Tuesday, January 8, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.01.19

ஜனவரி 9, 2003


அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் சார்பாக இந்நாள்
கொண்டாடப்படுகிறது.

திருக்குறள்

அதிகாரம்:ஒழுக்கம் உடைமை

திருக்குறள்:133

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

பழமொழி

Better later than never

காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது

இரண்டொழுக்க பண்புகள்

* எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

* நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொன்மொழி

விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.

   - கார்ல் மார்க்ஸ்

 பொது அறிவு

1.பெரியார் வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

 கேரளா

2. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?

 பாபநாசம்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பனங்கற்கண்டு



1. பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

2. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.

3. இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்குகிறது.

English words and Meaning

Gang.  கூட்டுக்குழு
Gap.    பிளவு,,கீறல்
Gasp.  மூச்சுத்திணறல்
Gel.     கூழ் போன்ற கரைசல்
Gaze கூர்ந்து பார்த்தல்

அறிவியல் விந்தைகள்

கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

Some important  abbreviations for students

ASEAN      ---     Association of South East Asian Nations

AITUC.  -        All India Trade Union Congress

நீதிக்கதை

நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.

“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்

இன்றைய செய்திகள்
09.01.2019

* தமிழகத்தின் 33-வது மாவட்டம் ஆகிறது கள்ளக்குறிச்சி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு.

* தமிழகத்தில் 12, 13 தேதிகளில் குளிர் கூடுதலாக இருக்கும்: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு.

* பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக மைசூருவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎம்எஃப் வரலாற்றிலேயே தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.

* ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரிஷப் பந்த் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளார். புஜாரா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முந்தினார்.

* சென்னையில் தொடங்கிய தேசிய ஹாக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது.

Today's Headlines

🌹The 33rd district of Tamil Nadu is Kallakurichchi announced Chief Minister  in the state assembly.

🌹 In Tamil Nadu, it will be in increased cool weather to 12th and 13th said Weather researcher Selvakumar.

🌹Geeta Gopinath, who was born in Mysore appointed as the first female chief economist at the International Fund (IMF) .He has performed the record of being the first woman as the head in the IMF history.

🌹 Rishabh Panth has progressed to the ICC Test Batsman rankings very fast. Pujara ranks from 4th to 3rd place.

🌹 Madhya Pradesh team won the opening match of the National hockey tournament in Chennai💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment