ஜனவரி 11, 1966
இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மறைந்த தினம்
ஜனவரி 11, 1973
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்ற பெருமை பெற்ற கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள். இந்திய அரசின் அர்ஜூனா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
திருக்குறள்
அதிகாரம்:ஒழுக்கம் உடைமை
திருக்குறள்:136
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம்:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
பழமொழி
ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறவும் பொறுக்கனும்
You waited this much, wait just bit more
இரண்டொழுக்க பண்புகள்
* எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.
* நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.
பொன்மொழி
உன் கைரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
-அப்துல்கலாம்
பொது அறிவு
1.இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
பெங்களூரு
2. பைரோ மீட்டர் என்பது எதனை அளக்கப் பயன்படுகிறது?
உயர் வெப்பநிலை
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
ஆவாரம்பூ
1.இந்த ஆவரம்பூ மரபணுக்களை தாக்கும் கதிரியக்கத்தை தாக்கும் பொருளாக இருக்கிறது. புற்று நோய் தாக்கும் செல்களை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் வெப்பமண்டல பிரதேசத்தில் சூரியக் கதிரின் ஊடாக வீட்டில் புகும் ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க சக்திகளை தடுத்து, அவற்றை மீண்டும் வெளியே அனுப்பும் ஆற்றல் கொண்டது.
2. இதன் மெல்லிய இலைகளின் மேல் சிலிக்கா படலமும் இந்த பூக்களின் நிறமியும் இந்த பணியை அற்புதமாக செய்ய இயற்கை நமக்கு தந்துள்ளது.
3. ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.
English words and Meaning
Inborn. உடன்பிறந்த
Impel தூண்டு
Implore. வேண்டுதல்
Induce. உண்டாக்கு
Indicate. குறிப்பிடுதல்
அறிவியல் விந்தைகள்
தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.
🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.
🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.
🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.
வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.
🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
Some important abbreviations for students
AD -- Ano Domini (After the birth of Jesus)
BC - Before Christ (Before the birth of Jesus)
நீதிக்கதை
முன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான்.
ஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர்.
அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார்.
ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், `அய்யோ!’ என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன்.
அடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல்.
சிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான்.
உடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான்.
வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான்.
நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்
இன்றைய செய்திகள்
11.01.2019
* திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* அமெரிக்காவின் 'நாசா' மையம், கடந்த ஏப்ரலில் 'டி.இ.எஸ்.எஸ்.,' என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இச்செயற்கை கோள், சூரிய மண்டலத்துக்கு அப்பால், பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் துாரத்தில் புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது.
* ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் வெளியிட்டுள்ள தரவரிசையில் இந்தியாவின் மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.
* தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் சி.ஐ.எஸ்.எப்.-ஐ தோற்கடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
Today's Headlines
🌹The study reveals that in the past one year, more than 20 districts including Tiruvannamalai, Salem, Dharmapuri, Ariyalur, Kancheepuram and Tiruvallur the ground water level have gone down.
🌹 USA's 'NASA' Center has sent satellite D E S S' in last April. This satellite has discovered a planet of 53 light years away from Earth, beyond the solar system.
🌹The annual trading limit for GST has been increased from Rs 20 lakh to Rs 40 lakh.
🌹India's Mary Kom was ranked number 1 with 1700 points announced by International Boxing Association.
🌹 In the National Hockey tournament, Tamilnadu team won by 4-2 against CISF with the success of this series💐
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment