It is easier to destroy than to create
அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்
இரண்டொழுக்க பண்புகள் :
*இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.
*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.
பொன்மொழி :
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.
பொது அறிவு :
உலகின் மிகச் சிறிய பறவை எது?
விடை: ஹம்மிங் பறவை
2. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
விடை: கார்டியாக் தசை
English words & meanings :
டிசம்பர் 19
நீதிக்கதை
மந்திர கிணறு
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்துல அரவிந்த் என்ற நில உரிமையாளர் இருந்தார். அவர் ரொம்ப ஒழுக்கமானவர் தினமும் காலையில சேவல் கூவும்போது எழுந்திடுவார்.
சந்திரன் மற்றும் சூரி அரவிந்திடம் புதுசா வேலைக்கு சேர்ந்தவர்கள.
ஆனா அவங்க ரொம்ப பெரிய சோம்பேறிகளாக இருந்தார்கள். தினமும் எழுந்து வேலைக்கு போவது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
தினமும் ரெண்டு பேரும் ஒரு கிணற்றுக்கு பக்கத்தில் தான் தூங்குவாங்க அப்ப ஒரு நாள் சந்திரன் சூரிகிட்ட “தினமும் காலையில் எழுந்து வேலைக்கு போகிறது ரொம்ப கஷ்டமா இருக்குடா” என்றான். அதற்கு “நானும் அப்படி தான் யோசிக்கிறேன்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் பேசியதை கேட்ட நில உரிமையாளர் அவங்க இரண்டு பேரின் குணங்களையும் தினமும் கவனித்தார். கடைசியா அவர் அந்த இரண்டு பேருக்கும் ஒரு பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.
ஒரு நாள் அந்த இரண்டு பேரும் கிணற்றுக்கு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கிணற்றுக்கு அடியில் இருந்து ஒரு குரல்கேட்டது.
“சூரி,சந்திரன் இன்னும் எவ்வளவு நேரம் தான் தூங்குவீர்கள்! உடனே சென்று வேலையை பாருங்கள் இல்லையேனில் உங்களை விழுங்கி விடுவேன் ” என்று அந்த குரல் சொன்னது.
ஒரே நேரத்துல ரெண்டு பேரும் ரொம்ப பயத்தோட எழுத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்க, “டேய் சூரி உனக்கு அந்த சத்தம் கேட்டதா” என்று சந்திரன் சூரியிடம் கேட்டான்.
“ஆமா, நான் ரொம்ப பயந்துட்டேன் அது ஒரு கெட்ட கனவு இல்லை அந்த சத்தம் இந்த கிணற்றுக்குள் இருந்து தான் வருது நான் வேலைக்கு கிளம்புறேன் உனக்கு வேணும்னா நீயும் வா” என்று கூறி சூரி வேலைக்கு செல்ல தயாரானான்.
“நில்லுடா நானும் உன்னோட வரேன்” என்று சந்திரனும் வேலைக்கு சென்றான்.தினமும் அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இவர்கள் வேலையின் அருமையை அறிந்து கஷ்டப்பட்டு உழைத்த நாள் அன்று அந்த சத்தம் கேட்கவில்லை.
கஷ்டப்பட்டு வேலை செய்யும் போது கிடைக்கும் பலனை மனதார உணர்ந்து கொண்டனர்.
சந்திரன் மற்றும் சூரி அவங்க கேட்ட அந்த மோசமான சத்தத்தை பற்றி சொன்னார்கள். நில உரிமையாளர் இதைக்கேட்டு சத்தமாக சிரித்தார்.
“அது ஒரு மாயமும் இல்லை, கனவும் இல்லை நீங்க இரண்டு பேரும் சோம்பேறியா இருப்பதை நான் கவனித்தேன். உங்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தான் கிணற்றுக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்து அந்த பயங்கரமான சத்தங்களை ஏற்படுத்தினேன். இப்போ உங்களுக்கு புரிகிறதா, இப்ப இருந்து உங்க சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உங்கள் வேலைகளை ஒழுங்காக பண்ணுங்கள்” என்றார்.
அன்றிலிருந்து சூரி மற்றும் சந்திரன் அவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் ரொம்ப கடினமாக நிலத்தில் உழைத்து, சம்பாதித்து ரொம்ப சந்தோஷமா இருந்தார்கள்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment