Tuesday, December 3, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2024

   

இந்திய கடற்படை தினம்






திருக்குறள்: 

"பால்: பொருபட்பால்

 அதிகாரம்: புல்லறிவாண்மை

 குறள் எண்:847

 அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
 பெருமிறை தானே தனக்கு.

பொருள்: அரிய மறைபொருளை  மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்."

பழமொழி :

தலைவன் சொற்கேள், நன்னெறி தவறேல்.  Obey your superior, deviate not from the path of rectitude

இரண்டொழுக்க பண்புகள் :  

 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை,வேலையை விரும்பிச் செய்பவன் அரசன் --ஓஷோ

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறும் இடம் எது?

விடை: நீலகிரி

2. பிரம்மபுத்திராவின் பெரும்பகுதி எங்கு பாய்கிறது?

விடை: திபெத்

English words & meanings :

 Nervous     -    பதட்டமாக,

Peaceful   -  அமைதியான

வேளாண்மையும் வாழ்வும் : 

 பூச்சி மருந்துக்கான எதிர்ப்பைக் குறைப்பதற்கு, பூச்சிக் கொல்லிகளை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.

டிசம்பர் 04

இந்திய கடற்படை தினம் 

1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 

ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்

இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்

நீதிக்கதை

 மரப்பொறி


எலி சாதாரணமாக இருக்கும் பொழுது மரத்தாலான பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

 

அதே எலி,அதனை பிடிக்க வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக்கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என்ற பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப் பொருட்களை ஓட்டை போட்டது போல இந்த மரப்பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் தப்பிச் செல்லலாம் என்று நினைக்கவே நினைக்காது. 


அப்படி யோசித்தால் ஐந்தே நிமிடத்தில் மரப்பொறியை விட்டு எலியால் வெளியில் வர இயலும். மரப்பொறியில் சிக்கிய எலியை 5 நாட்கள் வைத்திருந்தாலும் அது தன்னால் வெளிவர இயலாத ஏதோ ஒன்றில் அகப்பட்டது போல அங்கும் இங்கும் அலைபாயும். நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா? என்று ஏக்கத்தோடு பார்க்கும்.


அதன் உயிர் பிழைக்க அதற்கே வழி தெரிந்தாலும் பதட்டத்தில் அதனுடைய மூளை வேலை செய்யாது.


 மனிதனும் பல நேரங்களில் இப்படித்தான் பல பிரச்சனைகளில்  இருந்து வெளியே வர தெரிந்திருந்தாலும், பொறுமையும் முன்யோசனையும் இல்லாததால் தனது வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்கிறான்.

இன்றைய செய்திகள்

04.12.2024

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3,6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவுத்திறன் தேர்வுகள் இன்று நடைபெற உள்ளதையொட்டி சிறப்பு பார்வையாளர்களாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு.

*உயர் கல்வித்துறையில் புதுமைகளை நிகழ்த்தும் தமிழக அரசு: மாநில உயர் கல்வி மன்றம் சார்பில் நடைபெற்ற விளைவு அடிப்படையிலான கல்விப்பட்டறையை (Outcome Based Education Workshop Series) இன்று (டிசம்பர் 3) தொடங்கி வைத்த அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்.

*கடந்த மூன்றாண்டுகளில் 6,22,373 பெண் தொழில் முனைவோர்கள் உருவாகியுள்ளதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.

*சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனை.

*இந்தியாவில் ஹோண்டா ‘ஆக்டிவா e’ மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

*சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வரும்  போட்டியில் நேற்று நடைபெற்ற 7-வது சுற்றும் டிரா  ஆனது.

Today's Headlines

The Secretary of the School Education Department has ordered the appointment of officers as special observers for the National Achievement Tests for 3rd, 6th and 9th grade students studying in government and government-aided schools today.

*Tamil Nadu Government is bringing innovations in the higher education sector proudly says Minister kovi. Chezhiyan while inaugurate the Outcome Based Education Workshop Series organized by the State Higher Education Council today (December 3).

*Minister Kayalvizhi Selvaraj said that 6,22,373 women entrepreneurs have emerged in the last three years.

*Self-help group products sold for Rs. 24 lakhs through e-commerce.

*Honda ‘Activa e’ electric scooter launched in India!

*The 7th round of the World Chess Championship, which is being held in Singapore, between the reigning champion of China, Ding Liren, and the Indian player who won the Grand Master title, Kukesh, was drawn yesterday.

Covai women ICT_போதிமரம்

Monday, December 2, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.12.2024

   

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்






திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

 அதிகாரம் : புல்லறிவாண்மை

 குறள் எண்: 846

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் 
குற்றம் மறையா வழி.

பொருள்:
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்."

பழமொழி :

Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது..- ஆப்ரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. ஒருங்கிணைந்த கடல் உயிர்வாழ் பயிற்சி மையமானது எங்கு தொடங்கியுள்ளது? 

 விடை :  கோவா.        

2.  2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிகப் பெண்மணி விருதினை பெற்றவர் யார் ?  

   விடை: பினா மோடி 

English words & meanings :

 Lucky - அதிர்ஷடமான 

Needy - தேவையுள்ள

வேளாண்மையும் வாழ்வும் : 

 திறனுள்ள கரிம பூச்சிக் கொல்லிகளில், வேம்பு, ஸ்பினோசாட், சோப்புகள், பூண்டு, நாரத்தை எண்ணெய், காப்சைசின் (விரட்டுப் பொருள்), பேசிலஸ் பொபில்லே , ப்யூவாரியா பாசியனா மற்றும் போரிக் அமிலம் ஆகியவை அடங்கும்.

டிசம்பர் 03

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

நீதிக்கதை

பிரேக்குகள்


வகுப்பறையில் ஒரு நாள், இயற்பியல் ஆசிரியர் தனது மாணவர்களிடம்  "வாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளது?"என்று கேட்டார்.


 "நிறுத்துவதற்கு", 

"வேகத்தை குறைப்பதற்கு", "மோதலை தவிர்ப்பதற்கு" "மெதுவாக செல்வதற்கு" 

"சராசரி வேகத்தில் செல்வதற்கு" என்று பல்வேறு பதில்கள் மாணவர்களிடமிருந்து கிடைத்தன.


 ஒரு மாணவன் மட்டும் "வேகமாக ஓட்டுவதற்கு" என்று பதில் கூறினான். அவனைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தேர்வு செய்யப்பட்டது. ஆசிரியர் "ஆம்! பிரேக்குகள் நாம் வேகமாக  செல்வதற்கு தான் வைக்கப்பட்டுள்ளன.உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்றால் நீங்கள் வேகமாக காரை ஓட்டுவீர்களா? நிச்சயமாக வேகமாக ஓட்ட மாட்டீர்கள் " என்று கூறினார்.


மேலும்,"பிரேக்குகள் இருப்பதால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு  வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.இதுபோலத்தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள். தடைகள் வரும் பொழுது நமது வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து வருத்தப்படுகிறோம்.


 உங்கள் வாழ்க்கையில் வரும் "பிரேக்குகள்" உங்கள் வேகத்தை குறைப்பதற்காக அல்ல. வேகமாக செல்வதற்காக தான்."பிரேக்குகள்" கொண்டு வேகமாகச் சென்றால், நாம் விரும்பிய இலக்கை விரைவில் அடையலாம்" என்றும் கூறினார். 

இன்றைய செய்திகள்

03.12.2024

* ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

* மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக டிசம்பர் 9-ல் பேரவையில் தனித் தீர்மானம்: சபாநாயகர் அப்பாவு தகவல்.

* நீர்வழி சுற்றுலா திட்டம் மூலம் 2029-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்.

* சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை.

* சர்வதேச பேட்மிண்டன் போட்டி:  சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.


* செஸ் தரவரிசை புள்ளி:  சாதனை படைத்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி.

Today's Headlines

* The Electricity Board has announced that the deadline for paying electricity bills without penalty in the 6 districts affected by Cyclone Fanjal - Villupuram, Cuddalore, Kallakurichi, Dharmapuri, Krishnagiri and Tiruvannamalai - has been extended till December 10.

* Separate resolution in the Assembly on December 9 against the Madurai tungsten mine: Speaker Appavu informed.

* The Union Minister of Ports, Shipping and Water Transport informed that a target has been set to attract 10 lakh passengers by 2029 through the water tourism project.

* US President Donald Trump has warned that a 100 percent tax will be imposed on BRICS countries if they plan to introduce a new currency to replace the dollar in international trade.

* International badminton tournament: Indian player P.V. Sindhu won the championship title.

* Chess ranking point: Indian player Arjun Erikaisi created a record.

Covai women ICT_போதிமரம்

Sunday, December 1, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.12.2024

 





திருக்குறள்: 

"பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

 குறள் எண்:845

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
 வல்லதூஉம் ஐயம் தரும்.

பொருள்:
அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்."

பழமொழி :

When one door shuts another open.

ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்

 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்

பொன்மொழி :

கற்றவர்களிடம் கற்பதை விட,  கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொழ்..!---+காரல் மார்க்ஸ்

பொது அறிவு : 

1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது? 

விடை : பிப்ரவரி 28.       

 2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?    

விடை : பஞ்சாப்

English words & meanings :

 
Lonely. -  தனிமை,

Loving. -   அன்பான

வேளாண்மையும் வாழ்வும் : 

வேம்பு  கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும். 

டிசம்பர் 02

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

 சாவி


ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து  விடுகிறாயே எப்படி?


அதற்கு சாவி,"நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.ஆனால், நான் பூட்டின் இதயத்தை 

தொடுகிறேன். என்னுடைய அன்பினால் பூட்டு விரைவில் திறந்து விடுகிறது"என்று பதில் கூறியது.


 நீதி: அன்பே உலகை ஆளும்.

இன்றைய செய்திகள்

25.11.2024

* புதுச்சேரியில் வரலாறு காணாத கடும் மழை பொழிவு காரணமாக பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

* வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

* இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவுகணையை வாங்க யுஏஇ, வியட்​நாம், இந்தோ​னேசியா ஆகிய 3 நாடுகள் விருப்பம் தெரி​வித்​துள்ளன.

* FBI இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்.

* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி; இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி.

* சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். 

Today's Headlines

* The Indian Army is engaged in rescuing victims of  unprecedented heavy rains in Puducherry.

* Water is being released from the Veeranam Lake catchment area due to continuous rains.

* UAE, Vietnam and Indonesia have expressed interest in buying the Brahmos supersonic missile jointly developed by India and Russia.

* Trump recommends Indian-origin Kash Patel as FBI director.

* Junior Asia Cup hockey; Indian team got 'hat trick' victory.

* International badminton: P.V. Sindhu advances to final.
 Prepared by

Covai women ICT_போதிமரம்