ஆண்டில் அரசு பணிக்கு 10,701 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.

* வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

* சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

* சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் அவர் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காண முடியும்.

* உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

* சர்வதேச நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்தாட்டத்தில்  மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

* 10,701 people selected for government jobs in 2024: Tamil Nadu Public Service Commission information.

* The Employment and Training Department has announced that applications can be made online from today to start new ITIs, renew recognition, and start new industries in the coming academic year.

* The Home Ministry has announced that WhatsApp is the most used platform for cyber crimes, followed by Telegram and Instagram.

* It has been reported that Sunita Williams, who is in the International Space Station, will celebrate the New Year 16 times because she can see 16 sunrises and sunsets.

* Tamil Nadu player Rameshbabu Vaishali has won the World Blitz Chess Championship bronze medal.

* India achieved a huge victory by defeating Maldives in an international friendly women's football match.

Covai women ICT_போதிமரம்



Sunday, December 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2024

   







திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம் : மருந்து

குறள் எண்:941

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள் :
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.

பழமொழி :

A true friend is the best possession.

உண்மையான நண்பனே உன்னதச் சொத்து

இரண்டொழுக்க பண்புகள் :  

  *விடுமுறை நாட்களில் வெளியில் செல்லும் பொழுது கவனமாக இருப்பேன்.       

*அறிமுகம் இல்லாத நபர்களோடு வெளியில் செல்ல மாட்டேன். ஆபத்தான நீர் நிலைகளில் குளிக்க போக மாட்டேன்

பொன்மொழி :

வாய்மைக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அச்சமின்மையே----ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 

1. பூரண ஆயுள் என்பது எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது? 

விடை: 120 ஆண்டுகள். 

2. மனித முகத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? 

விடை: 14 எலும்புகள்.

English words & meanings :

 Singing          -      பாடுதல்

Swimming       -      நீந்துதல்

வேளாண்மையும் வாழ்வும் : 

 தமிழகத்தில் சில இடங்களில் முற்றும் இயற்கை முறை வேளாண்மை நடத்தப்படுகிறது. அதாவது மழை பெய்த உடன் நெல் விதை விதைத்து விடுவது அதன் பிறகு அதன் களைகள் கொல்ல எந்த மருந்தும் இயற்கை களைக் கொல்லிகள் கூட உபயோகிப்பது இல்லை. இம்முறையில் பயிர் செய்யப் படும் பயிர்கள் இரண்டாம் மூன்றாம் தலைமுறையில் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும்.

நீதிக்கதை

 சர்வீஸ்

பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். 

காரை பழுது பார்த்த மெக்கானிக், "டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்... நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன். அடைப்பை சரி செய்கிறேன். புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்.. நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்.. அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம், புகழ்?"

என்று கேட்டான். 

சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் "நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார் அப்போது புரியும்!" என்றார்.

அப்போது தான் மெக்கானிக் டாக்டரின் சர்வீஸ்  எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவருடைய சர்வீஸை நம்முடைய வேலையுடன் ஒப்பிடுவது எவ்வளவு தவறான விஷயம் என்றும், புரிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

23.12.2024

* போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிசம்பர் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது.

* நெல்லை சம்பவம் எதிரொலி: ‘அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு’: தமிழக டிஜிபி உத்தரவு.

* உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட நீல்கிரி, சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு.

* உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு.

* புரோ கபடி லீக்; ஜெய்ப்பூரை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற தபாங் டெல்லி.

* சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1, 602 ரன்களுடன் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்

Today's Headlines

* Transport workers' wage agreement talks to be held on December 27 and 28.

* Nellai incident: 'Armed police security in all courts': Tamil Nadu DGP orders.

* The most modern domestically manufactured Nilgiri, Surat warship handed over to the Navy.

* Ready to talk to Trump about the Ukraine ceasefire: Russian President Putin announces.

* Pro Kabaddi League; Dabang Delhi wins thrilling victory over Jaipur.

* India's Smriti Mandhana tops the list of players who have scored the most runs in a year in international competition with 1,602 runs
Covai women ICT_போதிமரம்

Friday, December 20, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2024

 

திரு. ஜெகன் மோகன் ரெட்டி

   






திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: சூது

குறள் எண் :940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பொருள்:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் குதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருத்த வருந்த உயிர் மேன் மேலும் காதல் உடையதாகும்.

பழமொழி :

Justice delayed is justice denied

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்

இரண்டொழுக்க பண்புகள் :  

  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.

பொன்மொழி :

கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன---அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகலிடம் பெற்ற இடம் எது? 

விடை: பத்தமடை. 

2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது? 

விடை: கன்னியாகுமரி.

English words & meanings :

 Reading       -       வாசித்தல் 

 Sewing        -       தையல்

டிசம்பர் 21

ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்

எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 211972) அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், முன்னாள் முதல்வரும் ஆவார்.இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நீதிக்கதை

 பேராசை 


முன்னொரு காலத்தில் ராமு, சோமு என்ற தொழிலதிபர்கள் இருந்தனர். அவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். அவர்கள் போகும் வழியில் சோமு கீழே ஒரு பை கிடப்பதை பார்த்தார். அந்த பையை திறந்து பார்த்தால் பை முழுக்க தங்கக் காசுகள் இருந்தன. 


“ஆஹா! நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி! எனக்கு இவ்வளவு தங்க காசுகள் கிடைத்திருக்கு!” 

என்று ரொம்ப பெருமையாக ராமுவிடம் சோமு சொன்னார். அப்போது ராமு சொன்னார் “நீ மட்டும் அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதே,  நாம் இரண்டு பேரும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்" என்றார். 


“அது எப்படி முடியும் நான் தான் இந்த பையை முதலில் பார்த்தேன். அதனால் எல்லா தங்கமும் எனக்குத் தான். அப்புறம் அதிர்ஷ்டமும் எனக்குத் தான். உனக்கு இல்லை” என்று கூறினார் சோமு. 


சோமு சொன்னதைக் கேட்ட ராமு எதுவும் பேசவில்லை. தேவை இல்லாமல் சண்டை போடக்கூடாது என்று நினைத்தார் ராமு. அந்த சமயத்தில் யாரோ பின்னாடி இருந்து திருடன், திருடன் என்று கத்தினார்கள். அப்போது அவர்கள் திரும்பி பார்க்கும் போது, கையில் கம்போடு சிலர் தங்களை நோக்கி ஓடிவருவதை பார்க்கிறார்கள். 


அப்போது சோமு சொன்னார் “ஐயோ! கடவுளே! இப்போது நம்மை இவர்கள் தங்கத்தோடு பார்த்தால் நாம் மாட்டிக்கொள்வோம், ரொம்ப அடிப்பார்கள் ” என்று கவலையோடு சொன்னார்.


அதுற்கு ராமு சொன்னார் “நாம் இல்லை. நீதான் மாட்டுவாய், உன்னை தான் பயங்கரமா அடிப்பாங்க. நீ சொன்னபடி, அந்த தங்கம் உனக்கு மட்டும் தான் சொந்தம் என்றாய் அல்லவா, இப்போ அவங்க தர போகும் அடியும் உனக்கு மட்டுமே சொந்தம்” என்றார். 


 நாம் நமது அதிர்ஷ்டத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் நமது கெட்ட நேரத்தில் அவர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று யோசிப்பது முட்டாள்தனம். 

இன்றைய செய்திகள்

21.12.2024

* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

* சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்​சி​யில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்​கிறது: மத்திய அரசு பாராட்டு.

* மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

* நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

* சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்: நாசா புதிய தகவல்.

* பிபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி.

* பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; 26-ந்தேதி தொடக்கம்.

Today's Headlines

* Speaker Appavu has announced that the Tamil Nadu Legislative Assembly session will begin on January 6 with the Governor's address.

* Tamil Nadu is a pioneer state in Siddha medical education and research: Central government praises.

* The Social Welfare Department has ordered the appointment of 8,997 cooking assistants in nutrition centers, each with a monthly salary of Rs. 3 thousand.

* The Central government has ordered the state governments to expedite the work of providing piped drinking water connections across the country.

* Sunita Williams will return to Earth only in March: NASA new information.

* FIFA Intercontinental Football Cup: Spain's Real Madrid team won the championship.

* The Junior Super Kings cricket series between schools; starts on the 26th.

Covai women ICT_போதிமரம்