Wednesday, April 10, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.04.19

திருக்குறள்


அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம்:

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்க கூடாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

பழமொழி

கட்டுச்சோறும், சொல்புத்தியும் ரொம்ப நாள் தாங்காது

Self-reliance lasts longer than depending on others.

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

பகைமையை அன்பால் வெல்லுங்கள் சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.

🖋 *காந்திஜி*

 பொது அறிவு

1.உலகிலேயே மிக நீளமான மலை எது?

       "அந்தீஸ் மலை"

2.உலகிலேயே மிகப்பெரிய எரிமலை,

     "லஸ்கார்(சிலிநாடு) 5.99 மீ

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதற்கான காரணம்



முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன என்பதை பார்ப்போம்.

காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

English words and Meaning

Ordeal. கடும் சோதனை
Ruffle சுருக்கு, குழப்பம்
Maintain. பராமரிப்பு
Makeover(up)
அலங்காரம்
Temporary.   தற்காலிகமாக

அறிவியல் விந்தைகள்

இருவித்திலைத் தாவரம்
*இருவித்திலை தாவரம் என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்ட பூக்கும் தாவரமாகும்.
* இவை ஆணி வேர் தொகுப்பு கொண்டவை.
*இதன் இலைகளில் உள்ள நரம்புகள் வலைப் பின்னல் அமைப்பு கொண்டது.
* இதன் வேர்கள் சேமிப்பு வேர்கள், தாங்கும் வேர்கள் மற்றும் சுவாச வேர்கள் என்று மூன்று வகையுடையவை.

Some important  abbreviations for students

* NCEP   -  National Committee on Environmental Planning

* NCERT    -   National Council of Education Research and Training

நீதிக்கதை

ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் “அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா” என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார்.

பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான்.

பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து “நீ வேதம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“அப்படின்னா என்ன சாமி?” என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான்.

“வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?” என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார்.

பின்னரும் சும்மாயிருக்காமல் “சரி உனக்கு கீதை தெரியுமா?” என்றார்.

பரிசல்காரன் விழித்தான்.

“என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்” என்று மறுபடியும் பரிகசித்தார்.

இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு “ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?” என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார்.

அவன் பொறுமையாக “சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!” என்று பதில் சொன்னான்.

“இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?” என்று அவனை இகழ்ந்தார்.

இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது.

பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து “சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான்.

பண்டிதர் “தெரியாதே! ஏனப்பா?” என்று கேட்டார்.

பரிசல்காரன் “ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!” என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.

இன்றைய செய்திகள்

11.04.2019

* இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி வெற்றி.

* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த மாலிக் பெரோஸ்கான் அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய ஆணையராக இரா. பழனிசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

* மக்களவைத் தேர்தலையொட்டி, முதல் கட்ட வாக்குப்பதிவு இந்தியாவில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடைபெற உள்ளது.

* நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வரும் 15-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* விஸ்டன் பத்திரிகையில் தொடர்ச்சியாக 3-வது வருடம் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் விராட் கோலி இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

* இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக கிரகாம் ரீட் நியமனம்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 The right-wing Likud party led by Benjamin Netanyahu in the Israeli win the parliamentary election.

🌸 Following the retirement of Malik Feroskan, The new Tamil Nadu State Election Commissioner Palanisamy took charge today.

🌸In the Lok Sabha election, the first phase of polling will be held in 91 Lok Sabha constituencies in India today.

🌸 NEET Examination for MBBS and BDS courses across the country takes place on May 5. Students who have applied for this can also download their Hall tickets through the website from 15th onwards.

🌸Virat Kohli has made a record of 3rd year in Wisden's list of the best cricketer in the world

🌸 Graham Reid appointed as India's men's hockey team coach.

🌹🌹🌹🌹🌹🌹🌹
🎊Have. a great day🎊😊

No comments:

Post a Comment