திருக்குறள்
அதிகாரம்:புறங்கூறாமை
திருக்குறள்:187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
விளக்கம்:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்
பழமொழி
No bad news is good news
தீய செய்தி எதுவும் இல்லை என்பதே நல்ல செய்திதான்
இரண்டொழுக்க பண்புகள்
1. கூட்டு முயற்சி வேலையை பகுத்து வெற்றியை கொடுக்கும்.
2. எனவே மற்றவர்களுடன் கூடி வாழ்ந்து எம் பள்ளி, எனது ஊர் மற்றும் என் நாடு சிறக்க உழைப்பேன்.
பொன்மொழி
உலகின் பிரச்சனையைத் தீர்க்கப்பிறந்தவன் அல்லன் மனிதன். தான் செய்ய வேண்டியதைத் தெரிந்துகொண்டு, கருணையின் எல்லைக்கு உட்பட்டு அதை செய்யப் பிறந்தவன்.
- கதே
பொது அறிவு
1.இந்தியாவில் பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய நாடாளுமன்ற தொகுதி எது?
லடாக் (ஜம்மு காஷ்மீர்)
2. அதிக பாராளுமன்ற தொகுதிகள் கொண்ட மாநிலம் எது?
உத்திரபிரதேசம்( 80தொகுதிகள்)
உருளைக்கிழங்கு பயன்படுத்த வேண்டிய முறை
1. நாம் உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எவ்வாறு எவ்வளவு எடுக்க வேண்டும் என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.
2. இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கலாம். மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளது. பெரும்பாலும் இதிலுள்ள நார்சத்துக்களை தோலை சுத்தம் செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம்.
3. மேலும் இதனை வறுத்து மற்றும் பொறித்து சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது. உடல் பருமன் ஏற்பட காரணமாக அமைகிறது. இதனை அளவாக பயன்படுத்துவது நலம் பயக்கும். குழந்தைகளே சுவைக்காக ஆரோக்கியத்தை இழக்கலாமா? சிந்திப்பீர்!
English words and Meaning
Settle. தீர்மானி,
முடிவுசெய்,குடியேறு
Scribble. கிறுக்குதல்
Repeal. நீக்கு,ரத்துசெய்
Lump. வீக்கம்,கட்டி
Hint. குறிப்பிடு,ஜாடை
அறிவியல் விந்தைகள்
*நரம்பு*
* நரம்பு நம் உடல் முழுவதும் செல்லும் ஒரு தகவல் தொடர்பு உறுப்பாகும்.
* நியூரான்கள எனும் செல்களால் ஆனவை.
* மூளை இடும் கட்டளையை உடம்பின் அத்தனை பாகங்களுக்கும் எடுத்து செல்வது இந்த நரம்பு தான்.
* இது முதுகு தண்டுக்குள்ளாக பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.
*இது ஒரு மணி நேரத்தில் 283 கி. மீ வேகத்தில் மூளை சொல்லும் தகவலை கடத்துகிறது
Some important abbreviations for students
* INTELSAT -International Telecommunication Satellite
*INTERPOL -International Police Organisation
நீதிக்கதை
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.
குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.
குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.
அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.
எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.
ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.
“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.
“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.
“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.
“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.
“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.
இன்றைய செய்திகள்
19.03.2019
* பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*கைதிகள் வாக்களிக்க உரிமை உள்ளது-- தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
* ஏலகிரி மலையில் கடந்த மூன்று நாட்களாக காட்டுத்தீ- அரியவகை மரங்கள் எரிந்து நாசம்.
* துப்பாக்கி குண்டுகள் முழங்கிட பரீக்கர் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
* லிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையில் 40கிலோ பிளாஸ்டிக் கழிவுடன் திமிங்கிம் கரை ஒதுங்கியது.
*அமெரிக்காவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் தியெம் சாம்பியன் பட்டம் வென்றார்.
Today's Headlines
* The polling in Madurai is to be extended up to 8pm.
* Prisoners have the right to vote for - EC notification.
* The last three days in the Yelagiri hills many trees were burnt due to forest fire.
* The funeral of Manohar Parikar was held with full military honour.
* On the coast of the Philippines, a shark was found with 40-kilogram of plastics.
* Roger Federer was defeated by Austrian champion Dominic Thieme in the finals of Indian Wells Dennis in the United States.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:
Post a Comment