Wednesday, October 29, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2025

டியாகோ மாரடோனா

     






திருக்குறள்: 

குறள் 482: 

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்குங் கயிறு. 

விளக்க உரை: 

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

பழமொழி :

Effort today brings achievement tomorrow. 

இன்றைய முயற்சி நாளைய சாதனையைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

கற்றது கை மண்ணளவு . கல்லாதது உலகளவு - ஔவையார்

பொது அறிவு : 

01.மலைவாசத்தலங்களில் ஒன்றான டார்ஜிலிங் எந்த மாநிலத்தில் உள்ளது?

மேற்கு வங்காளம் - West Bengal

02. இந்தியாவில் தேர்தல் மூலம் பதவிக்கு வந்த முதல் ஜனாதிபதி யார்?

திரு.ராஜேந்திர பிரசாத்
Dr. Rajendra Prasad

English words :

doubt-skepticism, easily-effortlessly

தமிழ் இலக்கணம்: 

 இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராத ஒரு சொல் ஆகும், இது பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையில் நின்று பொருளை விளக்குகிறது அல்லது தெளிவுபடுத்துகிறது.
 ஏ, ஓ, உம், தான், இன், கு, உடைய, போல, மற்று, சோவென
எ.கா –தான்: "அவன் தான் செய்தான்"
இன்: "மரத்தின் இலை"

அறிவியல் களஞ்சியம் :

 மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

அக்டோபர் 30

மாரடோனா அவர்களின் பிறந்நாள்

1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா. அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது. வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார் மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா. அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா. அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார். நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது. 

நீதிக்கதை

 தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர். 

அதைப்பார்த்த ஒருவர் கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். 

கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர், ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா? எனக் கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். 

தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார். ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா? என்று கேட்டார். 

தந்தையும் மகனும் யோசித்தனர் இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டு பேருமே ஏறிச் செல்வோம் என கழுதையின் முதுகில் ஏறிக் கொண்டனர். 

இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா? என்று கூறினார்கள். 

மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல், இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர். 

இதைகண்டதும் அங்கிருந்தவர்கள், இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது. 

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர். 

நீதி :

மற்றவர்களுக்காக வாழக் கூடாது. ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என அறிந்து கொண்டு அதன்படி செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.10.2025

⭐தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

⭐தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு: 10-ந் தேதிக்கு பிறகு   ஆரம்பம்.

⭐டெல்லியில் செயற்கை மழை பெய்யவைக்க ரூ.3.2 கோடி செலவில் IIT கான்பூர் எடுத்த முயற்சி தோல்வி.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ்: நடப்பு சாம்பியனை வீழ்த்திய 17 வயது இந்திய வீராங்கனை. கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் 17 வயதான அனாஹெத் பங்கேற்று விளையாடி வருகிறார். காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை அனாஹெத் வீழ்த்தியுள்ளார்.

Today's Headlines

⭐Chief Minister inaugurated the welfare schemes worth Rs. 1,020 crore in Tenkasi 

⭐2-week break for northeast monsoon in Tamil Nadu: Starting after 10th November.

⭐IIT Kanpur's attempt to make artificial rain in Delhi for Rs. 3.2 crore failed.

 SPORTS NEWS 

🏀 Canada Women's Open Squash: 17-year-old Indian player defeats defending champion. 17-year-old Anahet from India is participating in the Canada Women's Open Squash series. Anahet defeated the defending champion in the quarterfinals.
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment