Thursday, October 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2025

ஐக்கிய நாடுகள் நாள்

   






திருக்குறள்: 

குறள் 978: 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 
அணியுமாம் தன்னை வியந்து. 

உரை: 

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

பழமொழி :

No effort, no harvest. 

முயற்சி இல்லாமல் விளைச்சல் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அழகே உண்மை .உண்மையே அழகு - கீட்ஸ்

பொது அறிவு : 

01.தாவரங்களின் வளர்ச்சி நிலையை அறிய பயன்படும் கருவியின் பெயர் என்ன? 

   ஆக்ஸனோமீட்டர்-வளர்ச்சிமானி 

                      Auxanometer

02. நமது உடலில் இன்சுலினை சுரக்கும் சுரப்பி  எது?

         கணையம் - Pancreas

English words :

destroy-ruin

devote-dedicate

தமிழ் இலக்கணம்: 

 காலப்பெயர்: ஓர் காலத்தைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: காலை, மாலை, ஆண்டு.

சினைப்பெயர்: ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: கண், கை, இலை, பழம்

அறிவியல் களஞ்சியம் :

 பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

அக்டோபர் 24

உலக இளம்பிள்ளை வாத நாள்

 இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. 


ஐக்கிய நாடுகள் நாள்


1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார். 


நீதி :

கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

24.10.2025

⭐தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு- தமிழக அரசு அனுமதி

⭐சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார்- தமிழக அரசு

⭐ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

⭐உக்ரைன் போர் விவகாரம்: 2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதாரம் தடை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம்- ஸ்மிருதி மந்தனா சாதனை.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

Today's Headlines

⭐ Tamilnadu government has approved to provide three free meals every day for sanitation workers .

 ⭐1436 motor pumps and 298 vehicles have been made ready to prevent rainwater from accumulating in Chennai .

⭐Chief Minister M.K. Stalin will open the renovated Tolkappiyam Park for public use today at the cost of Rs. 42.45 crore.

⭐Ukraine war issue: US imposes economic sanctions on 2 Russian oil companies.

 *SPORTS NEWS* 

🏀 Mandhana scored 109 runs in today's match against New Zealand. Smriti Mandhana holds the record for scoring the most centuries in women's ODIs.

Covai women ICT_போதிமரம்

 

Wednesday, October 22, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.10.2025

காற்பந்தாட்ட வீரர் பீலே






திருக்குறள்: 

குறள் 975: 

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை யுடைய செயல். 

உரை: 

பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

பழமொழி :

Respect is earned,not demanded. 

மரியாதை கேட்டு பெறப்படுவதில்லை, சம்பாதிக்கப்பட வேண்டியது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அறிவு என்பது நண்பர்களுக்கிடையில் நாம் இருக்கும் போது நமக்கு ஒரு நல்ல ஆபரணமாக இருக்கும். பகைவர்களிடமிருந்து அது நம்மைக் காக்கும் ஒரு கேடயமாக இருக்கும் - விநோபா

பொது அறிவு : 

01.அட்லஸ்சை கண்டுபிடித்தவர்  யார்?

ஆபிரகாம் ஆர்டெலியஸ்
Abraham Ortelius 

02.உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த நதியில் அமைந்துள்ளது?

வெனிசுலா -சுருன் நதி
Venezuela - Churún River

English words :

depict-portray

desire-crave

தமிழ் இலக்கணம்: 

 பொருட்பெயர்: ஓர் உயிரற்ற அல்லது உயிருள்ள பொருளின் பெயரைக் குறிக்கும்.
எ.கா: மரம், செடி, நாற்காலி, முத்து
இடப்பெயர்: ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும்.
எ.கா: உலகம், இந்தியா, சென்னை

அறிவியல் களஞ்சியம் :

 நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

அக்டோபர் 23


பீலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 23 அக்டோபர் 1940 – 29 திசம்பர் 2022) பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர்.காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.

நீதிக்கதை

 ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். 

இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம். 

ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது. 

குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன. 

தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று. 

நீதி :

சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இன்றைய செய்திகள்

23.10.2025

⭐டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.

⭐இந்திய ராணுவத்தில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ பதவி
⭐ டெல்டா மாவட்டங்களில் கனமழை – ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

⭐அமெரிக்கா வாழ் தேன்மொழி சௌந்தர் ராஜ் அவர்களுக்கு வைக்கம் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியில்  235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தமிழக வம்சாளி வீரரான முத்துசாமி மற்றும் ரபாடா கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.

Today's Headlines

⭐TNPSC Group 4 exam results released. 

⭐'Golden Son' Neeraj Chopra gets an honorary post in the Indian Army.

⭐In the Delta districts, due to heavy rain, thousands of acres of paddy fields are immersed in water

⭐US-based Indian  Thenmozhi Soundar Raj has been announced as the recipient of the Vaikom Award.

 SPORTS NEWS 

🏀Pakistan - South Africa lost 8 wickets for 235 runs in the cricket match. Tamil Nadu-born Muthusamy and Rabada added 98 runs for the last wicket.

Covai women ICT_போதிமரம்

Tuesday, October 21, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.10.2025

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் 







திருக்குறள்: 

குறள் 972: 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

 உரை: 

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

பழமொழி :

A positive thought is the first step to victory. 

நல்ல சிந்தனையே வெற்றியின் முதல் படி ஆகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அறிவை தேடுங்கள். அது நம்மை ஆற்றல் உடையவனாக ஆக்குகிறது. அறிவு, தனிமையில் நமது தோழன்; இன்பத்திற்கு வழிகாட்டி; துன்பத்திலோ ஆதரவாளர் - விநோபா

பொது அறிவு : 

01.மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?

             100 - 120 நாட்கள் 

100-120  days

02. தனிநபர் ஒருவர் கணக்கு தொடங்க இயலாத வங்கி  எது? 

          இந்திய ரிசர்வ் வங்கி

Indian Reserve  Bank

English words :

Delight-pleasure, 

defend -protect 

தமிழ் இலக்கணம்: 

 பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர் (பண்புப்பெயர்), தொழிற்பெயர் ஆகும்.

அறிவியல் களஞ்சியம் :

 குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

அக்டோபர் 22

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness DayISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம்அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.

நீதிக்கதை

 ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 

அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 

ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 

இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 

நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

22.10.2025


⭐செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு-அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

⭐வட தமிழகத்தை நோக்கி புயல் சின்னம் நகர்கிறது-14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

⭐ இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6,000 டன் காந்தங்களை உற்பத்தி செய்யும் வகையில் ₹7,350 கோடி காந்த உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

⭐சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀IPL (Indian Premier League): ஐபிஎல் 2025 பரீட்சை தற்போது கிளியரான முறையில் நடைபெற்று வருகிறது. பங்கு பெற்ற அணிகள் பல வருடங்களுக்குப் பிறகு வலுவான போட்டிகளை நடத்தி வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சிறந்த வெற்றிகளை பெற்றுள்ளது.

Today's Headlines


⭐Chembarambakkam Lake opened and Warned  to people along the banks of  Adayaaru river for rescues in advance.

⭐Storm symbol moving towards North Tamilnadu due to heavy rain warning for 14 districts.

⭐ The Indian government is planning to set up ₹7,350 crore magnet manufacturing plants in India to produce about 6,000 tonnes of magnets per year. 

⭐151 metric tonnes of firecracker waste removed in Chennai so far last 3 days.

 *SPORTS NEWS* 

🏀IPL (Indian Premier League): The IPL 2025 exam is currently underway in a clear manner. The participating teams are playing strong matches after many years. The Mumbai Indians team, led by Rohit Sharma, has achieved great victories so far.

Covai women ICT_போதிமரம்

Thursday, October 16, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2025

 


உலக வறுமை ஒழிப்பு நாள்

    






திருக்குறள்: 

குறள் 983: 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ 
டைந்துசால் பூன்றிய தூண் 

உரை: 

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

பழமொழி :

success blooms in the soil of consistency. 

தொடர்ச்சியில் தான் வெற்றியின் மலர் மலர்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

அறியாத காலத்தில் வெறும் நம்பிக்கையுடன் செய்வது பக்தி . அறிவு பெற்ற பிறகு செய்வது மெய்யறிவு - ஷேக்ஸ்பியர்

பொது அறிவு : 

01.தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமான ஆறு எது?

கோதாவரி - Godavari

02. இந்திய பசுமைப் புரட்சியின் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?


எம்.எஸ்.சுவாமிநாதன்
M. S. Swaminathan

English words :

Attribute- quality

Author- writer

தமிழ் இலக்கணம்:  

 உரிச்சொல் என்பது ஒரு சொல்லின் பண்புகளை அல்லது தன்மைகளை விளக்கி, பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களுக்கு அடையாக வரும் சொல் ஆகும்.

எ. கா:

நல்ல' மாணவன், 'உயரமான' பெண், 'கடி' மலர், 'சால' தின்றான், மஞ்சள் மாம்பழம்

அறிவியல் களஞ்சியம் :

 இந்த உணர்ச்சி கிறுகிறுப்பு (Vertigo) எனவும் அழைக்கப்படும். உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவனுக்கும், கப்பலில் போகின்ற போது பார்ப்பவனுக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல் சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.

அக்டோபர் 17

உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

நீதிக்கதை

தவளையும் சுண்டெலியும்


அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.


ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா? என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கயிற்றினால் கட்டிக்கொண்டது. 


அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.


அந்த சமயம், தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோஷத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது. 

நீதி : நமக்கு தகுதியானவரை நண்பனாக ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது. 

இன்றைய செய்திகள்

17.10.2025

💫இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.  நிலநடுக்கம் 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தகவல்.

💫 சாலையோரங்கள், சாலை சென்டர் மீடியன் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் தற்காலிக கொடிக் கம்பங்களுக்கு தலா ரூ.1,000 வசூலிக்க தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

💫 வடகிழக்கு பருவ மழை: மீட்பு பணிக்காக தீயணைப்பு படையினர் ஒத்திகை.

💫 தீபாவளிக்கு சொந்த ஊர் போக  கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை - மதுரை இடையே 4 மெமு சிறப்பு ரயில்கள், தாம்பரம் - செங்கோட்டை இடையே 2 சிறப்பு விரைவு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

🏀 விளையாட்டுச் செய்திகள்

💫 தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் மீண்டும் தேர்வு

💫 ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்றநீர் இந்தியாவின் அபிஷேக் மற்றும் மந்தனா.

Today's Headlines: 

⭐A powerful earthquake has struck Indonesia's Papua province today. It was recorded at 6.7 on the Richter scale. The earthquake was centered at a depth of 70 km, reported by the US Geological Survey.

⭐Madras High Court directs Tamil Nadu government to collect Rs. 1,000 each for temporary flagpoles on roadsides, road center medians, and public places obstructing public view.

⭐Northeast Monsoon: Firefighters rehearse for rescue operations.

⭐Additional special trains announced for Diwali to go home. Southern Railway has announced 4 MEMU special trains between Chennai and Madurai and 2 special express trains between Tambaram and Sengottai.

 *SPORTS NEWS* 

🏀 Isari Ganesh re-elected as president of Tamil Nadu Olympic Association 

🏀  India's Abhishek and Mandhana win ICC's September award.

Covai women ICT_போதிமரம்