Monday, April 1, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.04.19

திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

விளக்கம்:

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

பழமொழி

Waste not : want not.

இருப்பதை விட்டு இல்லாததற்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள்

 1.பள்ளி பொது இடங்களில் உள்ள பொருட்களை உடைக்காமல் பாதுகாப்பேன்.
2.தே‌சிய சின்னங்கள், தே‌சிய கொடி மற்றும் தே‌சிய பாடலுக்கு உ‌ரிய மரியாதை அளிப்பேன்.

பொன்மொழி

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம் ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.

     - சாக்ரடீஸ்

பொது அறிவு

1.மத்திய மாநில அரசுகளின் நல்லுறவை கண்காணிக்க அமைக்கப்பட்ட கமிஷன் எது?

 சர்க்காரியா கமிஷன்

2. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

12

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!



1. தீவிரமான வயிற்றுப்போக்கு சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா பிராய்லர் சிக்கனில் அதிகம் உள்ளது. இதனால் புட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளது. பிராய்லர் சிக்கனில் உள்ள இந்த பாக்டீரியாவானது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.

2. சிறுநீரக பாதை நோய்த்தொற்று பிராய்லர் கோழியில் ஈகோலை என்னும் பாக்டீயாவும் உள்ளது. இவையும் ஒருவகையான புட் பாய்சனை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி, இவை சிறுநீரக பாதையில் கடுமையான நோய்த்தொற்றுக்களையும் ஏற்படுத்தும். ஆகவே இதனை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. மோசமான நோய்கள் பிராய்லர் கோழியின் எடையை அதிகரிக்க, அதில் ஆர்சனிக் என்னும் மெட்டல் சேர்க்கப்படுகிறது. இந்த மெட்டல் உடலினுள் சென்றால், அது புற்றுநோய் மற்றும் இதர தீவிரமான நோய்களை ஏற்படுத்தும்.

English words and Meaning

Hectic - வேகமான, தீவிரமான
Heed - கவனம்
Heap - குவியல்
Hay - வைக்கோல்
Hesitate - தயங்குதல்


அறிவியல் விந்தைகள்

*நீரெலி /பீவர்*
 நீரெலி எனப்படும் பீவர்கள் ஒரு கொறித்துண்ணும் விலங்கு ஆகும்.
*இவைகள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும்
 *ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகள் அமைத்து வாழும். இச்செயல்பாடு வேறு எந்த விலங்குகளிடம் இல்லாதது *இச்செயல்பாட்டில் அவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.
* இவற்றை அணை என்று கூறுவார்கள். இந்த அணை கட்ட இவைகள் தங்கள் பற்களால் பெரிய மரங்களையும் வெட்டி விடும்.

Some important  abbreviations for students

* MD  -  Doctor of Medicine

* METSAT -  Meteorological Satellite

நீதிக்கதை

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று “ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!” என்றான்.

அதற்கு மீனவன் “காசு கிடைச்சா…?” என்று ரஜினி பாணியில் கேட்டான்.

இளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.

மீனவன் “அதிகம் சம்பாதிச்சா….?” என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.

மீனவன் “ஏற்றுமதி செஞ்சா…?” என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.

மீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிடைச்சா…” என்றான்.

இளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.

“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.

எனக்கு இருப்பதைக் கொண்டு நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிகத்திற்கு ஆசைப்பட்டு என் மன நிம்மதியை இழக்க விரும்பவில்லை என்றான் மீனவன்.

அறிவுரை சொல்ல வந்த இளைஞன் அறிவுரை பெற்றுக் கொண்டு திரும்பி போனான்.

இன்றைய செய்திகள்
02.04.2019

* எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்.

* ஆசிரியர் தகுதி தேர்வுக்கான புதிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு : தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவு.

* சூரியனில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கரும்புள்ளிகள் உருவாக தொடங்கியுள்ளது: வான் இயற்பியல் ஆய்வகம் தகவல்.

* அமெரிக்காவில் நடைபெற்ற மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

* 20-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட்கான இந்திய அணி அறிவிப்பு: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸PSLV C-45 rocket launched with 29 satellites including Emisat

🌸 Request to cancel a new announcement for Teacher Eligibility Test.Exam board head was directed to answer

🌸 The black dot have begun to develop once in 12 years in the Sun: space Physical Laboratory Information.

🌸 Australia's Ashley Bharthi won  women's singles title in the Miami Open tennis tournament held in the US.

🌸 Indian cricket team for  World Cup Cricket which is to be held on 20th was announced,: MK Prasad, Chairman

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎊Think positive, positive things will happen,Have a nice day🎊

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment