திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
விளக்கம்:
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செய்யக்கூடாது
பழமொழி :
A penny saved is a penny gained
சிறு துளி பேரு வெள்ளம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.
2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்”- ஹரியட் பீச்சர் ஸ்டோ
பொது அறிவு :
1. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரு.
2. 1761 இல் மராத்தியர்கள் முகலாயர்களை தோற்கடித்த போரின் பெயர் என்ன?
விடை: மூன்றாவது பானிபட் போர்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நீதிக்கதை
கோபத்தின் கதை!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து
கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும்
நிறைய ஆணிகளையும் கொடுத்தார். "இனிமேல் கோபம் வரும் போது எல்லாம்
வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்".
முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம்
கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை
என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும். அல்லவா? எனவே இனி ஒருபோதும் கோபம் கொள்ளாதே "என அப்பா கூற வாலிபன் ஏற்றுகொண்டான்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment