திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:அமைச்சியல்
அதிகாரம்: தூது
குறள் எண்:687
குறள்: கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
பொருள்: தன் கடமை இன்னது எனத் தெளிவாக அறிந்து
அதை நிறைவேற்றும் இடத்தையும் காலத்தையும்
அறிந்து சிந்தித்து செயல்படுபவனே சிறந்த தூதன் ஆவான்.
பழமொழி :
Behind an able man, there is always another man.
ஒரு வித்தகனுக்கு பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன்.
2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.
பொன்மொழி :
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம். ----சிம்மன்ஸ்
பொது அறிவு :
1. காவேரி நதி வங்காள விரிகுடாவில் எந்த இடத்தில் கலக்கிறது?
பூம்புகார்.
2. உலகிலேயே அதிக ஆழத்தை கொண்ட நதி எது?
கொங்கோ நதி.
English words & meanings :
set off- to leave on a journey, பயணம் புறப்படு.
Set off - to make an alarm start ringing. அலாரம் வைத்தல்
ஆரோக்ய வாழ்வு :
கோவைக்காய் நார்ச்சத்து நிறைந்தது எனவே மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஹார்மோன் சுரப்பை சீராக்கும். இதய படபடப்பை போக்கி மன அழுத்தம் தவிர்க்கும்.
கணினி யுகம் :
Ctrl+End - It is used to move the cursor to the last slide. For example, your PowerPoint file has 100 slides, and you want to move the cursor to the last slide, you can press
Ctrl+End. Ctrl+Backspace - It will delete the word to the left of the cursor.
டிசம்பர் 01
உலக எய்ட்ஸ் நாள்
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
எயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.
இன்குலாப் அவர்களின் நினைவுநாள்
இன்குலாப் (Inkulab, பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 1, 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.[1] ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.[2]
நீதிக்கதை
கிளியின் நட்பு
கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.
அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.
அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.
கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.
இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.
நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
01.12.21
★தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
★முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 4-வது முறையாக 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
★இந்த ஆண்டு 80% அதிகமாக மழை பெய்துள்ளது; தமிழகம், புதுச்சேரியில் இனி மழை குறையும்: சென்னை வானிலை மையம் தகவல்.
★ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான பாடத்திட்டத்தை பள்ளி கல்வியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் கூறியுள்ளார்.
★சிறுவர்களிடையே அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சினை: தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்.
★ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரும் அச்சறுத்தலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
★ட்விட்டர் புதிய சிஇஓவின் வயது 37: உலகின் டாப் 500 நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளில் மிகவும் இளமையானவர்.
★தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் பங்கஜ் அத்வானி.
★ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி கொரியா செல்கிறது.
Today's Headlines
* The Epidemic restrictions will continue till 15.12.2021 announced Tamil Nadu CM.
* After the verdict of the court, the Mullai Periyaar Dam reached its full capacity of 142 for the 4th time. The farmers feel happy.
* This year Tamil Nadu and Puducherry received 80% more rains. Hereafter there will be a slow down in the raining says Chennai Metrological Department.
* Ayurveda and Yoga based education will be added to the school curriculum says the central minister.
* There is an increase in the obesity problem among school-going children says National Family Research Centre.
* Omicron virus will become a threat to the world. Says World Health Organisation.
* Age of the new Twitter CEO is 37. Among the top 500 organizations' CEO, he is the youngest.
* In the World Snooker Championship Pankaj Adwani entered into the second phase.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment