திருக்குறள் :
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
பழமொழி :
Both the child and God are there where they are praised.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும்.
2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்
பொன்மொழி :
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.------ அப்துல்கலாம்
பொது அறிவு :
1.இந்தியாவில் மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம்.
2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
சுப்பீரியர் ஏரி.
English words & meanings :
No clue - no idea, ஒன்றும் தெரியவில்லை,
I am in - count on me, என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்
ஆரோக்ய வாழ்வு :
விட்டமின் C - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியமான தோல், நகம், முடி இவற்றை தரும். உணவுப் பொருட்கள் - சிட்ரஸ் பழங்கள், கொய்யா, அன்னாசி பழம் ஆகியவற்றில்
கணினி யுகம் :
Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)
Windows Logo+E (Open My Computer)
நவம்பர் 24
சுசானா அருந்ததி ராய் அவர்களின் பிறந்தநாள்...
சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள் , அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார். இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.
நீதிக்கதை
DPA story 2
ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் கேட்டான். ‘நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்’ என்று பதில் வந்தது. ‘இதற்குத் தீர்வே இல்லையா?’ என்று மன்னன் முறையிட்டான். ‘தலை’ முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு ‘மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்’ என்று சொன்னது.
மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் ‘ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?’ என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். ‘வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்’ என்று சொல்லி விட்டார்.
வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை ‘எனக்குத் தெரியாது. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.
மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே ‘ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன’ என்று சொன்னது. அப்போது மன்னன் ‘நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்’ என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் ‘கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன’ என்றது.
தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.
நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீடித்திருக்கும்.
இன்றைய செய்திகள்
24.11.21
★தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
★பள்ளிகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
★தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; 25, 26-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
★நவம்பர் 25-ம் தேதி முதல் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் கட்டணங்களை 25% வரை உயர்த்துவதாக வோடாபோன் ஐடியா அறிவித்துள்ளது.
★குழந்தைகளைத் தாக்கும் கரோனா அலை: 5 முதல் 11 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் இஸ்ரேல்.
★இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி.
Today's Headlines
* Those who inform about the production of banned plastics will be awarded declared by Tamilnadu Pollution Control Board.
* As the School Syllabus is reduced there definitely will be public exams for the students says Education Minister.
* There is a chance of heavy rain for 4 days. On 25th and 26th the coastal areas will get heavy rain warnings from Chennai Metrological Department.
* From November 25th onwards for all the prepaid schemes Vodafone Idea is going to hike the amount by 25%.
* As the Corona started to affect children Israel is taking measures to vaccinate the children of age 5 to 11.
* In the Indian Super League Bombay won by defeating Goa.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment