திருக்குறள் :
பழமொழி :
A fog cannot be dispelled with a fan
சூரியனை கையால் மறைக்க முடியுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.
2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.
பொன்மொழி :
தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.-----ஒரிசன் ஸ்வெட் மார்டென்
பொது அறிவு :
1. கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
2. பச்சை தங்கம் என்று அழைக்கப்படுவது எது?
காடுகள்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்
அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள்.
சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது.
இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.
இப்படி தினமும் குடித்து வந்தால், கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.
- வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.
- சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
- வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
- வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
- வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
- நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
- வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.
கணினி யுகம் :
நவம்பர் 10
மிக்கைல் கலாசுனிக்கோவ் அவர்களின் பிறந்தநாள்...
மிக்கைல் கலாசுனிக்கோவ் (லெப்டினன்ட் ஜெனரல் மிக்கைல் டிமோபெயெவிச் கலாஷ்னிக்கோவ், Mikhail Timofeyevich Kalashnikov, ரசிய மொழி: Михаи́л Тимофе́евич Кала́шников, நவம்பர் 10, 1919 - டிசம்பர் 23, 2013) உருசிய சிறு படைக்கலன்களை வடிவமைத்தவர், இவர் வடிவமைத்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றது ஏ கே 47 வகை எந்திரத் துப்பாக்கியாகும். இவரை கலாஷ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பர்.
மார்ட்டின் லூதர் அவர்களின் பிறந்தநாள்...
மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment