Tuesday, March 26, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் ,- 27.03.19

திருக்குறள்


அதிகாரம்:பயனில சொல்லாமை

திருக்குறள்:194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

விளக்கம்:

பயனற்ற, பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

பழமொழி

Too many cooks spoil the broth

பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

இரண்டொழுக்க பண்புகள்

 1. இயற்கை வளங்களை அனைத்தும் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கொடை.
2. அவற்றை அழிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம். எனவே இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்பேன்

பொன்மொழி

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

    - அப்துல்கலாம்

 பொது அறிவு

1. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார்?

 டாக்டர். ராஜேந்திர பிரசாத்

2. சுதந்திர இந்தியாவின் முதல் வெளியுறவு துறை அமைச்சர் யார்?

 ஜவஹர் லால் நேரு

தண்ணீர்... தண்ணீர்...



இந்திய மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவிகிதம் பேருக்குதான் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் ஒவ்வொரு வருடமும் பெரும்பாலான மக்கள் நீரால் பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு வழங்கும் குடிநீர் கிடைக்காத பெரும்பாலான இடங்களில், நிலத்தடி நீர் மற்றும் பிற நீராதாரங்களில் இருந்து கிடைக்கும் நீரை நேரடியாக பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. நீரை பலமுறைகளில் சுத்திகரித்து பயன்படுத்தலாம்.

1. Reverse Osmosis

உடல் நலத்துக்குத் தீங்கு உண்டாக்கும் அனைத்து வகையான மாசுகளை நீக்கும் திறன் மற்றும் துர்நாற்றத்தைக் குறைக்கும் திறனுடையது என்பதால் இந்த சுத்திகரிப்பு முறை மிகவும் பிரபலமாக உள்ளது.

2. Activated Carbon Filters

நீரிலுள்ள களிமண் மற்றும் வண்டல் போன்ற பெரிய அளவிலுள்ளதுகள்களை அகற்றுவதற்கு கார்பன் வடிகட்டிகள் உதவுகிறது. இதிலுள்ள கார்பன் நீரிலுள்ள மணல் போன்ற துகள்களை தன்பக்கம் கவர்ந்து உறிஞ்சிக் கொள்கிறது. பின்னர் இதுபோன்ற அசுத்தங்களை வடிகட்டிய நீரை குழாய்களின் வழியே வெளியேற்றுகிறது.

3. Alkaline/ Water Ionizers

இதில் மின்னாற்பகுப்பு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அல்கலைன் என்கிற காரம் ஒரு தகடிலும் மற்றொரு தகடில் அமிலமும் இருக்கு
மாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகடுகளுக்கு இடையே செல்லும் நீரானது மின்னாற்பகுப்பு முறை மூலமாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் சுத்திகரிக்கப்படும் நீரானது மென்மையானதாக, அமிலத்தன்மை குறைவானதாக இருப்பதால் நமது சரும நலனுக்கு உகந்ததாக இருக்கிறது.

English words and Meaning

Distribute.  பகிர்ந்து கொடுத்தல்
Purpose.    காரணம்
Resemble.   உருவ
ஒற்றுமை
Dawn.        உதித்தல்
Suspicion.  சந்தேகம்
Amazement.  ஆச்சர்யம்

அறிவியல் விந்தைகள்

* கடிகார முள் திசையில் சுழலும் ஒரே கோள் வெள்ளி ஆகும்.
* ஆக்டோபஸ் டைனோசர்களை விட முந்தைய காலத்தில் உள்ளவை.
* சுறா மீன்கள் ஒரு துளி இரத்தத்தை 4 கி. மீ தூரத்திற்கு அப்பாலே மோப்பம் பிடிக்கும் திறன் கொண்டது.
* சுறா மீன்கள் ஒரு போதும் சுகவீனம் ஆனது இல்லை. அவைகளின் உடலில் எல்லா வியாதிகளுக்கும் எதிர்ப்பு சக்தி உண்டு.
*ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு மிக நீளமானது. அது தன் நாக்கால் அதன் காதை தொட முடியும்.

Some important  abbreviations for students

* LASER    -  Light Amplification By Stimulated Emission of Radiation

* LIC    -   Life Insurance Corporation (of India)

நீதிக்கதை

மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து
அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

இன்றைய செய்திகள்
27.03.2019

* மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வின்டோஸ்7 முடிவுக்கு வந்தது.

* டெல்லி: ரயில் பயணிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது இந்திய ரயில்வே. இனி ரயில் புறப்படும் நேரத்துக்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வரை Boarding station-ஐ  மாற்ற முடியும்.

* டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம், வருகிற 31-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதமி அறிவித்துள்ளது . இதில் பங்கேற்க விரும்புவோர்  044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் .

*  மியாமி ஓடன் டென்னிஸ்:வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் சிமோனா ஹலேப்.

*  டோக்கியோ ‘பாரா ஒலிம்பிக்’ டார்ச் மற்றும் எம்பளம் வெளியிடப்பட்டுள்ளது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸  Windows 7 of Microsoft  came to an end

🌸Delhi: Indian Railways has given a boost to the passengers. Boarding station can be changed four hours before departure.

🌸The Periyar IAS Academy has announced that the free training courses and seminars for TNPSC and Indian civic bodies exams will be held on the 31March. Those who are interested in participation can contact 044-2661 8056, 99406 38537 phone numbers.

🌸Miami Odeen Tennis: Simona Haleb won Venus Williams in the quarter-finals.

🌸Tokyo 'Para Olympics' Torch and emblem have been released.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🎊 The only secret behind the good day is good attitude,Have. a nice day🎊😊

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment