தாமஸ் ஆல்வா எடிசன் |
திருக்குறள் :
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்
குறள் :280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
விளக்கம்:
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
East or west, home is best
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
இரவு உணவு குறைத்திட ஆயுள் நீடிக்கும்.-- பல்கேரியா
பொது அறிவு :
1. உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு?2. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சங்குப்பூ:சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.
அக்டோபர் 18
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சார்லஸ் பாபேஜ் அவர்களின் நினைவுநாள்
சார்லஸ் பாபேஜ் |
நீதிக்கதை
போராட்டமே வாழ்க்கை
ஒரு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் இரண்டு சிறு எறும்புகள் அடித்துச் செல்லப்பட்டு மிதந்தன. ஒரு எறும்பு நதியில் குறுக்காக நின்று பிரவாகத்தைத் தடுக்க பெருமுயற்சி செய்து ”மேலே போக விடமாட்டேன் இந்த நதியை!” என்று கூறிக்கொண்டே குறுக்கே படுத்துக்கொண்டு கறுவியது. நதியின் வேகத்தினால் தாறுமாறாக அலைக் கழிக்கப்பட்டது. நதியின் போக்கில் மயிரிழை மாறுதல் செய்ய முடியாவிட்டாலும், ”நதியை எப்படியாவது நிறுத்தியே தீருவேன். உயிரே போனாலும் இந்த நதியை அடக்கியே தீருவேன்” என்று அலறிக்கொண்டே திணறியது. பாவம், அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது நதிக்கு அந்த எறும்பின் குரல் கேட்கவும் இல்லை. அதன் இருப்பை நதி உணரவும் இல்லை. மற்றொரு எறும்போ தன்னை அந்தப் பிரவாகத்தில் விட்டுவிட்டது. அது நதியின் குறுக்காக அல்ல, நேராகக் கிடந்தது நதி போகும் திசையில் மிதக்க வசதியாக, அதன் மனதில், தான் நதிக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் போதும் என்று எடுத்துக் கொண்டது. இந்த இரு எறும்பைப் பற்றியும் நதிக்குத் தெரியாது: எறும்புகளின் போக்கைப் பற்றியும் தெரியாது. நதிக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அந்தத் எறும்புகளுக்கு இருந்தது. நதியுடன் ஓடும் எறும்பு, நதியின் ஓட்டத்துடன் ஓட்டமாக ஓடிக்கொண்டே இருந்தது. நதியுடன் போராடும் எறும்போ வலியும், வேதனையும், துக்கமும் அலைக்கழிக்க உடலெல்லாம் ரணத்துடன் ஓடியது. நதியை ஒன்று ஏற்றுக் கொண்டது; மற்றொன்று எதிர்த்து போராடியது. போராடினால் வலி ஏற்படும்; அந்த வலியை ஏற்றுக்கொண்டால் விடுதலை கிடைக்கும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment