அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:850
உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
பொருள்:உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
Time stoops to no man's cure.
காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது
இரண்டொழுக்க பண்புகள் :
*நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.
*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.
பொன்மொழி :
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான் ---சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
2. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
யூரோப்பியன் யூனியன் போன்ற சில அரசாங்கங்கள், கரிம வேளாண்மைக்கு பெரும் அளவில் மானியம் வழங்குகின்றன
டிசம்பர் 09
ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்
ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.
1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.
நீதிக்கதை
கண்ணாடி
ஒரு நாள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தகவல் பலகையில் ஏதோ எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சென்றனர்.
அதில்," உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரை நான் பெட்டிக்குள் அடைத்து விட்டேன். அந்தப் பெட்டி அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ளது. அனைவரும் வந்து பார்த்துச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரா,அது யாராக இருக்கும்? என்று அனைவர் மனதினுள் ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் காணும் ஆர்வத்தில் அனைவரும் அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றனர். அங்கே ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
அனைவரும் அந்த பெட்டியின் உள்ளே பார்த்தபின் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்தப் பெட்டினுள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. எவர் பார்த்தாலும் அவர்களது முகமே அதில் தெரிந்தது.
அந்த கண்ணாடியின் அருகில், "உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் தான் காரணம்.நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது
நீதி : உங்கள் வாழ்க்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது.உங்கள் வாழ்க்கையை உங்கள் நண்பனால் மாற்ற முடியாத. நீ நினைத்தால் மட்டுமே உங்களது வாழ்வை மாற்ற முடியும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment