திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
விளக்கம்:
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
பழமொழி :
A tree is known by its fruit
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.
2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.
பொன்மொழி :
உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே
காமராஜர்
பொது அறிவு :
1.காமராஜர் எந்த வகுப்பு வரை படித்திருக்கிறார்?
ஆறாம் வகுப்பு
2. தமிழக முதல்வராக காமராஜர் பதவி ஏற்ற ஆண்டு?
1954
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
ஜூலை 15
நீதிக்கதை
நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.
அரசன் கோபமாக " நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு" என்றுக் கேட்கிறார்.
சிற்பி "இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்கிறார்.
"இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள்" என்கிறார்.
அரசன் "இதில் என்ன விஷயம் இருக்கிறது" என்கிறார்.
முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.
சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.
சிற்பி "மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்" என்கிறார்.
இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.
இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.
இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.
பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.
இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.
சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.
அப்போது இதில் "யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்கிறார்.
என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.
அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.
சிற்பி "நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் வாழ்வில் உயர முடியும். கேட்பவற்றில் நல்லவைகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும். நல்லவைகளை மாத்திரம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதனை இளவரசர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே இந்த பொம்மைகளை தருகிறேன்" என்றார். அரசனும் சிற்பிக்கு நன்றி கூறினார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment