Tuesday, October 28, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.10.2025

உலக பக்கவாத நாள் 







திருக்குறள்: 

குறள் 311: 

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா 
செய்யாமை மாசற்றார் கோள் 

விளக்க உரை: 

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

பழமொழி :

Life teaches lessons better than books. 

புத்தகங்களை விட வாழ்க்கை தான் சிறந்த பாடங்களை கற்பிக்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

ஒருவரை தோற்கடிப்பது மிக எளிது .ஆனால் , ஒருவரை வெல்வது மிகக் கடினம் - டாக்டர் ஏ‌.பி.ஜே. அப்துல் கலாம்

பொது அறிவு : 

01.இந்தியாவின் மிகப்பெரிய நதித் தீவு எது?
 

மஜூலி தீவு -அசாம்
Majuli island - Assam

02.இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?

ஜவஹர்லால் நேரு- 16 ஆண்டுகள்
Jawaharlal Nehru - 16 years

English words :

discover-uncover, distinguish-differentiate

தமிழ் இலக்கணம்: 

 குறிப்பு வினைமுற்று என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், செய்பவரை மட்டும் உணர்த்தி முடியும் வினைமுற்று ஆகும்.
எ. கா. பணக்காரன். இதில் காலம் குறிக்கப் படவில்லை. நேற்று பணக்காரனாக இருந்து இருக்கலாம் அல்லது இன்று பணக்காரனாக இருக்கலாம். இவ்வாறு குறிப்பாக காலத்தை உணர்த்துவதால் இது குறிப்பு வினை ஆகும்

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

அக்டோபர் 29

உலக பக்கவாத நாள் (World Stroke Day

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று உலக பக்கவாத நாள் (World Stroke Day அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும். மனித உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் முக்கியமானது, ‘பக்கவாதம்.’ ஒரு மனிதனை செயல்பட விடாமல் ஓரிடத்தில் முடக்கிப்போடும் அபாயகரமான நோயில் இதுவும் ஒன்று.மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக, மூளை செயல் இழப்பதால் இந்த பக்கவாத நோய் ஏற்படுகிறது. வலது, இடது என்று இரண்டு பாகங்களாக பிரிந்திருப்பது மூளை. வலதுபக்க மூளை இடது பக்க உடலையும், இடதுபக்க மூளை வலது பக்க உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இதில் ஒரு பக்கம் செயல்படாமல் போனாலும் மற்றவை செயல்படாது.

நீதிக்கதை

 ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. 


அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது. 

மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. 

முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது. 

பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது. முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. 

ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது. முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது. ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது. 

நீதி :

நிதானம் பிரதானம்.

இன்றைய செய்திகள்

29.10.2025

⭐ மோன்தா புயல்: சீற்றத்துடன் காணப்படும் சென்னை பட்டினபாக்கம் கடற்கரை.

⭐ சென்னை ஐஐடியை சேர்ந்த 3 பேராசியர்களுக்கு மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது.

⭐ டெல்லியில் அதிகரித்த காற்று மாசு: செயற்கை மழை பெய்ய வைக்க புறப்பட்ட விமானம்.

⭐ துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 22 பேர் படுகாயம்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

Today's Headlines

⭐Montha Cyclone: ​​Chennai  Pattinapakkam beach is in a state of fury.

 ⭐3 professors from IIT Madras were awarded the Rashtriya Vigyan Puraskar by the Central Government.

⭐Increased air pollution in Delhi: A Plane takes off to cause artificial rain.

⭐ Powerful earthquake in Turkey: 22 people injured.

 SPORTS NEWS 

🏀 The first T20 between India and Australia is being played today. The Indian team is training to avenge their defeat in the ODI series.
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment