Sunday, July 2, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.23

  



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம்:

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

பழமொழி :


A little pot is soon hot

சிறிய பானை சீக்கிரம் சூடாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்

2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

“ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்” – ரெபேகா வுட்ஸ்டாக

பொது அறிவு :

1. இந்திய தேச தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: மகாத்மா காந்தி

2. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?


விடை: இந்திரா காந்தி.

English words & meanings :

 lawn - a grassy ground புல்வெளி; mahout - elephant driver யானைப்பாகன்

ஆரோக்ய வாழ்வு :

கருணைக்கிழங்கு : சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

நீதிக்கதை

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

இன்றைய செய்திகள்

03.07. 2023

*மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார் அஜித் பவார். 

*போர் விமான என்ஜின் தயாரிப்பு- இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது பிரான்ஸ் நாடு.

*மொழி என்பது நம்மைப் பொறுத்தவரை ரத்தமாக உள்ளது- வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை மாநாட்டில் காணொளி மூலம் முதலமைச்சர் பேச்சு.

*சென்னையில் தக்காளியின் விலை ₹ 10 அதிகமாகி ஒரு கிலோ ₹130க்கு விற்பனை. தக்காளியின் விலை உயர்வு காரணமாக நியாய விலை கடையில் விற்க ஆலோசனை.

*யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

*தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையுடன் வந்த தமிழக பெண்கள் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு.

Today's Headlines

*Ajit Pawar took charge as Deputy Chief Minister of Maharashtra.

 * France has offered to help India in the production of fighter aircraft engines.

 *Language is blood for us- Chief Minister's video speech at North America Tamil Sangh Council conference.

 *In Chennai, tomato prices increased by ₹ 10 to ₹ 130 per kg.  Advice to sell at fair price shop due to rise in price of tomatoes.

 * Tourists are disappointed because of the ban on the Parijam lake in Kodaikanal due to the movement of elephants.

 *Enthusiastic welcome to the Tamil Nadu women's football team who came with the National Championship trophy.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment