பால்: பொருட்பால்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:448
இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
பொருள்: கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்
A kick from the wise is better than a kiss from a fool
இரண்டொழுக்க பண்புகள் :
*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.
பொன்மொழி :
"எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால், அதில் ஆறு மணி நேரம் நான் கோடாரியை கூர்மை படுத்துவேன்.----ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு :
1.ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
2.நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும்.
மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளை மேய்க்கும் ஆநிரையின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.
ஆகஸ்ட் 09
பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
நீதிக்கதை
முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார்
பூஞ்சோலை என்பது ஓர் அழகான கிராமத்தில் மணிவண்ணன் எனபவன் வாழ்ந்து வந்தான்.
அவன் நல்லவன்தான். எனினும், எந்த ஒரு பிரச்சினையிலும், முயற்சி செய்யாமல் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்றே எண்ணுவான் .
தனக்குத்தானே எவன் ஒருவன் உதவி செய்து கொள்கிறானோ அவனுக்குத்தான் இறைவனும் உதவுவார் என்ற கருத்து அவனது நெஞ்சில் பதியாமல் போனது.
அவனுடைய நெருங்கிய உறவினர் திருமணம் பூஞ்சோலைக் கிராமத்திற்கு அடுத்ததாக இருந்த கிளியனூரில் நடைபெறுவதாக இருந்தது . மணிவண்ணனும் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தான்.
கிளியனூரை அடைகின்ற வேளையில் ஒரு பெரிய பள்ளத்தில் வண்டிச் சக்கரங்கள் புதைந்து விட்டன. மாடுகளும் சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முடியாமல் தவித்தன.
மணிவண்ணன் மிகவும் பயந்து விட்டான். மாடுகளாவது சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால், மணிவண்ணனோ எவ்விதச் சிறு முயற்சியையும் செய்யாமல் விழித்துக்கொண்டிருந்தான் .
உடனே அவன் “கடவுளே என்னை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று” என்று வேண்டினான்.
உடனே வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. “மனிதனே, நீ, சேற்றில் சிக்கிய உன் மாடுகளையும், வண்டியின் சக்கரங்களையும் மீட்பதற்கு சிறிதளவு கூட முயற்சியே செய்யவில்லை. வெறுமனே என்னை அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் தன்னால் ஆன முயற்சியைச் செய்பவர்களுக்குத்தான் நான் உதவுவேன்.முயற்சி செய்யாதவர்களுக்கு நான் நிச்சயம் உதவ மாட்டேன்” என்று கூறியது.
உடனே மணிவண்ணன் தனது தோள்பலத்தால் சக்கரத்தில் முட்டுக்கொடுத்து வண்டியை தூக்கி நிறுத்தி மாடுகளை அதட்டி ஓட்டினான். இப்பொழுது வண்டி சேற்றிலிருந்து மீண்டது. மணிவண்ணன் முயற்சியின் சிறப்பை அறிந்து கொண்டான்.
கடவுள் வானிலிருந்து அவனை ஆசிர்வதித்தார்.
நீதி : முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவ மாட்டார். எனவே, நாம் வெற்றி பெற, முயற்சியைச் செய்ய வேண்டும். இறைவன் அருள் நமக்குத் தானாகவே கிடைக்கும்.
இன்றைய செய்திகள்
Super story- try try succeed story.
ReplyDeleteThank you mam..
ReplyDelete