Thursday, October 8, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2026

புரட்சியாளர் சேகுவேரா




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:507

குறள்:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.


பொருள்:

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

பழமொழி :

Strike the iron while it is hot.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன். 

 2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

தவறுகள்: "தவறுகள் ஏற்படுவது சகஜம். ஆனால் அதைத் திருத்திக்கொள்ளாமல் இருப்பது பெரும் தவறு!"

Thought for the Day :

Mistakes: "Freedom is not worth having if it does not include the freedom to make mistakes."

பொது அறிவு : 

1. 2026 செப்டம்பர் 4 அன்று இஸ்ரோ ஏவிய ஏவுகணை எது? 

 EOS -05. 

2. உலக அஞ்சல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 அக்டோபர் 9. 

English words :

1. Nebulous – formless and unclear – உருவமற்ற

2. Enigmatic – mysterious, hard to explain – மர்மமான

புவியியலும் சுற்றுசூழலும் :

ஒரு பேரூராட்சி பல வார்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார்டிலிருந்தும் மக்கள் ஒரு கவுன்சிலரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

NMMS :

MAT 

.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள முக்கோணங்களின் எண்ணிக்கை





 (1) 8.

 (2) 10. 

 (3) 12. 

 (4) 14. 


விடை: (3) 12

அக்டோபர் 9

சே குவேரா அவர்களின் நினைவுநாள்

சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.


உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

நீதிக்கதை

முதலிடம் அல்ல, சிறந்த முயற்சியே முக்கியம்

ஒரு பள்ளியில் அகில் மற்றும் விக்னே ஷ் என்ற இரு நண்பர்கள் படித்து வந்தனர். இருவரும் படிப்பில் ஆர்வமுள்ளவர்கள். ஆனால் அகிலுக்கு எப்போதும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது.

ஒருநாள் பள்ளியில் ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. அகில், “இந்தப் போட்டியில் நான் தான் முதல் பரிசு வாங்க வே ண்டும்!” என்று நினைத்தான். அவசரமாக ஓவியத்தை வரைந்து முடித்தான். விக்னேஷ் முதல் பரிசைப் பற்றி சிந்திக்காமல், தனக்குத் தெரிந்த சிறந்த முறையில் அழகாகவும் பொறுமையாகவும் ஓவியம் வரைந்தான். ஒவ்வொரு சிறிய விஷயத்தை யும் கவனமாகச் செ ய்தான். போட்டி முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அகிலுக்கு இரண்டாம் பரிசும், விக்னேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது.

அகில் சற்று வருத்தப்பட்டான். அப்போது ஆசிரியர் அவனிடம்,

“அகில், முதல் இடம் கிடை ப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஒவ்வொரு முறையும் முதல் இடத்தில் இருப்பதுதான் வெற்றி அல்ல. நேற்றை விட இன்று சிறப்பாகச் செய்வதும், உன்னால் முடிந்ததை முழு முயற்சியுடன் செய்வதுமே உண்மையான வெற்றி.” அகில் ஆசிரியரின் வார்த்தைகளைப் புரிந்துகொண்டான். அதன் பிறகு மற்றவர்களை முந்த வேண்டும் என்று நினைக்காமல், தனது திறமையை நாளுக்கு நாள் வளர்த்துக்கொள்ளத் தொடங்கினான்.

சில மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற மற்றொரு ஓவியப் போட்டியில் அகில் முதல் பரிசு பெற்றான். ஆனால் இந்த முறை அவன் மகிழ்ந்தது பரிசுக்காக மட்டுமல்ல; தான் முன்பை விடச் சிறப்பாகச் செய்ததற்காகவும்.

🌟 நீதி:

முதலில் வருவது மட்டுமே வெற்றி அல்ல; நம்மால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்வதே உண்மையான வெற்றி. 

இன்றைய செய்திகள்

9.10.2026

🗒️தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை’ - காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

🗒️தமிழ்நாடு  மாநில அளவிலான காசநோய் இல்லா JOSH அணி. மற்றும் காசநோய் குறித்த கள ஆய்வுக் கையேடு -  அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.

🗒️விமானப் பயணிகளின் உயிரைக் காக்க ஸ்மித் மச்சார் காட்டிய அசாதாரண தைரியத்தைப் பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

🗒️ Cauvery Water: The Cauvery Water Regulation Committee has recommended releasing 3,000 cubic feet of water per second to Tamil Nadu.

🗒️ Tuberculosis-Free Tamil Nadu: Minister Arunraj launched the state-level TB-free JOSH team and a field survey guide on tuberculosis.

🗒️ Brave Act by Smith Machar: The US Parliament passed a resolution praising the extraordinary courage shown by Smith Machar to save the lives of air passengers.

🏀 Sports News

🏸 Arctic Open Badminton: P. V. Sindhu has entered the second round.

Covai women ICT_போதிமரம்

Wednesday, October 7, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.10.2026

தேசிய விமானப்படை தினம்





திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:506

குறள்:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

பொருள்:

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.

பழமொழி :

Still waters run deep.

நிறை குடம் தளும்பாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன். 

 2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

அகிம்சை: "வன்முறை பலவீனமானவர்களின் ஆயுதம்; அகிம்சை வலிமையானவர்களின் ஆயுதம்."

Thought for the Day :

Non-Violence: "Violence is the weapon of the weak; non-violence is the weapon of the strong."

பொது அறிவு : 

1.2026 -ல் தமிழ்நாட்டின் ஏ ஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 திருவனந்தபுரம். 

2.இந்தியாவின் தேசிய நீர் வாழ் விலங்கு எது? 

 கங்கை நதி டால்பின்.  

English words :

1. Puzzling – hard to make sense of – புதிரான

2. Elusive – hard to grasp or define – பிடிபடாத

புவியியலும் சுற்றுசூழலும் :

பேரூராட்சியின் நோக்கம்
“மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கி, உள்ளூர் பகுதியின் சுகாதாரம், தூய்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்பதே பேரூராட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

NMMS :

MAT 

கீழ்க்கண்ட சொற்களை ஆங்கில அகராதி முறையில் வரிசைப்படுத்தும்பொழுது கடைசியிலிருந்து இரண்டாவதாக வரும் வார்த்தை என்ன? 

 Scramble, Script, Science, School. 

 (1) Scramble. 

 (2) Script.

 (3) Science.

 (4) School. 

 விடை: (1) Scramble 

அக்டோபர் 08

தேசிய விமானப்படை தினம் 2025, 93வது ஆண்டு நிறைவு: 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று, தேசிய விமானப்படை தினத்தை இந்தியா கொண்டாடுகிறது, நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்கள் மற்றும் விமானிகளை அங்கீகரித்து, இந்திய விமானப்படை (IAF) நிறுவப்பட்டதை நினைவுகூரும் நாள் இது. *ஆற்றல் மிக்க, சக்திவாய்ந்த மற்றும் தன்னம்பிக்கை* என்ற கருப்பொருளின் கீழ் இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

📱 கைப்பேசியின் பிடியில்

ஒரு சிறிய ஊரில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு

கைப்பேசியில் வீடியோக்கள் பார்ப்பதும், விளையாடுவதும் மிகவும் பிடிக்கும். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் புத்தகப்பையை ஓரமாக வை த்துவிட்டு கைப்பேசியை எடுத்துக்கொள்வான். “இன்னும் ஐந்து நிமிடம் மட்டும்,” என்று நினைத்து விளை யாடத் தொடங்குவான். ஆனால் அந்த ஐந்து நிமிடங்கள் ஒரு மணி நேரமாகிவிடும்.

இதனால் அவன் பாடங்களை சரியாகப் படிக்கவில்லை . வீட்டுப்பாடங்களையும் தாமதமாகச் செய்தான். இரவு நேரத்தில் தூங்குவதற்கும் தாமதமானது. மறுநாள் பள்ளியில் பாடம் கவனிக்க முடியாமல் சோர்வாக இருந்தான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் ஒரு சிறிய தேர்வு  வைத்தார். அருண் சரியாகப் படிக்காததால் குறைந்த மதிப்பெண் பெற்றான். அவன் மிகவும் வருந்தினான்.

அப்பொது ஆசிரியர் அவனிடம்,

“கைப்பேசி நமக்கு உதவும் ஒரு நல்ல கருவி. ஆனால் அதை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், அது நம்முடை ய நேரத்தையும் கவனத்தையும் எடுத்துக்கொள்ளும். நே ரத்தை நாம் கட்டுப்படுத்த வே ண்டும்; நேரம் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது,” என்றார்.

அருண் தனது தவறை உணர்ந்தான். அதன் பிறகு படிப்புக்கும், விளையாட்டுக்கும், ஓய்வுக்கும் நேரம் ஒதுக்கி,  கைப்பேசியைப் குறைந்த நேரம் மட்டும் பயன்படுத்தத் தொடங்கினான்.

சில நாட்களில் அவனது படிப்பிலும், தூக்கத்திலும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அவன் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தான்.

🌟 நீதி:

கைப்பேசியை அளவோடு பயன்படுத்துவோம்; நம் நேரத்தையும் வாழ்க்கையையும் மதிப்போம்.

இன்றைய செய்திகள்

08.10.2026

🗒️இளம் வாக்காளர்களை சேர்க்க அக். 7 முதல் 9 வரை சிறப்பு நடவடிக்கை: தேர்தல் ஆணையம்.

🗒️காவல் துணைக் கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா: முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதக்கங்கள் வழங்கினார்.

🗒️ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் அரசு முறை பயணமாக இமாச்சலபிரதேசம் சென்றுள்ளார்.மேலும் அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்டார்.

 🗒️வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா உள்பட 7 நாடுகள் விருப்பம் திட்டங்களை சமர்ப்பிக்க ஐ.ஓ.சி. அழைப்பு விடுத்துள்ளது.

🏀கால்பந்து ஜாம்பவான் *மெஸ்ஸி* 21 ஆண்டுகளுக்கும் மேலான அவரது சர்வதேச பயணம் உணர்ச்சிகரமான முறையில் நிறைவடைந்தது....

Today's Headlines

🗒️ Special drive to add young voters from October 7 to 9: Election Commission.

🗒️ Training completion ceremony for Deputy Superintendents of Police: Chief Minister Joseph Vijay presented medals to the trainees.

🗒️ President Droupadi Murmu has gone to Himachal Pradesh for a 3-day official visit. She also visited the Atal Tunnel.

🗒️ The Nobel Prize in Chemistry has been jointly awarded to scientists from France and Japan.

🏀 Sports News

🏀 The IOC has invited seven countries, including India, to submit plans to host the 2036 Olympic Games.

🏀 Football legend Lionel Messi’s more than 21-year international career has come to an emotional end.

Covai women ICT_போதிமரம்

Tuesday, October 6, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2026

நீல்ஸ்போர்





திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:505

குறள்:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

பொருள்:

ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.

பழமொழி :

Single tree makes no forest

தனி மரம் தோப்பாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன். 

 2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மாற்றம்: "நாம் உலகில் காண விரும்பும் மாற்றம், முதலில் நம்மிடமே நிகழ வேண்டும்!"

Thought for the Day :

Change: "Be the change that you wish to see in the world!"

பொது அறிவு : 

1. 2026-ல் தமிழ்நாட்டில் முதல் Booth -less toll plaza எங்கு அமைக்கப்பட்டது? 

பரனூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு. 

2. பரனூர் சுங்கச்சாவடியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது? 

MLFF (MULTI LANE FREE FLOW).சுங்கச்சாவடியில் வாகனம் நிற்க வேண்டியதில்லை சென்சார் மூலம் FASTAG கணக்கிடப்படும்.

English words :

1. Indistinct – not easily seen or heard – தெளிவில்லாத.

2. Equivocal – open to more than one meaning – இருபொருள்படும்.

புவியியலும் சுற்றுசூழலும் :

வருவாய் ஆதாரங்கள்
பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும் சில வழிகள்:
*சொத்து வரி
*குடிநீர் கட்டணம்
* தொழில்/வணிகம் தொடர்பான வரிகள் மற்றும் கட்டணங்கள்
*கட்டிட அனுமதி மற்றும் பிற சேவைக் கட்டணங்கள்
*அரசு வழங்கும் நிதி மற்றும் மானியங்கள் ஆகியவை ஆகும்

NMMS :

MAT 

ஒரு வரிசையில் ரவி இடமிருந்து 12-வது இடத்திலும், வலமிருந்து 18-வது இடத்திலும் இருக்கிறார். அந்த வரிசையில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?

A) 28

B) 29

C) 30

D) 31

💡 குறிப்பு: ரவியை இருமுறை எண்ணியிருக்கிறோமா என்று கவனியுங்கள்.

 விடை — 29!

அக்டோபர் 07

நீல்ஸ்போர் அவர்களின் பிறந்தநாள்

நீல்ஸ் என்றிக் டேவிட் போர் ( அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர். அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.

நீதிக்கதை

ஒற்றுமையின் பலம் 🐰🦀🦅

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு முயல் தன் குட்டியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. முயல் குட்டி மிகவும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்தது.

ஒருநாள் முயல் குட்டி காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வண்ணத்துப்பூச்சி ஒன்றைப் பின்தொடர்ந்து வெகுதூரம் சென்றுவிட்டது. திரும்பி வரும்போது, அது சென்ற பாதையை மறந்து வழி தவறிவிட்டது.

“அம்மா... அம்மா...” என்று அழுதுகொண்டே முயல் குட்டி தன் தாயைத் தேடியது. ஆனால் தாய் முயல் எங்கும் இல்லை.

அதே நேரத்தில், தாய் முயலும் தன் குட்டியைக் காணாமல் கவலையடைந்தது.

“என் குட்டி எங்கே சென்றிருக்கும்?” என்று காட்டின் பல பகுதிகளிலும் தேடத் தொடங்கியது.

இதற்கிடையில், ஒரு பெரிய கழுகு வானத்தில் பறந்து கொண்டிருந்தது. கீழே தனியாக இருந்த முயல் குட்டியைப் பார்த்ததும், அதை இரையாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தது.

கழுகு மெதுவாக கீழே பறந்து வந்து முயல் குட்டியைப் பிடிக்கத் தயாரானது.

முயல் குட்டி பயந்து ஓடத் தொடங்கியது. ஆனால் கழுகு அதை விடாமல் துரத்தியது.

அப்போது அருகிலிருந்த ஆற்றங்கரையில் வாழ்ந்த நண்டு அரசன் இதைக் கவனித்தது.

“நண்பர்களே! அந்த முயல் குட்டி ஆபத்தில் உள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து அதைக் காப்பாற்ற வேண்டும்!” என்று நண்டு அரசன் தனது கூட்டத்திடம் கூறியது.

உடனே நூற்றுக்கணக்கான நண்டுகள் ஒன்றாகச் சேர்ந்தன.

சில நண்டுகள் ஆற்றங்கரையில் வரிசையாக நின்றன. சில நண்டுகள் புதர்களுக்குள் சென்று முயல் குட்டி மறைந்து கொள்ள இடம் ஏற்படுத்தின. மற்ற நண்டுகள் தங்கள் பெரிய கொடுக்குகளை உயர்த்திக் கொண்டு கழுகை நோக்கி நகர்ந்தன.

கழுகு கீழே இறங்கியபோது, ஏராளமான நண்டுகள் ஒன்றாக இருப்பதைக் கண்டு திகைத்தது.

“இவ்வளவு நண்டுகள் ஒன்றாக இருக்கிறதே! இங்கே இறங்குவது ஆபத்தானது,” என்று நினைத்த கழுகு அங்கிருந்து பறந்து சென்றது.

முயல் குட்டி பாதுகாப்பாக இருந்தது.

சிறிது நேரத்தில் தாய் முயல் அங்கு வந்து தன் குட்டியைக் கண்டது.

“என் குட்டியே!” என்று மகிழ்ச்சியுடன் அதை அணைத்துக் கொண்டது.

பின்னர் தாய் முயல் நண்டு அரசனையும் அதன் கூட்டத்தையும் பார்த்து,

“நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என் குட்டியைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?” என்று கண்ணீர் மல்கக் கூறியது.

நண்டு அரசன் புன்னகையுடன்,

“நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால், எவ்வளவு பெரிய ஆபத்தையும் எதிர்கொள்ள முடியும். அதுதான் ஒற்றுமையின் பலம்!” என்றது.

அன்று முதல் காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஒற்றுமையுடன் வாழத் தொடங்கின.

🌿 நீதிக்கருத்து:

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமையே நம் பலம்.”

“தனியாக நாம் சிறியவர்களாக இருக்கலாம்; ஒன்றாக இருந்தால் பெரிய சவால்களையும் வெல்லலாம்.” 

இன்றைய செய்திகள்

07.10.2026

🗒️ஒரே நேரத்தில் 900 பேர் பயணிக்கலாம்; பூந்தமல்லி - வடபழனி இடையே முதற்கட்டமாக 15 மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.

🗒️தேன்கனிக்கோட்டை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
இந்த பாறை ஓவிய தொகுப்புகள், இரும்புக்கால மனிதனின் வழிபாட்டு மரபுகளின் பின்காலத்தை எடுத்துக்கூறுகிறது.

🗒️மத்திய நிதி மந்திரி தலைமையில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
வரிப்பகிர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

🗒️இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀 தேசிய சைக்கிளிங் போட்டி: தமிழக அணி ‘சாம்பியன்’
ஜூனியர் பிரிவில் தலா 2 தங்கம் வென்று அசத்தினர்.

Today's Headlines

🗒️ 900 people can travel at the same time. 15 Metro trains will be operated in the first phase between Poonamallee and Vadapalani.

🗒️ 3,000-year-old rock paintings have been discovered near Denkanikottai.
These rock paintings give information about the later period of the worship practices of Iron Age people.

🗒️ GST Council meeting will be held tomorrow under the leadership of the Union Finance Minister.
The meeting will discuss various issues, including tax sharing.

🗒️ The Nobel Prize in Physics has been announced for Belgian scientist Francis Halse.

🏀 Sports News

🏀 National Cycling Championship: Tamil Nadu team becomes champion.
In the junior category, the players performed very well by winning two gold medals each.

Covai women ICT_போதிமரம்






Monday, October 5, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.10.2026

புலவர் புலமைபித்தன்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:504

குறள்:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.  

பொருள்:

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
 
பழமொழி :

Silence gives consent.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன். 

 2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

பிறரின் நலனில் அக்கறை கொள்பவன் உண்மையான செல்வந்தன்.

Thought for the Day :

🕯️ Helping others shine won’t dim your own glow…

பொது அறிவு : 

1.2026 -ல் 100 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய அமைப்பு எது?

 UPSC- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம். 

 2. UPSC நிறுவப்பட்ட ஆண்டு எது? 

1926.

English words :

1. Hazy – not clear in outline or memory – மங்கலான

2. Indistinct – not easily seen or heard – தெளிவில்லாத

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டிற்கு முக்கியமான மழைக்காலம்:
தென்மேற்கு பருவமழை – ஜூன் முதல் செப்டம்பர்
வடகிழக்குப் பருவமழை – அக்டோபர் முதல் டிசம்பர்
⭐ தமிழ்நாட்டிற்கு அதிக மழையைத் தருவது – வடகிழக்குப் பருவமழை.

NMMS :

MAT 

"PAINTER" எஎன்ற சொல்லில் உள்ள எழுத்துகளை ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தி எழுதினால் தனது இடத்தை மாற்றிக் கொள்ளாத எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை??

 (1) 1.

 (2) 2.

 (3) 3.

 (4) 4. 

 விடை: (2) 2

அக்டோபர் 06

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  


புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

நீதிக்கதை

 வயது வருமுன் வாகனம் ஓட்டியதால் வந்த ஆபத்து

ஒரு அழகான கிராமத்தில் கார்த்திக் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் இருந்தது.

ஒருநாள் அவனுடைய நண்பர்கள் சிலர், “நாங்கள் எல்லோரும் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டோம். நீயும் ஓட்டிப் பார்!” என்று கூறினர். அவர்களின் பேச்சைக் கேட்ட கார்த்திக், தனக்கு உரிய வயது வரவில்லை என்பதையும், வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறவில்லை என்பதை யும் மறந்துவிட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலையில் ஓட்டத் தொடங்கினான். சாலையில் வாகனங்கள் அதிகமாகச் சென்று கொண்டிருந்தன. 

கார்த்திக்கிற்கு போக்குவரத்து விதிகள் பற்றிய போதிய அனுபவம் இல்லாததால், வாகனத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த ஒருவர் அவனை எச்சரித்து வாகனத்தை நிறுத்த உதவினார். பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு முன்பே அவன் தப்பித்தான். வீட்டிற்குத் திரும்பிய கார்த்திக் நடந்தவற்றைத் தன் தந்தையிடம் கூறினான்.

தந்தை அவனை அன்புடன் அழைத்து, “மகனே , வாகனம் ஓட்டுவது விளையாட்டு அல்ல. அதற்குத் தேவையான வயதும், சட்டப்படி ஓட்டுநர் உரிமமும், போதிய பயிற்சியும் அவசியம். நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று அறிவுரை கூறினார்.

கார்த்திக்கும் தன் தவறை உணர்ந்தான். உரிய வயது வரும் வரை வாகனம் ஓட்டாமல் இருக்கவும், போக்குவரத்து விதிகளைப் படித்துத் தெரிந்துகொள்ளவும் உறுதி எடுத்துக்கொண்டான்.

அதன்பிறகு அவன் தனது நண்பர்களுக்கும் வயதுக்கு முன்பே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்கூறினான்.

### நீதி:

உரிய வயது வருவதற்கு முன் வாகனம் ஓட்டக் கூடாது. சட்டத்தை மதித்து, பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.2026

🗒️தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🗒️மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் புதிய வரவு: பெண் சிறுத்தை 5 குட்டிகளை ஈன்றது.

🗒️3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு. நோபல் பரிசுக்கான அமைப்பின் மருத்துவ குழுவுக்கான செயலாளர் தாமஸ் பெர்ல்மேன் அறிவித்துள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

🏀கோவா சர்வதேச சிலம்ப போட்டி: 24 தங்கப் பதக்கங்களை வென்று குடியாத்தம் மாணவர்கள் சாதனை.

🏀கால்பந்து
நேஷன்ஸ் லீக் போட்டியில்  நார்வேயை வீழ்த்திய போர்ச்சுக்கல்  காலிறுதிக்கு தகுதி.

Today's Headlines

🗒️ Pushpavanam Kuppusamy has been appointed as the Chairman of the Tamil Nadu Iyal Isai Nataka Mandram.

🗒️ Good news from Kuno National Park in Madhya Pradesh: A female leopard has given birth to five cubs.

🗒️ Nobel Prize in Medicine announced for 3 scientists. Thomas Perlmann, Secretary of the Nobel Committee for Medicine, announced the award.

🏆 Sports News

🏀 Goa International Silambam Competition: Students from Gudiyatham achieved a great success by winning 24 gold medals.

⚽ Football: Portugal defeated Norway in the Nations League and qualified for the quarter-finals.

Covai women ICT_போதிமரம்