பால்: பொருட்பால்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 445
சூல்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
பொருள்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
அரைக் காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது
One cloud is enough to hide all the sun
இரண்டொழுக்க பண்புகள் :
*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.
பொன்மொழி :
"உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது.---சார்லி சாப்ளின்
பொது அறிவு :
1. ஓர் உடலின் வேதிச் செயல்களை செய்வது எது ?
என்சைம் .
2. அகில வானொலி ஒலி பரப்பு முதன் முதலில் தொடங்கப்பட்ட இடம் எது.?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இந்த மாதத்தில், சூரியனின் ஒளிக்கதிர்கள் சரியான அளவிலான அதிர்வலை கொண்ட சக்தியோடு வெளிப்பட்டு, பூமியை வந்தடையும். அதோடு பிராணவாயுவும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் ஆடி மாதம் விளங்குகிறது.
நீதிக்கதை
காக்கை நண்பன்
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வந்தார்.
அவரது நிலத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய மரத்தில் அதிக காகங்கள் வாழ்ந்து வந்தன.
எப்போதும் தன் வீட்டை சுற்றியே வரும் காகங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.காகங்களுக்கு தன் வீட்டில் இருக்கும் உணவையும் தானியங்களையும் கொடுத்து மகிழ்வார்.
ஒரு நாள் அவருடைய விவசாய நிலத்திற்கு அதிகமான வெட்டுக் கிளிகள் வந்தன. வந்த வெட்டுக்கிளிகள் அவருடைய தானியத்தை மட்டும் இல்லாமல் பயிர்களையே வீணாக்கின. அதைப் பார்த்த விவசாயி மிகவும் வருத்தப்பட்டார்.
விவசாயி மிகவும் கஷ்டப்பட்டு வெட்டுக் கிளிகளை விரட்ட முயற்சி செய்தார். ஆனால் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் அவரால் அனைத்தையும் விரட்ட முடியவில்லை.
தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்ற வருத்தத்துடன் நெல் பயிர்களை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
விவசாயியை வருத்தத்துடன் பார்த்த காகங்கள் உடனடியாக அவருக்கு உதவ வயலில் சென்று வெட்டுக் கிளிகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்தன.
தனது பயிர்களை வெட்டுக்கிளிகளிடமிருந்து காப்பாற்றிய காக நண்பர்களை பார்த்து விவசாயி மகிழ்ச்சி அடைந்தார்.
இன்றைய செய்திகள்
Daily story super.
ReplyDelete