கலைஞர் மு. கருணாநிதி |
பால்: பொருட்பால்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:446
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.
பொருள்: தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு, அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.
அலைகடலுக்கு அணை போட முடியுமா?
Against God’s wrath no castle is proof
இரண்டொழுக்க பண்புகள் :
*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.
பொன்மொழி :
" யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே"-----தந்தை பெரியார்
பொது அறிவு :
1. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலட்சுமி
2.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்?
ஜி.வி.மவ்லாங்கர்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும்.
ஆகஸ்ட் 07
இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்
இரவீந்தரநாத் தாகூர் |
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.
நீதிக்கதை
நன்றியுணர்ச்சி
வேடன் ஒருவன் வேட்டையாட சென்றான். அவன் விரித்த வலையில் வழி அறியாமல் வந்த கழுகு ஒன்று மாட்டிக்கொண்டது.
அவன் அந்த கழுகை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதனுடைய இறக்கைகளை வெட்டிவிட்டு சங்கிலியால் மரத்தில் கட்டி போட்டான்.
அந்த வழியாகச் சென்ற இரக்கம் உள்ள ஒருவர், வேடனிடம் கழுகை காப்பாற்ற எண்ணி வேடனிடம் விலை கொடுத்து கழுகை தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
புதிய இறக்கைகள் முளைக்கும் வரை பாதுகாப்போடு வளர்த்து வந்தார். புதிய இறக்கைகள் முளைத்த உடன் அதனை காட்டுக்குள் செல்ல அனுமதித்தார்
காட்டுக்குள் சென்ற கழுகு ஒரு முயலை பிடித்து வந்து தனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காக தன்னை காப்பாற்றியவருக்கு பரிசாக வழங்கியது.
அதனைப் பார்த்த நரி கழுகிடம் "முயலைப் பிடித்து சென்று வேடனிடம் கொடுத்திருந்தால் மற்றொரு முறை உன்னை வேட்டையாட மாட்டார்" என்று கூறியது.
அதற்கு கழுகு "அவர் எத்தனை முறை வந்தாலும் என்னை வேட்டையாட வருவார். ஏனெனில் வேட்டையாடுதல் அவருக்கு தொழில். நான் எனது நன்றியுணர்ச்சியை காண்பிப்பதற்காகவே என்னை காப்பாற்றியவருக்கு பரிசளித்தேன்" என்று கூறியது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment