Tuesday, October 10, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.10.2023

   

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :275

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.

விளக்கம்:


எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.


பழமொழி :

Do good and have good

நன்மை செய்து நன்மை பெற வேண்டும்

இரண்டொழுக்க பண்புகள் :


1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
 

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

பூமியில் உள்ள மனித இனத்தை நாம் பாதுகாக்க கடவுள் நமக்கு பெண் குழந்தைகளை கொடுத்துள்ளார்” - அமித் ஆபிரகாம்

பொது அறிவு :

1. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

2. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

விடை: டேவிட் ஜசன் ஹோவர்

English words & meanings :

 altimeter - an instrument use to measure the height from ground level உயரமானி. fathometer - depth finder using ultra sound waves ஆழம் அறிய உதவும் ஒரு வகையான எதிரொலி ஒலிப்பான்

ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து என்று சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 

அக்டோபர் 11

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl ChildDay of the GirlInternational Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.[1][2] இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.

நீதிக்கதை

 உயிரைக் காப்பாற்றிய கை.         

                                             ஒரு ஊரில்  ஒரு  பெண்மணி இருந்தார். அவளுடைய வலது கை முழங்கையிலிருந்து விரல்கள் வரை வெண்மையும், கருமையும் கலந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.

ஒரு நாள் அந்த பெண்மணியின் மகள் எட்டு வயதுச் சிறுமி, “அம்மா! நீ அழகாக இருக்கிறாய். ஆனால், உன்னுடைய வலதுகை பார்ப்பதற்கு விகாரமாய் இருக்கிறதே ஏன்?” என்று கேட்டாள்.

“அருமை மகளே! ஒரு பொருள் அல்லது உடல் உறுப்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதைக் கொண்டே அதன் அழகையும், விகாரத்தையும் மதிப்பிடவேண்டும்” என்றாள் தாய்.

“எனக்குப்புரிய வில்லை, புரியும்படி சொல்” என்று கேட்டாள் சிறுமி.

“நீ கைக் குழந்தையாக இருந்தபோது தொட்டிலில் துங்கிக் கொண்டு இருந்தாய் திடீரென்று, ஒரு நாள் நம் வீட்டில் தீப்பற்றி எரிந்தது. அடுத்த வீட்டுக்காரர்கள் ‘குழந்தை, குழந்தை’ என்று கத்தினார்களே தவிர, ஒருவரும் வீட்டினுள் சென்று, குழந்தையைக் காப்பாற்றத் துணியவில்லை.

“என் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல், உள்ளே ஓடி, தொட்டியில் கிடந்த உன்னை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது, தீக்கொள்ளி ஒன்று என் வலதுகையில் விழுந்துவிட்டது. அது கொப்பளமாகி, வெண்மையும், கருமையுமாக இப்படி ஆகிவிட்டது.

“இந்தக் கை ஒரு உயிரைக் காப்பாற்றியதே என்ற நினைப்பில் வெண்மை, கருமை விகாரம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை” என்றாள் தாய்.

“அம்மா! என்னைக் காப்பாற்றிய இந்தக் கை எப்படி இருந்தால் என்ன?” என்று தாயின் கையை முத்தமிட்டாள் சிறுமி.

இன்றைய செய்திகள்

11.10.2023

*சென்னை உள்நாட்டு முனையத்தில் விமானங்களில் மாறி செல்லும் பயணிகளுக்கு புதிய வசதி.

*காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. 13,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழகம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளது.

* அஸ்தினாபுரத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி: குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு.

 ரூ.50, 000 க்கு கீழ் உள்ள வணிகவரி -வட்டி தள்ளுபடி: முதல்வர் 
மு. க. ஸ்டாலின் அறிவிப்பு. 

*உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

*உலகக்கோப்பை கிரிக்கெட் :
இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.

Today's Headlines

*New facility for passengers changing flights at Chennai domestic terminal.

 *The Cauvery Committee meets today.  Tamil Nadu has decided to request to release water at the rate of 13,000 cubic feet for 15 days.

 * People panic due to mysterious fever in Astinapuram: Sanitation disorder  due to piled up garbages.

 * Business Tax-Interest  below Rs.50,000 will be Rebated: CM
 M. K.  Stalin's announcement.

 *World Cup Cricket: Security arrangements are intense for the India-Pakistan match.

 *World Cup Cricket:
 India Afghanistan conflict today.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment