திருமதி. இந்திராகாந்தி |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் :287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்
விளக்கம்:
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது..
Every poor man is counted a fool
ஏழையின் சொல் சபை ஏறாது
இரண்டொழுக்க பண்புகள் :
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி :
ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம் என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”
பொது அறிவு :
1. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
'2. "சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் யார்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
மாம் பூ: பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன
அக்டோபர் 31
இந்திரா காந்தி அவர்களின் நினைவுநாள்
நீதிக்கதை
ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன.
ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும். தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!" முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.
"என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!" குரங்கு சொல்லியது.
"ஆமாம்... ஆமாம்...!" ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.
"நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்"அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!" என்றது எலி.மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!" பெருமிதம் பொங்கக் வெட்டுக்கிளி. கூறியது.நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!" சொல்லியது குரங்கு.
"எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?" கேட்டது வெட்டுக்கிளி
"போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?" சந்தேகம் எழுப்பியது எலி.நடுவராக நானிருக்கிறேன்!" திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.
"நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். முயலையும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!" என்று காகம் தன் முகவரி கூறியது.அப்படியே அனைத்தும் சரி என்றது.
மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி கொண்டு இருந்தன. போய்க்
கொண்டிருந்த
பொழுது குருவி ஒன்றுவலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.
"எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!" குருவி பலகீனமாக உதவி கேட்டது.
“நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!" கடுமையாக கூறியது. குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.
அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.
"அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண்கள் போட்டு விட்டேன். உதவும் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் மதிப்பெண்கள் ஒதுக்கிஇருக்கிறேன்!" என்றது.காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.
அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.
முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! முயல் நண்பன்தான்! ஆபத்திலிருந்து காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது!
ஆபத்திலிருந்து ஒரு முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது.
நீதி : நாம் யாருக்காவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்கு எதிர்பாரத பயனைத்தரும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment