Monday, March 28, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.03.22

திருக்குறள் :

பால் : பொருட் பால், 

இயல் - நட்பியல், 

அதிகாரம் :இகல்,

 குறள் :, 858 

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

 பொருள்
மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும்.

பழமொழி :

Procrastination is the thief of time

இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன். 

2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.

பொன்மொழி :

ம‌ணி கணக்கில் உபதேசம் செய்வது விட ஒரு கண பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. வெங்காயத்தில் அதிகளவு உள்ள வைட்டமின் எது? 

வைட்டமின் B. 

2. நெல் பயிரிடும் போது நிலத்தில் வெளியாகும் வாயு எது? 

மீத்தேன்.

English words & meanings :

Altar - raised center of worship, தொழுகை செய்யும் இடம், 

alter - to change, மாற்றி அமைப்பது

ஆரோக்ய வாழ்வு :

கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பு குறைவாக உள்ளது. இந்த கம்மங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒருவேளை கம்பு உள்ள உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும். கம்பு நமது உடலை பல நோய்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது. வயிறு சம்பந்தமான குறைபாடுகளை சரிசெய்யும். குடல் புற்றை தடுக்கிறது. முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது. மாதவிடாய் பிரச்சனைகள், ரத்த கொதிப்பு, முடி கொட்டுதல், போன்றவற்றையும் சரி செய்கிறது.




கணினி யுகம் :

Shift F3 - Change case. 

 Ctrl backspace - Delete a word    

நீதிக்கதை


அற்புதமான சிற்பி

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.

இன்றைய செய்திகள்

29.03.22

★மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தால், முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப்டடன.

★தமிழக காவல் துறையின் சைபர்க்ரைம் பிரிவில், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க இஸ்ரேல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

★மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களின் மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

★சிஏ எனப்படும் கணக்குத்தணிக்கை குறித்த படிப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உலகத் தரத்திற்கு மாறுகிறது.

★2 நாள் பாரத் பந்த்; பல மாநிலங்களில் பாதிப்பு; தொழிற்சங்கத்தினர் போராட்டம்.

★தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா.

★கொரோனா 4-வது அலை: சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரின் பெரும்பாலான பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

★இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

★ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 350 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 

★உலக டேபிள் டென்னிஸ்; இந்திய வீரர் சத்தியன் 2வது சுற்றில் வெற்றி.

Today's Headlines


 ★ The normal life of the people in various districts of Tamil Nadu has been affected due to the two day all India strike by the trade unions across the country condemning the Central Government.  Bus and banking services were particularly hard hit.

 ★ Israeli technology has been introduced in the Cybercrime Division of the Tamil Nadu Police to monitor social networking sites.

 ★ A new program has been introduced to select models of assistive devices for the disabled.  In addition, Rs. 9.50 crore has been allocated for the implementation of this project.

 ★ Changes in the syllabus for Charted Account courses called CA are introduced and this make the course world class.

 ★ 2 day Bharat Bandh;  Vulnerability in several states;  The trade unions had strike in many places .

 ★ India successfully tested ground-to-air missile

 ★ Corona 4th wave: Lockdown has been implemented in most parts of Shanghai, the largest city in China.

 ★ West Indies win last Test against England.

 ★ 350 students participated in the district level cricket competition held in Erode.

 ★ World table tennis;  Indian player Satyan wins 2nd round
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, March 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.03.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: இகல்

குறள் : 857

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

பொருள்:
பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்

பழமொழி :

Live within your means

வரவுக் கேற்ற செலவு செய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன். 

2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.

பொன்மொழி :

உங்கள் கடந்த காலம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் பிரச்சனை இல்லை.ஒரு புதிய  தொடக்கத்தை தொடங்குங்கள்.___கௌதம புத்தர்

பொது அறிவு :

1. விலங்கினத்தில் அதிகளவு கோடை வெப்பத்தை தாங்கக்கூடிய விலங்கு எது? 

ஆடு. 

2. படகு தயாரிக்க பயன்படும் மரம் எது? 

பைன் மரம்.

English words & meanings :

Bark - explosive cry of a dog, the stem of an old tree, நாயின் குரைப்பு, மரப்பட்டை. 

Residence - a person's residing place or home, வசிப்பிடம்

ஆரோக்ய வாழ்வு :

இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை போக்கி வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவுகிறது. இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது .கோடைக்கு ஏற்ற சத்தான பானம். மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சசைன், ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது.

கணினி யுகம் :

Alt + = - Create a formula to sum all of the above cells. 

Ctrl + ' - Insert value of above cell into current cell

மார்ச் 28


மாக்சிம் கார்க்கி  



மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

குகையில் தங்கம்

ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.

சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.

அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.

நீதி :
பேராசை பெரு நஷ்டம்

இன்றைய செய்திகள்

28.03.22

🔖ஓசூர் வனக்கோட்ட பறவைகள் கணக்கெடுப்பு: 200 வகையான பறவைகளை கண்டறிந்து பதிவு செய்த வனத்துறையினர்.

🔖 மார்ச் 28, 29 பாரத் பந்த்: தமிழகத்தில் வன்முறையை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு.

🔖 போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் 2021-ல் நாடு முழுவதும் ரூ.1,898 கோடி அபராதம் வசூல்.

🔖 அணு ஆயுத போட்டியை தூண்டும் ரஷ்யா: தோஹா கூட்டத்தில் உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு.

🔖 பெண்கள் உலகக்கோப்பை : 3-வது அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.

🔖 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி; இந்திய வீராங்கனை சிந்து வெற்றி.

Today's Headlines

 🔖  In Hosur forest range, rangers started to take the Birds' statics: 200 kinds of birds are recognized and registered.

🔖To ban the violence during Bharat bandh on 28th and 29th mass police protection is given in Tamilnadu.

🔖 From those who provoke Traffic rules 1,898 crore rupees are taken as fine.

🔖 Russia is trying to induce Atomic weapon competition's among World countries - condemns Ukraine President in the Toha meet.

🔖 In the world women champion England got selected as 3rd team for the half eligibility test.

🔖 Swiss open tennis tournament Indian player Sindhu won the match.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, March 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.03.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: இகல்

குறள் : 854

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்:
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்

பழமொழி :

Spoken words can never be taken back

தீயில் இட்ட நெய் திரும்ப வருமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

ஒருவனின் மனம் தூய்மையாக இல்லை என்றால், பணமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி.. அது அவனுக்கு பலன் தராது._____சுகிசிவம்

பொது அறிவு :

1. உலகிலேயே மிகவும் அகலமான நதி எது? 

அமேசான் நதி. 

2. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பாலம் கட்டியுள்ள நாடு எது? 

நெதர்லாந்து.

English words & meanings :

Vain    வீண்,உதவாத
Waive. விட்டுகொடு
Xebec.  பாய்மரக்கப்பல்
Yelp.  குரைத்தல்
Zinc துத்தநாகம்

ஆரோக்ய வாழ்வு :

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தினை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி ,இருமலை குறைக்கக் கூடிய மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது. மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சக்தியினை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலன் காக்கப்படும். சுவாச கோளாறுகள், கல்லீரல் பிரச்சனைகள், மூலம், அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது.

கணினி யுகம் :

Shift + F10 - Simulate right click on the selected item. 

Shift + Del - Delete programs files permanently.

மார்ச் 26


லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள் 




லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven, /ˈlʊdvɪɡ væn ˈbeɪˌtoʊvən/ (About this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

நீதிக்கதை

வாழ்க்கையில் வரும் வாய்ப்பு

ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான். இளைஞனே நீ என் மகளை மணந்து கொள்ள விரும்பினால் நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும். என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக்கொண்டான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. 

முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது. அதைப்பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி, அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனை முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம் மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச்சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது. அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது. இந்த மாட்டைவிடக்கூடாது இதைத்தான் நான் பிடிக்கவேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான்.

மாடு அருகில் வந்த்தும் ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம் அந்த மாட்டுக்கு வாலே இல்லை. நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புக்களை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புக்கள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவறவிட்டால் அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.

இன்றைய செய்திகள்

26.03.22

◆தமிழகத்தில் தஞ்சம் புகும் இலங்கைத் தமிழர்களை எப்படி அணுகுவது என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேளையில், சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட அகதிகளுக்கு ராமேசுவரம் நீதிமன்றத்தில்பிணை பெறப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

◆ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் 2,000 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த இரு ஊர்களின் தடயங்களை கண்டறிந்துள்ள ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், அங்கு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

◆கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தனியார் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

◆சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி.

◆இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

◆அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்: மீண்டும் வெள்ளையாக மாறிய கிரேட் பேரியர் பவளத்திட்டுகள்.

◆சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் மக்கள் அவதி.

◆பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.

◆உலக டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி.

◆சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து, காஷ்யப் கால்இறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines

◆ It has been reported that the Government of Tamil Nadu is awaiting the decision of the Central Government on how to approach the Sri Lankan Tamils ​​seeking asylum in Tamil Nadu.  Meanwhile, the refugees who were ordered to be imprisoned have been granted bail in the Rameswaram court and are being kept in the Mandapam refugee camp.

 ◆ The Ramanathapuram Archaeological Survey has found traces of two 2,000-year-old Sangam towns at Marungur and Oriyur near Thondi in the Ramanathapuram district and has demanded that excavations be carried out there.

 ◆ The Department of School Education has ordered private schools to ensure that no action is taken against students who do not pay tuition.

 ◆ Supersonic BrahMos missile tested successfully again.

◆ The Central Government has initiated the process of amending the Indian Penal Code and the Criminal Procedure Code.

 ◆ Threatening climate change: Great Barrier Reefs turning white again.

  ◆ One-fourth of Somalia suffers from famine: People suffer from the worst famine in 40 years.

 ◆ Women's World Cup: Australia beat Bangladesh to win the World Cup.

 ◆ World Table Tennis: Silver medalist Sathyan and Manika Bhadra of India.

 ◆ Swiss Open Badminton: PV Sindhu, Kashyap advance to quarterfinals.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்