Monday, August 31, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2026

உலக கடிதம் எழுதும் தினம்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:485

குறள்:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

பொருள்:

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

பழமொழி :


இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“நேரத்தை வீணாக்காத இளைஞன், திறமையை வீணாக்காத எதிர்காலத்தை உருவாக்குகிறான்.”

Thought for the Day :

“A talented youth becomes powerful when talent is guided by practice.”

பொது அறிவு : 

1. தென்னிந்தியாவின் தாஜ்மஹால் என்றழைக்கப்படுவது எது? 

 திருமலை நாயக்கர் மஹால். 

2. தென்னிந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது? 

 காவிரி. 

English words :

1. Tenacious – Holds firmly to a purpose, தளராத உறுதியுடையவர்.


2. Empathetic – Understands others' feelings, பிறர் உணர்வுகளை புரிந்துகொள்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

தெற்கில் மன்னார் வளைகுடா மற்றும் பால்க் நீரிணை உள்ளன.
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியாவின் தீவிர தென்முனையான கன்னியாகுமரி அமைந்துள்ளது.

NMMS :

SAT 

தவறான இணையைத் தேர்ந்தெடு.

 (1) ஜலகண்டேஸ்வரர் கோவில் - வேலூர்

 (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

 (3) வரதராஜ பெருமாள் கோவில் - காஞ்சிபுரம் 

 (4)இராமநாதசுவாமி கோவில் - இராமேஸ்வரம் 

 விடை: (2) ஆதிநாதர் கோவில் - தஞ்சாவூர்

செப்டம்பர் 01

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) அனுசரிக்கப்படுகிறது. 
  • மறைந்துவரும் கலை: இணையம் மற்றும் செல்பேசி காலத்தில், கைகளால் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் குறைந்து வருகிறது. அதைக் காக்க இந்த நாள் உதவுகிறது.
  • உணர்வுபூர்வமான தொடர்பு: கடிதங்கள் மூலம் வெளிப்படும் பாசமும் நினைவுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
  • வரலாற்றுப் பகிர்வு: நம் முன்னோர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கடிதத் தொடர்புகளை நினைவுகூரும் நாளாக இது அமைகிறது. 

நீதிக்கதை

“ஆசையின் விலை ”

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் மிகவும் ஆசை . நண்பர்கள் வைத்திருக்கும் பொருட்களை ப் பார்த்தாலே , அதைப் போலவே தனக்கும் வேண்டும் என்று பெற்றோரிடம் அடம்பிடிப்பான்.

ஒருநாள் அவனுடை ய நண்பன் புதிய வண்ணமயமான பள்ளிப் பையை கொண்டுவந்தான்.

“அம்மா, எனக்கும் இதே மாதிரி பை வேண்டும். இப்போதே வாங்கித் தர வேண்டும்!” என்று அருண் அடம்பிடித்தான்.

அம்மா, “அருண், உன்னுடைய பை இன்னும் நன்றாகத்தானே இருக்கிறது. இப்போது வாங்க முடியாது,” என்று அன்பாகக் கூறினார்.

ஆனால் அருண் கேட்காமல் தொடர்ந்து தொந்தரவு செ ய்தான். அவனுடைய பெற்றோர் மிகவும் வருத்தமடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அருணின் அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மிகவும் கவலையாக இருந்தார். அப்பாவிடம் காரணம் கேட்டபோது, வேலை குறைந்ததால் இந்த மாதம் குடும்பச் செலவுகளை சமாளிப்பது சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.அப்போது அருணுக்கு தான் செய்தது புரிந்தது.

“அப்பா, அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். நம்முடைய குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் நான் தேவையில்லாத பொருட்களுக்காக உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன். இனிமேல் தேவையான பொருட்களை மட்டுமே கேட்பேன்,” என்றான்.

அன்று முதல் அருண் தன்னிடம் இருப்பதை மதிக்கத் தொடங்கினான்.பெற்றோரிடம் அடம்பிடிப்பதையும் விட்டுவிட்டான். அவனுடைய மாற்றத்தைக் கண்டு பெற்றோரும் மகிழ்ந்தனர்.

🌸 நீதி:

நமக்குத் தேவையானவற்றை மட்டும் பெற்றோரிடம் கேட்கவேண்டும்.

தேவையில்லாத பொருட்களுக்காக அடம்பிடித்து அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. இருப்பதைக்கொண்டு மகிழ்ந்து, பெற்றோரின் உழைப்பையும் மதிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.09.2026

🗒️கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “கோயம்புத்தூர் டிஜிட்டல் நிதி மையம்” முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

🗒️தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு  2027-ன் முதற்கட்ட பணிகள் நிறைவு
இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும்.

🗒️பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை விண்ணில் ஏவியது நாசா. 

 *விளையாட்டுச் செய்திகள்*

 🏀இந்தியா, பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.

Today's Headlines

🗒️ Tamil Nadu Chief Minister Joseph Vijay has announced a “Coimbatore Digital Finance Centre” in Coimbatore. It will be developed by the Tamil Nadu Industrial Development Corporation at a cost of ₹400 crore.

🗒️ The first phase of the 2027 Census in Tamil Nadu has been completed. The second phase of the Census will be conducted across India in January and February 2027.

🗒️ NASA has launched a powerful telescope into space to help scientists discover the secrets of the universe.

🏀 Sports News

🗒️ A friendly football match between India and Brazil will be held on October 3.

Covai women ICT_போதிமரம்

Sunday, August 30, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.08.2026

மரியா மாண்ட்டிசோரி




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:484

குறள்:

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்:

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், உலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

பழமொழி :

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

 2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.

பொன்மொழி : 

“கைகளில் கைத்திறன், மனதில் நம்பிக்கை, செயல்களில் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்.”

Thought for the Day :

“Don’t wait for opportunities; build skills that create opportunities.”

பொது அறிவு : 

1.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படுவது எது? 

மதுரை.

 2. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படுவது எது? 

பாளையங்கோட்டை. 

English words :

1)Benevolent – Well-meaning and kind, நற்குணமுள்ளவர் / தாராள மனப்பான்மை உடையவர்.

2)Astute – Sharp and shrewd, கூர்மையான அறிவுடையவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் புவியியல் தமிழ்நாடு இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது.
வடக்கில் ஆந்திரப் பிரதேசம், வடமேற்கில் கர்நாடகம், மேற்கில் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கிழக்கிலும் தென்கிழக்கிலும் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

NMMS :

MAT 

எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது ________________________ ஆகும். 

 (1) அசௌர்யா

 (2) சத்யா

 (3) அகிம்சை

 (4) அரிக்கிரகா 

 விடை: (3) அகிம்சை

ஆகஸ்ட் 31

மரியா மாண்ட்டிசோரி  அவர்களின் பிறந்தநாள் 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். 

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார்.பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

நீதிக்கதை

 🍚 நீதிக்கதை : “அலை பே சி இல்லாமல் உணவு”

ஒரு சிறிய நகரத்தில் நிகில் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சாப்பிடும் நேரத்தில் அலைபேசியில் கார்ட்டூன் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் அவன் அம்மா உணவு பரிமாறியபோது, “அம்மா, போனை கொடுத்தால்தான் நான் சாப்பிடுவேன்!” என்றான்.

அம்மாவும் அவன் சாப்பிட வேண்டும் என்பதற்காக அலைபேசியைக் கொடுத்தார்.

நிகில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டே உணவை சாப்பிட்டான். நாள்கள் செல்லச் செல்ல, அலை பேசி இல்லாமல் சாப்பிடவே முடியாது என்ற பழக்கம் நிகிலுக்கு ஏற்பட்டது. உணவின் சுவையையும், அம்மா அன்புடன் பேசுவதை யும் அவன் கவனிக்காமல் போனான்.

ஒருநாள் அலைபேசியில் சார்ஜ் இல்லாமல் போனது. நிகில் சாப்பிட மறுத்துவிட்டான். அப்போது அவனுடை ய தாத்தா அவனை அருகில் அழைத்து,

“நிகில், உணவு உன் உடலுக்கு சக்தி தருகிறது. அலைபேசி உன் உணவுக்கு துணையாக இருக்க வேண்டியதில்லை . சாப்பிடும்போது உணவை ரசித்தும், குடும்பத்தினருடன் பேசிக்கொண்டும் சாப்பிடக் கற்றுக்கொள்,” என்றார்.

நிகிலுக்கு தன் பழக்கம் புரிந்தது. அன்று முதல் சாப்பிடும் நேரத்தில் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உணவு சாப்பிடத் தொடங்கினான்.

🌱 நீதி:

குழந்தைகள் உணவு சாப்பிடுவதற்காக அலைபேசியை க்கொடுப்பதை விட,

உணவின் முக்கியத்துவத்தையும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தையும் கற்றுக்கொடுப்பது சிறந்தது.

இன்றைய செய்திகள்

31.08.2026

🗒️சென்னை ஐசிஎப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரெயில்கள் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைப்பு.இந்த ரெயில்களை தமிழகத்தில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🗒️உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

🗒️உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

🏀சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர்
 வேலவன் செந்தில்குமார்.

Today's Headlines

🗒️ Two Amrit Bharat trains made at Chennai ICF have been handed over to Southern Railway. Passengers have requested that these trains be operated in Tamil Nadu.

🗒️ Prime Minister Narendra Modi has appealed to people to buy products made in India.

🗒️ At a Yoga event in Tashkent, the capital of Uzbekistan, Indian Prime Minister Narendra Modi was presented with Uzbekistan’s highest award, the Order of Friendship.

🏀 Sports News

🏀 Tamil Nadu player Velavan Senthilkumar won the championship title at the International Squash Open tournament.

Covai women ICT_போதிமரம்

Thursday, August 27, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2026

இராபர்ட் கால்டுவெல்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:49.காலம் அறிதல்

குறள் எண்:482

குறள்:

 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

பொருள்:

காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

பழமொழி :

Never cast the oar till you are out.

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

“ஒரு இளைஞனின் திறமை வளர்ந்தால், ஒரு குடும்பத்தின் எதிர்காலம் வளரும்.”

Thought for the Day :

“Every skill you learn today adds strength to your future.”

பொது அறிவு : 

1.இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் யார்?

வில்லியம் ஹார்வி. 

2.இரத்த வகைகளை கண்டறிந்தவர் யார்? 

லேண்டஸ்டைனர்.

English words :

1. Disciplined – Showing controlled behavior and self-control, ஒழுக்கமான.

2. Compassionate – Feeling sympathy and concern for others, இரக்கமுள்ள

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராமங்களில் வாழும் மக்களின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில், சிறுதொழில், வணிகம் மற்றும் சேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பே கிராமப் பொருளாதாரம். இதை முன்னேற்றினால் இந்தியா தானாக முன்னேறி விடும் என்று காந்தியடிகள் நம்பினார்

NMMS :

SAT - Maths

NMMS வினா 


3, 8, 15, 24, 35, ?


அடுத்த எண் எது?


A) 46

B) 48

C) 50

D) 52


💡 குறிப்பு: எண்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப் பாருங்கள்.


3 → 8 = +5

8 → 15 = +7

15 → 24 = +9

24 → 35 = +11

35 → ? = +13

அதனால், 35 + 13 = 48 

ஆகஸ்ட் 28

இராபர்ட்டு கால்டுவெல்
(திராவிட மொழியியலின் தந்தை)- அவர்களின் நினைவு நாள்

இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814–28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார்.திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் .அதனால் இம்மொழிகளை எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். தமிழ் மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.

நீதிக்கதை

 சிறிய உதவி – பெரிய மாற்றம்

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதில் அவனுக்கு அதிக ஆர்வம் இல்லை.

ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில், வயதான ஒருவர் சாலையோரத்தில் கனமான ஒரு மூட்டையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதை அருண் பார்த்தான். அவர் பலமுறை முயன்றும் மூட்டையைத் தூக்க முடியவில்லை.

அருண் அவரைப் பார்த்துவிட்டு, “எனக்கு பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது” என்று நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

சிறிது தூரம் சென்றபோது, அவனுடைய மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. “நான் இரண்டு நிமிடம் உதவி செய்திருந்தால் என்ன குறைந்துவிடும்?” என்று எண்ணினான்.

உடனே திரும்பிச் சென்று, அந்த வயதானவரின் மூட்டையைத் தூக்கி அவருடைய வீட்டுவரை எடுத்துச் சென்றான்.

அந்த முதியவர் மகிழ்ச்சியுடன், “மகனே, நீ செய்த உதவி சிறியதாகத் தோன்றலாம். ஆனால் இன்று எனக்கு அது மிகப் பெரிய உதவி” என்றார்.

அன்று பள்ளியில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார்:

“நாம் மற்றவர்களுக்கு உதவும்போது நமக்கு என்ன கிடைக்கும்?”

பல மாணவர்கள் பல பதில்களைக் கூறினர்.

அருண் எழுந்து, “அவர்களுக்கு உதவிய மகிழ்ச்சியும், நம் மனதிற்கு கிடைக்கும் நிம்மதியும் கிடைக்கும்” என்றான்.

ஆசிரியர் புன்னகையுடன், “மிகச் சரி. நாம் செய்யும் சிறிய நன்மை கூட ஒருவருடைய நாளையே மாற்றக்கூடும்” என்றார்.

அன்றிலிருந்து அருண், தன்னால் முடிந்த ஒவ்வொரு சிறிய உதவியையும் செய்யத் தொடங்கினான். அவனுடைய அந்த மாற்றத்தைப் பார்த்து, அவன் நண்பர்களும் மற்றவர்களுக்கு உதவத் தொடங்கினர்.

சில நாட்களில், அந்தச் சிறிய கிராமமே ஒருவருக்கொருவர் உதவும் அழகான சமூகமாக மாறியது.

நீதி:

நாம் செய்யும் சிறிய உதவியும் மற்றொருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

“ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளும் போது உலகம் அழகானதாக மாறும்”.

இன்றைய செய்திகள்

28.08.2026

🗒️பி.எம்.எப்.எம்.இ திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருது அமைச்சர் மதன்ராஜா பெற்றுக் கொண்டார்
பி.எம்.எப்.எம்.இ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை மொத்தம் 19,800 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

🗒️ "சீனா - நேபாள எல்லையில் 2ம் கட்ட வெள்ள அபாயம்!சீன அரசு அவசர எச்சரிக்கை.

🗒️இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஜப்பானுடன் பேச்சுவார்த்தை என பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀கிரிக்கெட்: கொழும்பு டெஸ்ட் போட்டியில்  'டிரா' கடைசி நாளில் தோல்வி கண்ட இந்திய அணி.

Today's Headlines

🗒️ Minister Madan Raja received an award for successfully implementing the PMFME scheme. Under this scheme, Tamil Nadu has approved a total of 19,800 businesses so far.

🗒️ Second-stage flood risk at the China-Nepal border! Chinese government issues urgent warning.

🗒️ Piyush Goyal said that India is in talks with Japan to increase the export of Basmati rice from India.

Sports News

🏀 Cricket: India lost to Sri Lanka on the last day of the Colombo Test match, which ended in a draw.

Covai women ICT_போதிமரம்