Tuesday, April 9, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.04.19

திருக்குறள்


அதிகாரம்:தீவினையச்சம்

திருக்குறள்:205

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

பழமொழி

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு

Known is a drop unknown is an ocean

இரண்டொழுக்க பண்புகள்

1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்

பொன்மொழி

நல்லவர்களைக் காண்பது, அவர் சொல் கேட்பது, அவர்களோடு உறவாடுவது எல்லாம் வாழ்வை உயர்த்தும்.

   - ஔவையார்

 பொது அறிவு

1.வெப்ப குடுவை(THERMO FLASK)யை கண்டுபிடித்தவர் யார்?

 சர் ஜேம்ஸ் டீவேர்

2.  நாடாளுமன்றம் இந்தி மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சன்சத் பவன்

விலைமதிப்பற்ற நம் உணவுக் கலாச்சாரம்

பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி இப்பொது திருமணங்களிலும் பஃபே(buffet) விருந்து என்று நின்று கொண்டு சாப்பிடும் பழக்கம் உண்டாகிவிட்டது. இந்த நாகரிக வளர்ச்சியால் நாம் இழந்தது நமது கலாச்சாரத்தை மட்டுமல்ல விலைமதிப்பற்ற நமது ஆரோக்யத்தையும்
தான்.

1. செரிமானக்கோளாறு
சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

2. அதிகமாக சாப்பிட தூண்டுதல்
மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிக சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடுகலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

3. வீக்கம்
விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

English words and Meaning

Rampart   கோட்டை, மதிற்புறம்
Obscene.  ஒழுங்கற்ற மரியாதையற்ற,
Pincers  இடுக்கி,குறடு
Mishap.  இடையூறு,
விபத்து
Pole துருவம்

அறிவியல் விந்தைகள்

ஒருவித்திலைத் தாவரம்
*இது பூக்கும் தாவர (அங்கியோஸ்பேர்ம்கள்) வகையைச் சேர்ந்தது. தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளில் இதுவும் ஒன்று.
*மற்றொன்று இரு வித்திலைத் தாவரம் ஆகும்.
*ஒரு வித்திலைத் தாவரங்கள் சல்லி வேர் தொகுதியை கொண்டவை.
*வேளாண்மைத் தாவரங்களில் பெரும்பாலானவை ஒருவித்திலையிகள் ஆகும். (எ.கா) தானியங்கள், புல், வாழை
*பூக்களுக்காகப் பயிரிடப்படும் பல தாவரங்களும் ஒருவித்திலைத் தாவரங்களே. லில்லிகள்,  ஆர்க்கிட்டுகள், மணிவாழைகள், துலீப்புகள்  இவ்வாறானவை.

Some important  abbreviations for students

* NCA    -    Nuclear Command Authority

* NCC    -  National Cadet Corps

நீதிக்கதை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.
அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

இன்றைய செய்திகள்

10.04.2019

* வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்..: உலக வங்கி தகவல்.

* தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

* தேசிய அளவிலான நிறுவனங்களின் கட்டமைப்புக்கான தரப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

*  தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மெக்சிகோவில் நடைபெற்ற அபியர்டோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் கார்பினி முகுருசா (ஸ்பெயின்) கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 Indians continue to be the first to send money from overseas to foreign countries: World Bank Information.

🌸 The Matric Schools Director suggested that summer camp should not be held on summer holidays in any schools, including private schools.

🌸Anna University is ranked 7th in the  National level institution regarding configuration. It is noteworthy that last year it was ranked 4th.

🌸 The Elections will be held on May 19 for the four constituencies in Tamilnadu which was Tiruparankundram, Ottapidaram, Sulur and Aravankurchi   state assemblies

🌸 In the women's singles section of the Abeirdo Open Tennis Championships in Mexico, current champion Carbini Muguruza (Spain) retained the trophy.
🌹🌹🌹🌹🌹🌹🌹

🎊Have. a nice day🎊😊

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment