Monday, April 6, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.04.2026


 







திருக்குறள்: 

குறள் 732: 

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு .  

விளக்க உரை: 

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

பழமொழி :

Believe in yourself and succeed.  

 உன்னை நம்பினால்  வெற்றி பெறுவாய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்

பொன்மொழி : 

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிவருகின்றன -ஏபிஜே அப்துல் கலாம்

பொது அறிவு : 

01. நமது உடலில் ரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் எது?

 வைட்டமின் கே-Vitamin K

02. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

அபெர்டீன், ஸ்காட்லாந்து

 Aberdeen, Scotland,

English words :

Appraisal - evaluation மதிப்பீடு 

Cautious - being careful to avoid risks. எச்சரிக்கை

தமிழ் இலக்கணம்: 

ஒரு, ஓர் வரும் இடங்கள் எவை என்று பார்ப்போம்

உயிர் எழுத்துகள் முன் ஓர் வரும்

ஓர் ஆயுதம்

ஓர் அலை

ஓர் ஒட்டகம்

ஓர் ஈ

ஓர் இலை

உயிர்மெய் எழுத்துகள் முன் ஒரு வரும்

ஒரு காகம்

ஒரு மெத்தை

ஒரு சத்திரம்

ஒரு மரம்

ஒரு பழம்

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் 50% முதல் 80% வரையிலான ஆக்ஸிஜன் கடல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பல்வேறு விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி, தாவர அடிப்படையிலான கடல்வாழ் உயிரினங்களால் நடைபெறுகிறது. கடல்வாழ் பிளாங்க்டன்கள், பாசிகள், கடற்பாசிகள் மற்றும் சில பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

ஏப்ரல் 7

உலக நலவாழ்வு நாள்

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 


வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார்.  தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.

நீதிக்கதை

பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் முடியவில்லை . மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றாலும் அந்த எலியை பிடிக்க முடியவில்லை. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...

 ஆனால்  இளவரசர்  சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதிசயம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது?  என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.


உடனே இளவரசருக்கு சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?

நீதி: 

 எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்

இன்றைய செய்திகள்

07.04.2026

⭐ "12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியாகும்" 

⭐ இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

⭐ இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: புவனேஷ்வர் குமார் சாதனை

Today's Headlines


⭐ “The Class 12 public examination results will be released on May 8.”

⭐ 156 Chinese nationals have been arrested in Sri Lanka for being involved in large-scale international online financial fraud operations.

⭐ Iran has carried out a major drone attack targeting Ben Gurion International Airport in Tel Aviv, Israel.

🏀 Sports News

🏀 Bhuvneshwar Kumar becomes the first fast bowler to take 200 wickets in the Indian Premier League.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment