Tuesday, January 1, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.01.19

திருக்குறள்


அதிகாரம்:அடக்கம் உடைமை

திருக்குறள்:127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

விளக்கம்:

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

பழமொழி

No rains no grains

மாரி அல்லாது காரியம் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள்

*புது வருடம் மற்றும் புது பருவத்தில் எல்லோரும் போற்றும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இருக்கும் வகையில் நடப்பேன்.

*நான் வாழும் பகுதி மற்றும் சுற்றுப்புறம்  பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரம் உபயோகிப்பேன்.

பொன்மொழி

நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.

      - பாரதியார்

  பொது அறிவு

1.இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

2. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

  டாக்டர் சுவாமிநாதன்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

மரவள்ளி கிழங்கு



1.மரவள்ளிக்கிழங்கின் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு அருமையான தீர்வாகிறது.

2.எடை குறைப்பதற்கு மிகவும் தேவையான நார்ச்சத்து, இதில் அதிகமாக உள்ளது. தினமும் உங்கள் உணவில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக்கொள்வதால், உடல் எடையை குறைக்கலாம்.

3.காய்ச்சலின் போது மரவள்ளி கிழங்கின் இலைகளை கொதிக்கவைத்து கசாயம் தயாரித்து பருகினால் காய்ச்சல் கட்டுப்படும்.

4.கிழங்கில் உள்ள நார்ச்சத்து, குடலிலிருந்து வெளிப்படும் எல்லா நச்சுக்களையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. அலர்ஜியை குறைக்கிறது.

English words and Meaning

Abound. மிகுதியாயிரு
Abstain. விலகு, தவிர்
Actual   உண்மையான
Aegis.   கேடயம்
Airs.       அகங்கரிப்பு

அறிவியல் விந்தைகள்

இரப்பர் மரம்

* மாணவர்களின் பள்ளி வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சம் இரப்பர். இதன் பிறப்பிடம் தென் அமெரிக்கா ஆனால் இலை கருகல் நோய் வந்ததால் அங்கு முற்றிலும் அழிந்து விட்டது.
* தற்போது இந்தியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து இரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன.
* 1839 இல் சார்லஸ் குட்இயர் என்பவர் இரப்பர் பாலை வலிய பயன்படுத்த கூடிய இரப்பர் ஆக்கும் முறையைக் கண்டு பிடித்தார்.
* காட்டில் வளரும் இரப்பர் மரங்கள் 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. ஆனால் தோட்டங்களில் வளரக் கூடியவை 10 அடி மட்டுமே வளரும்.
* 6 வயதில் இருந்தே இரப்பர் மரம் லட்டகஸ் எனும் பால் தரும். ஓர் வருடத்தில் 8.6 கி. கி. பால் தரும்

நீதிக்கதை

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.

இன்றைய செய்திகள்
02.01.2019

* நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக  சுதிர் பார்கவா தில்லியில் செவ்வாயன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

* ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது, விற்பனை, உற்பத்தி செய்வதற்கான தமிழக அரசின் தடை ஐனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.

* 2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

* 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த  டி20அணி , ஒரு நாள் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி20 அணிக்கு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கெளரும், ஒரு நாள் அணிக்கு நியூஸி.யின் சூஸி பேட்ஸ்சும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தானாவை தேர்வு செய்து ஐசிசி அறிவித்தது.

Today's Headlines

🌹 Sudir Bhargava, the new chief information commissioner of the country, took charge on Tuesday in Delhi.

🌹The Tamil Nadu government's prohibition on the use, sale and production of 14 types of plastic products which was one use ,was effective from 1st January.

🌹The University Grants Commission (UGC) has released a report on which universities can provide remote learning courses in the country in 2019.

🌹 ICC best team of T20 for 2018, women's  one day cricket teams were announced ,For T20 team India's Harmanprith Gaur and the one-day cricket  Nwezi's Suzi Bads have been selected as captain .

🌹ICC announced the selection of Smriti Mantana as the best batsman of the year 2018💐🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment