மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம்
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
திருக்குறள்
அதிகாரம்:புறங்கூறாமை
திருக்குறள்:188
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
விளக்கம்:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்.
பழமொழி
You must walk before run
சிந்தித்துச் செயல்படு .
இரண்டொழுக்க பண்புகள்
1. கூட்டு முயற்சி வேலையை பகுத்து வெற்றியை பெருக்கும்
2. எனவே மற்றவர்களுடன் கூடி வாழ்ந்து எம் பள்ளி, எனது ஊர் மற்றும் என் நாடு சிறக்க உழைப்பேன்.
பொன்மொழி
படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- காமராஜர்
பொது அறிவு
1.இந்திய தேர்தல் ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?
1950 ஜனவரி 25
2.2011 முதல் ஜனவரி 25 என்ன தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது?
தேசிய வாக்காளர் தினம்
மாம்பழம் பற்றிய சில எச்சரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்
கோடைவெயிலை எந்தளவிற்கு வெறுக்கிறோம் அந்தளவுக்கு விரும்பும் பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி
சாப்பிடும் பழம், அதுதான் மாம்பழம்.
மனிதர்களுக்கு ஆரோக்கிய சீர்க்கேட்டை உண்டாக்குகின்றன என்றால் நம்ப முடிகிறதா?
1. கார்பைடு கற்கள்: இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்புகலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப்பொருட்கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங்களை
பழுக்க வைக்க முடியும்.
2. கற்கள் மூலம் பழுத்த பழங்களின் மேல்தோல் மட்டுமே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற்கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக நிறம் மாறி இருக்காது.
எனவே நாம் கற்கள் மூலம் பழுத்த பழங்களை எளிதில் இனம் காண முடியும்.
3. கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்க ளில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள்
உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த
பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலை வலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கேடுகள்
உண்டாகும்.
English words and Meaning
Gutter. வடிகால்
Instill. புகட்டு,உட்செலுத்து
Parade படை,அணிவகுப்பு
Rattan. பிரம்பு
Seclude. தனிமை
அறிவியல் விந்தைகள்
*பாராஃபின் மெழுகு* (Paraffin wax)
*பாராஃபின் மெழுகு என்பது ஒரு மிருதுவான நிறமற்ற திடப்பொருள் ஆகும். *பெட்ரோல், நிலக்கரி,
போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது
*பாராஃபின் மெழுகு பொதுவாக வெள்ளை நிறத்தில் நிறமற்று சுவையற்று திடமான மெழுகாக உள்ளது
* இவை சிறந்த மின் கடத்தாப் பொருளாகவும் உள்ளது.
* வெப்பத்தைச் சேமித்து வைக்க இம்மெழுகு சிறந்த சாதனம்.
Some important abbreviations for students
* INTUC - Indian National Trade Union Congress.
* IPC - Indian Penal Code
நீதிக்கதை
ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.
அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.
ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.
குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது
குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.
அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.
அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.
வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.
தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.
அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.
முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது
வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.
முதலையும் ஏமாந்து திரும்பியது.
நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
20.03.2019
* பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
* நாட்டின் முதல் லோக்பால் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நேற்று அறிவித்தார்.
* போலி ரூபாய் நோட்டு பிரச்னைக்கு ஐஐடி கரக்பூரைச் சேர்ந்த கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் செல்லிடப்பேசி ஆப்பை உருவாக்குவதற்கான CODE - ஐக் கண்டுபிடித்துள்ளனர்.
* பாட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன் போட்டியில், 3000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் அவினாஷ் சாப்லே புதிய சாதனையுடன் உலக தடகள சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றார்.
* ஏடிபி தரவரிசையில் 84-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்திய நட்சத்திர வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
Today's Headlines
* Minimum qualification marks for SC / ST categories have been suddenly raised to join engineering courses.
* The president of the India has announced the leader and the members of first lokbal committe.
* Students of Computer Science Engineering from IIT Kharagpur have solved the problem of fake rupee note. CODE has been found to create a cell phone app that detects fake banknotes.
* Avinash Chaple qualifies for the World Athletic Championship with a new record in the 3000 m steeple chassis in the Federer Cup Athletic Championship in Patiala.
* Indian star, Brajeshesh Gunasewaran has achieved a record-breaking 84th position in the ATP rankings.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment