Wednesday, April 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.04.2025

  

ஜி.யு.போப்

 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 இயல்: குடியியல்

 அதிகாரம் :உழவு

 குறள் எண்:1036

 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
 விட்டேம்என் பார்க்கும் நிலை.

பொருள்:
உழவர் தம் தொழில் செய்யாது கை மடக்கியிருப்பாராயின் அனைவரும் விரும்பும் உணவும் இல்லை; துறவிகளுக்கு துறவுமில்லை.

பழமொழி :

இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும்-

The joy of the heart makes the face merry

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள், சூழ்நிலை என்பது  எவரையும் தலைகீழாய்  புரட்டி  போடும்  வல்லமை  கொண்டது.

பொது அறிவு : 

1. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

விடை :விக்ரம் சாராபாய்.        

2. விக்ரம் சாராபாய் முயற்சியால் தொடங்கப்பட்ட நிறுவனம் எது? 

விடை : இஸ்ரோ (ISRO)

English words & meanings :

 Reception.     -    வரவேற்பு 

Relatives.      -     உறவினர்

வேளாண்மையும் வாழ்வும் : 

 வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கு நீர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

ஏப்ரல் 24

ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள்


ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்





சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள்




சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar About this soundஒலிப்பு (உதவி·தகவல்), பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[4] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.[7] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[8] மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.

நீதிக்கதை

 மெக்ஸிகோ தேசத்து மீனவன்...

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும், பாட்டுப் பாடிக்கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பானஇளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனைஅதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று "ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!" என்றான்.


அதற்கு மீனவன் "காசு கிடைச்சா...?" என்று கேட்டான்.

இளைஞன் "காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும்பணம் அதிகமாகசம்பாதிக்கலாம் என்று சொன்னான்.


மீனவன் "அதிகம் சம்பாதிச்சா....?" என்று கேட்டான்.


இளைஞன் பொறுமையாக "ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்" என்று சொன்னான்.


மீனவன் "ஏற்றுமதி செஞ்சா...?" என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு "ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். " என்றான்.


மீனவன் மறுபடியும் "இதெல்லாம் கிடைச்சா..." என்றான்.

இளைஞன் "உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்" என்றான்.

"நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் மீனவன்.

நீதி: மகிழ்ச்சி என்பது அவரவர் மனதை பொறுத்தது. நம்மை சுற்றி உள்ள பொருட்களில் இல்லை.

இன்றைய செய்திகள்

24.04.2025

* தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு.

* ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்கக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்.26-ல் நடக்கும்: வாடிகன் அறிவிப்பு.

* பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நேற்று தொடங்கி மே 4-ந்தேதி வரை நடக்க உள்ளது.

* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர்.

Today's Headlines

* Tamil Nadu's solar power generation increased to 10,000 megawatts.
50 candidates who received training under the Tamil Nadu government's 'Naan Mudhalvan' scheme have passed the Civil Services Examination, including IAS.

* Prime Minister Modi and US Vice President Harris have welcomed the significant progress in the bilateral trade agreement (BTA) negotiations between India and the United States.

* Pope Francis's funeral will be held on April 26th: Vatican announcement.

* The Madrid Open tennis tournament, a clay-court event serving as a prelude to the French Open, began yesterday in Spain and will continue until May 4th.

* Indian shooter Simranpreet Kaur won a silver medal at the World Cup shooting competition.

Covai women ICT_போதிமரம்

Tuesday, April 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.04.2025

 

உலக புத்தக தினம்

  






திருக்குறள்: 

பால் :பொருட்பால்

இயல் குடியியல்

 அதிகாரம்: உழவு

 குறள் எண்:1035.

 இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது
 கைசெய்துஊண் மாலை யவர்.

பொருள்:
உழவுத் தொழில் செய்து வாழ்பவர் இஙரக்கமாட்டார். தன்னை நாடி இரப்பவர்க்கு இல்லை எனக் கூறாது கொடுப்பர்.

பழமொழி :

உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள்-

Health and understanding are two great blessings of life

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

விதி  ஆயிரம்  கதவுகளை  மூடினாலும், முயற்சி  ஒரு  ஜன்னலையாவது  திறக்கும்...முடங்கிவிடாதே  தொடர்ந்து  முயற்சி  செய்....

பொது அறிவு : 

1.முசோலினி வெளியிட்ட செய்தித்தாளின் பெயர் என்ன? 

அவந்தி

2." உயிரியல் சொர்க்கம்" என்றழைக்கப்படுவது எது? 

மன்னார் வளைகுடா.

English words & meanings :

 Independence Day.  -  சுதந்திர தினம் 

Marriage.    -     திருமணம்

வேளாண்மையும் வாழ்வும் : 

நிலத்தடி நீர் ஆதாரங்களை பயன்படுத்துவதற்கான நிலையான முறைகளை நடைமுறைப்படுத்துவது நீர் பாதுகாப்பிற்கான கூடுதல் உத்தியாகும். 

ஏப்ரல் 23

உலகப் புத்தக நாள் (World Book Day) 


உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. 
பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

நீதிக்கதை

 எல்லோர்க்கும் நல்லவர்கள்


ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். 

அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.


இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான்மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர்இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டுதடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும்கழுதையிலிருந்து குதித்தனர். 

இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும்செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி:எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது.

இன்றைய செய்திகள்

23.04.2025

* ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற பட்டதாரி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

* தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

* கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிப் படுகைகளில் குறைவான பனிப்பொழிவு காரணமாக நீர்வரத்து குறைந்து வருகிறது.

* அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு: சீன விஞ்​ஞானிகள் சோதனை வெற்றி.

* ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடர்: ஜெலினா ஓஸ்டாபென்கோ சாம்பியன்.

* டி20 கிரிக்கெட்டில் ரஷித் கான் உலகின் சிறந்த பவுலர் என சாய் கிஷோர் பேட்டி.

Today's Headlines

* A record of 1009 people have achieved success in the national-level examination for civil service positions, including IAS. At the Tamil Nadu level, Sivas Chandran, a graduate from Dharmapuri, has secured the first rank.

* The High Court has ordered the government to implement within 3 months its earlier order from 2018, which mandated equal pay for equal work for consolidated pay nurses.

* Water inflow is decreasing in the Ganges, Brahmaputra, and Indus river basins due to low snowfall.

* Non-nuclear Fluorodinitroethane (FL-2) explosive: Successful test by Chinese scientists.

* Stuttgart Open Tennis Tournament: Jelena Ostapenko is the champion.

* T20 Cricket: Sai Kishore interviews that Rashid Khan is the best bowler in the world.

Covai women ICT_போதிமரம்

Monday, April 21, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.04.2025

புவி நாள்

 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 இயல் :குடியியல்

 அதிகாரம்: உழவு
                          
 குறள் எண்:1034.

 பலகுடை நீழலும் தம்கடைக்கீழ்க் காண்பர்
 அலகுஉடை நீழ லவர்.

பொருள்:
நெற்ச்செல்வமுடைய உழவர், உலக அரசர்களின் கீழுள்ள நிலம் முழுவதையும், தம் அரசர் கீழாகச் செய்வர்.

பழமொழி :

அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல-

It is not wise to talk more.

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

எதை  செய்ய வேண்டுமோ,  அதை முழு  கவனாத்துடன் செய்தால்,  எதை அடைய நினைக்கிறீர்களோ,அதை  நிச்சயமாக அடையலாம்.

பொது அறிவு : 

1. ஒரு தேனீக்கு எத்தனை கண்கள் உள்ளன? 

விடை: ஐந்து கண்கள்.        

2. எந்த விலங்கு இளஞ்சிவப்பு வியர்வையை விடுகிறது? 

விடை: நீர்யானை

English words & meanings :

 Gift.     -      பரிசு 

Groom.   -    மணமகன்

வேளாண்மையும் வாழ்வும் : 

நிலத்தடி நீர் மாசுபடுவதால் கிடைக்கும் நன்னீர் நிரம்புவதும் குறைகிறது எனவே நிலத்தடி நீர் வளங்களை மாசுபடாமல் பாதுகாப்பதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நீர்பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும். 

ஏப்ரல் 22

புவி நாள்

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

  வைத்திய செலவு


ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. 

வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில்உள்ள வட்டிகடைக்காரரைஅணுகினான். அதற்கு அவர்“பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் அவரும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் வட்டிகடைக்காரர் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையைவிற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாயவட்டி வாங்குபவருக்குபாடம் கற்பிக்க விரும்பினான்.

“சரி குதிரையை விற்று முழு பணத்தையும் உனக்கே தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்துஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து“உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்

அதற்கு தெனாலிராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான்இக்குதிரையைக் கொடுப்பேன்” என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் வட்டிகடைக்காரருக்கு ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை அவர் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.

அதற்கு தெனாலிராமன் “ஐயா  குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியேகுதிரையை 1 பவுனுக்கு விற்றது. அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே. இது என்ன நியாயம்” என்றான்.

அவரோ 500 பவுன் வேண்டுமென்றான் இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வழக்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்ததுசரியே என்று தீர்ப்புக் கூறினார்.

இன்றைய செய்திகள்

22.04.2025

* கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது முறையாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

* மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* நான்கு நாள் பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

* கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார்.

* பெல்ஜியமில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே.

Today's Headlines

* Solar Power Production: In the year 2024-25, Tamil Nadu has maintained its 4th position at the All India level for the third consecutive time by generating 10,153.48 MW of solar power.

 * Metropolitan Transport Corporation Employees: It has been announced that biometric attendance registration is mandatory for Metropolitan Transport Corporation employees starting today.

 * US Vice President's Visit: US Vice President J.D. Vance has arrived in India with his family for a four-day trip.

 * Pope Francis: The head of the Catholic Christian religion, Pope Francis, has passed away.

 * Ajith Kumar's Car Race: Actor Ajith Kumar's team has secured the 2nd position in the car race held in Belgium, achieving a remarkable feat.

 * Barcelona Open Tennis: Denmark's Holger Rune won the championship title at the Barcelona Open tennis tournament.

Covai women ICT_போதிமரம்

 

Sunday, April 20, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2025

   

தேசிய குடிமை பணிகள் தினம்






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் எண்:1033.

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 தொழுதுஉண்டு பின்செல் பவர்.

பொருள்:
உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள். மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.

பழமொழி :

தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

Delay is dangerous.

இரண்டொழுக்க பண்புகள் :

*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 

* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :

"""பெரிய நெருக்கடிகள் அரிய மனிதரை உருவாக்கும்,பெரும் ஊக்கம்  தரும்  செயல்களை  அளிக்கும்."" ---ஜான் F கென்னடி

பொது அறிவு : 

1. ஆசிய ஜோதி யாருடைய வரலாற்றை எடுத்துரைக்கின்றது?  

விடை :கௌதம புத்தர்     

2. ஒரு மெகா பைட் (mega byte) என்பது  எவ்வளவு? 

விடை : 1024 kilo bytes

English words & meanings :

Candy.          -         மிட்டாய் 

Engagement.   -    நிச்சயதார்த்தம் 

வேளாண்மையும் வாழ்வும் : 

மழைப்பொழிவு ஏற்படும்போது, தண்ணீர் மண்ணில் ஊடுருவி நிலத்தடிக்குச் செல்கிறது. இது நிலத்தடி நீர் எனப்படுகிறது 

ஏப்ரல் 21

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) 

தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். [1] நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

நீதிக்கதை

 யானையின் அடக்கம்

 யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. 

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்கு யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி:தன் பலம், பலவீனம் 

தெரிந்தவர்கள் அடக்கத்தில் 

சிறந்தவர்களாக இருப்பார்கள். 

இன்றைய செய்திகள்

21.04.2025

* அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.

* புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் தங்க குண்டுமணி  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு.

* கே2-18பி என்ற தொலைதூர கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ருனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி.

Today's Headlines
* Government offices to install prepaid meters: Electricity Regulatory Commission order.

* Gold bead found in ongoing excavation near Kodumbalur in Viralimalai, Pudukkottai district.

* Cloudburst in Jammu and Kashmir: 5 dead in sudden rain and floods.

* Scientists at the University of Cambridge, led by Indian-origin UK scientist Dr. Nikku Madhusudhan, have discovered signs of life on the distant planet K2-18b.

* Barcelona Open Tennis Tournament: Denmark's Holger Rune advances to the final.

* IPL: Bangalore defeats Punjab.

Covai women ICT_போதிமரம்