திருக்குறள் :
இயல்: பாயிரம்
அதிகாரம்: வான்சிறப்பு
குறள் எண்:11
குறள்: வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று.
பொருள்: மழைபருவம் தவறாது பெய்வதனால் தான் உலகம்
வளத்தோடு வாழ்கின்றது. எனவே அதை அமுதத்திற்கு
நிகராக என்ன வேண்டும்.
பழமொழி :
You may know by a hand full of the whole sack
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன்.
2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.
பொன்மொழி :
தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது......அம்பேத்கர்
பொது அறிவு :
1. புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன?
9 துளைகள்.
2 .தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடிய தன்மையுடையது.
பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுளுக்கு பிடிக்காது. குழந்தையின் முதுகெலும்பு சீர்படும்.
கணினி யுகம் :
டிசம்பர் 11
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்
பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
பன்னாட்டு மலை நாள்
பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.[1]
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.[2]
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
Covai Women ICT குழுவின் மூலமாக ஒவ்வொரு நாளும் காலை வழிபாட்டுச் செயல்பாடுகளுக்கான செயல்களைத் தொடர்ந்து,எப்படி? தொடர்ந்து...தயாரித்து அனுப்பி கொண்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரிய விடயம்.எனவே, நம்முடைய பள்ளி மாணவ க் கண்மணிகளின் வளர்ச்சிக்காகவும், ஆசிரிய பெருமக்களுக்கு உதவியாக இருக்கும் பொருட்டும் தாங்கள் தயாரித்து அனுப்பிக் கொண்டிருக்கிற இந்த விடயங்களை தொடர்ந்து செய்யுங்கள். உங்களுடைய முயற்சிகளை எல்லாம் வல்ல கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. உங்கள் குடும்பங்களையும், நீங்கள் சந்தித்த, உங்களைச் சந்தித்த, நீங்கள் சந்திக்க போகிற, உங்களைச் சந்திக்கப் போகிற அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய செயல் எதிர்காலத் தலைமுறையினரான சிறார்களுக்கு மிகுந்த பலனையும் பயனையும் அளிக்கப்போகிறது, அளித்துக் கொண்டுமிருக்கிறது.தொடர்ந்து செய்யுங்கள்.வாழ்த்துக்களும் செபங்களும். தோழமையுடன் உலக நலம் விரும்பிகளுமள் ஒருவன்.நன்றி.
ReplyDelete