Wednesday, June 14, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.23

  



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

விளக்கம்:

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

பழமொழி :

Penury pinches all.

பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. நெல்சன் மண்டேலா

பொது அறிவு :

1. சூரியனைச் சுற்றி வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் கிரகம் எது?

நெப்டியூன்


2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?

150 மில்லியன் கிலோமீட்டர்கள் (93 மில்லியன் மைல்கள்)

English words & meanings :

 Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.

ஜூன் 15


உலகக் காற்று நாள் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நீதிக்கதை

அவன் சரியான வால் பையன். பள்ளியில் எப்போதும் சேட்டைகள்தாம். அன்று அவனுக்கு பயமாக இருந்தது. காரணம், ஆசிரியைகளுடன் பெற்றோர் சந்தித்துப் பேசும் தினம் அது. பள்ளிக்கு வரும் அம்மாவிடம் 'மிஸ்' புகார் சொல்லி விட்டால்... பயந்து கொண்டே இருந்தான்.

எல்லா பெற்றோரும் ஆசிரியையுடன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனது தாயாரின் முறை வந்தது.

"பள்ளியில் பையன் எப்படி?" என்று கேட்டாள் தாய்.

"அவனுக்கென்ன சமத்துப் பையன்" என்று மாணவனைப் பார்த்தவாறே சொன்னார் ஆசிரியை.

பையனுக்கு ஆச்சர்யம். தாய்க்கும் ஆச்சரியம்.

“அப்படியா? அவன் ரொம்ப வால் ஆச்சே, நிறைய குறும்பு பண்ணுவானே" என்று விடாமல் கேட்டாள் தாய்.

"அதெல்லாம் சின்னப் பசங்க பண்றதுதானே. மத்தபடி ரொம்ப நல்ல பையன்" என்று, மீண்டும் சொன்னார் ஆசிரியை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவனின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. தன்னைப் பற்றி நல்லவிதமாக சொன்ன ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றே தன்னுடைய 'வால்' தனத்தைக் குறைத்துக் கொண்டான். •

இன்றைய செய்திகள்

15.06. 2023

* பிபோர்ஜாய் புயல் - குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்.

*பிபோர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு 63 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியில் 70 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு.

*கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை ஜூன் 18 ல் இருந்து கிழக்கு இந்திய பகுதிக்கு பரவும் என அறிவிப்பு.

*தூத்துக்குடியைச் சேர்ந்த ஹர்சன் என்ற சிறுவன் தொடர்ந்து 7.30 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைத்தான்.

Today's Headlines

* Piborjoy Cyclone - Gujarat State Government Intensifies Precautionary Measures

 *63 trains have been canceled due to  Cyclone Piborjoy.

 *70 Indian companies will participate in the exhibition of innovative companies in Paris, the capital of France.

 * It is Announced that the Southwest Monsoon which has started in Kerala will spread to East India from June 18.

 *A boy named Harsan from Thoothukudi set a world record by floating continuously for 7.30 hours


 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, June 13, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.06.23

  


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 193

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

விளக்கம்:

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

பழமொழி :

சொல்வதை விட செய்வதே மேல். 

Example is better than precept

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும்.

 - மால்கம் ஃபோர்ப்ஸ்

பொது அறிவு :

1. கடல்களின் எஜமானி என்று அழைக்கப்படும் நாடு எது? 

இங்கிலாந்து. 

 2. காவல்துறையில் முதன் முதலில் பெண்களை சேர்த்த நாடு எது? 

பிரிட்டன்

English words & meanings :

 Ability - talent திறமை.

 Abode - a living place வசிக்கும் இடம்

ஆரோக்ய வாழ்வு :

தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகளுக்கு நல்ல செயல்பாடு  ஏற்பட்டு மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சி கிடைப்பதோடு நல்ல ஆரோகியம் கூடும்.

ஜூன் 14



சே குவேரா அவர்களின் பிறந்தநாள்

        சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர்         1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.

June 14 - World Blood donor day

ஜூன் 14 - உலக ரத்ததானம் அளிப்பவர் தினம்

உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.



நீதிக்கதை

பதினைந்து வயது சிறுவன் அவன். ஒரு மோசமான விபத்தில் தனது இடது கையை இழந்துவிட்டான். ஆனாலும் ஊனத்தை மீறி, எதை யாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் அவனுக்குள் எழுந்தது. அந்தப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு ஜூடோ குரு இருந்தார். அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அவரும் புன்சிரிப்போடு அவனைப் பயிற்சியில் சேர்த்துக்கொண்டார். "இதுதான் உன்னுடைய முதல் பாடம்' என்று சொல்லி, ஒரு தாக்குதல் முறையைச் சொல்லிக் கொடுத்தார். மூன்று மாதங்கள் கடந்தன. அடுத்து..? குருவிடமே கேட்டான். “இந்த ஒரே வித் தையை முழுசாகக் கற்றுக்கொள்!" என்றார் குரு.

சில மாதங்களில் குரு இவனை ஒரு போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு ரவுண்டுகளில் எதிராளிகளை சுலபமாக வீழ்த்தினான் சிறு வன். அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. மூன்றாவது சுற்றில் புகழ்பெற்ற இன்னொரு வீரனோடு அவன் மோத நேர்ந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் அடி வாங்கினாலும், அவன்தான் ஜெயித்தான்.

இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற ஒரு வீரனை சிறுவன் எதிர்கொள்ள நேர்ந்தது. மோசமாக அடி வாங்கி சிறுவன் செத்துவிடுவானோ' என்ற பயத்தில் நடுவரே சிறுவனை விலகிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் குரு, 'விடுங்கள்... அவன் ஜெயிப்பான்" என்றார். போட்டி ஆரம்பித்தது. ஒரு கையில்லாத சிறுவன்தானே என்று அந்த புகழ்பெற்ற வீரன் அலட்சியம் காட்ட, தன் வழக்கமான தாக்குதலில் அவனையும் வீழ்த்தினான் சிறுவன்.

கோப்பையோடு திரும்பும்போது சிறுவன் கேட்டாள்... "ஒரே ஒரு தாக் குதலை மட்டும் கற்றுவைத்திருக்கும் நான் எப்படி ஜெயித்தேன்?"

குரு சிரித்தபடி சொன்னார். “இரண்டு காரணங்கள்... ஒன்று, ஜூடோ விலேயே மிகக் கஷ்டமான ஒரு தாக்குதலை நீ நன்றாகக் கற்றிருந்தாய். இன்னொன்று, இப்படி நீ தாக்கினால் எதிராளி உன்னை மடக்க, உன் இடது கையைத்தான் வளைக்க வேண்டும்: அது உனக்கு இல்லை!"

பலவீனங்களையே பலமாக்கிக் கொண்டால், வெற்றி நிச்சயம்

இன்றைய செய்திகள்

14.06. 2023

* விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் திரு ஜெகதீஷ் அவர்களின் புதல்வன் திரு பிரபஞ்சன் அவர்கள் இன்று வெளிவந்த NEET தேர்வு  முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

*தேசிய மருத்துவ தகுதி தேர்வு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை

*சீன எல்லைக்கு அருகே 2.6 பில்லியன் மதிப்பில் சுபன்சிரி நீர்மின்  திட்டப் பணியை இந்தியா தொடங்குகிறது.

*மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் நியமனம் - 
தமிழ்நாடு அரசு 

*வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 1100 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்.

*இந்தோனேசியா ஓப்பன் பேட்மிட்டன் பி.வி. சிந்து பிரனோய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.

*TNPL நடப்பு சீசனின் முதல் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines



* Mr. Prbanjan, son of Mr. Jegadish, who is working as a social science teacher in Mel Olakur Government Higher Secondary School, Villupuram district, has secured 720/720 marks in the NEET exam results released today and topped the all India level.

*Chief Minister M.K.Stalin requested our Prime Minister Modi to quit the National Medical Eligibility Test

 *India starts work on the Subansiri hydropower project worth 2.6 billion near the China border.

 * Retired IPS officer Shakeel Akhtar appointed as State Chief Information Commissioner - Tamil Nadu Govt

 * Vadachennai and Vallur thermal power stations have been repaired and 1100 MW power generation has started again.     

*  In Indonesian Open Badminton, P.V.  Sindhu and Pranoi advanced to the second round.

 * Coimbatore Kings beat Tirupur Tamilians by 70 runs in the first match of the current TNPL season.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, June 12, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.23

  



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.

விளக்கம்:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

பழமொழி :

அலைபாயும் மனதால் எதையும் செய்ய இயலாது. 

A rolling stone gathers no moss

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவை திறப்பதற்கான சாவியாகும். 

                                                        - ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.

பொது அறிவு :

1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?

12500.        

2.மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது? 

தென்னாப்பிரிக்கா



English words & meanings :

 derail - upset தடம் புரளுதல் abbreviation - to cut short வார்த்தைகளின் சுருக்கம்

ஆரோக்ய வாழ்வு :

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் முடிந்த அளவு 2 ல் இருந்து 3 டம்ளர் தண்ணீர் (உடலுக்கு ஏற்றப்படி) குடிப்பது நல்லதாகும்.

நீதிக்கதை

திருப்தி வேண்டும்

தெரு சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய் ஒரு நாள் கசாப்பு கடைப் பக்கம் சென்றது.

ஒரு கடைக்காரன் ஏமாந்திருந்த சமயமாகப் பார்த்து அவன் கடையில் வைத்திருந்த பெரிய ஆட்டுத் தொடையைத் தூக்கி வந்து விட்டது.

"இன்று எனக்கு அதிர்ஷ்ட காலம் போலும்! பெரிய இறைச்சித் துண்டு ஒன்று கிடைத்துவிட்டது. இதை யார் கண்களிலும் படாமல் தனியான ஓரிடத்தில் வைத்துச் சாப்பிடப் போகிறேன்" என்று தன் மனத்திற்குள் எண்ணியவாறு நாய் ஓடிக் கொண்டிருந்தது.

வழியில் ஒரு சிறு ஆறு இருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு மரப்பாலம் ஒன்று போட்டிருந்தார்கள்.

நாய் மரப்பலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது தற்செயலாக

ஆற்று நீரைக் கவனித்தது.

ஆற்று நீரில் இறைச்சித் துண்டைக் கவ்வி இருக்கும் அதன் உருவம் பிரதிபலித்தது.

ஆற்றுக்குள் வேறொரு நாய் பெரிய இறைச்சித் துண்டு ஒன்றைக் கவ்வியவாறு நிற்பதாக நாய் நினைத்துக் கொண்டது.

அந்த நாயின் இறைச்சித் துண்டையும் பிடுங்கிக் கொண்டால் இரண்டு நாளைக்கு உணவைப் பற்றிக் கவலையே இல்லை என்று நாய் நினைத்துக் கொண்டது.

நீரில் தெரியும் நாயை மிரட்டித் துரத்த எண்ணிய நாய் வாயைத் திறந்து குரைக்கத் தொடங்கியது.

உடனே அதன் வாயிலிருந்து இறைச்சித் துண்டு ஆற்று நீரில் விழுந்து மிதந்து கொண்டே சென்று விட்டது.

உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் பிறர் பொருளுக்காகப் பேராசை கொண்டதன் காரணமாக நாய் கிடைத்த இறைச்சித் துண்டையும்

இழந்து ஏமாற வேண்டி வந்தது.

இன்றைய செய்திகள்

13.06. 2023

*ஜூன் 15-ல் கரையை கடக்கிறது பிபோர் ஜோய் புயல்.

*ஜூன் 15ஆம் தேதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு.

*சிறுவாணி, பில்லூர் அணைகளில் தூர் வாராததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

*ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

*கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுக்கு அபராதம்.

*திருத்தப்பட்ட விதிகளுடன் கோவையில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு பிரீமியர் லீக்(TNPL) கிரிக்கெட்.


Today's Headlines

* Pibor Joy cyclone crosses the seashore on June 15.

 *Opening of multi-specialty Hospital is scheduled for 15th June.

 *As there is no proper dredging in the dams there may be a risk of shortage of drinking water in Siruvani and Pillur dams.

 *A GO is released to increase the monthly salary of sanitation guards working in rural areas.

 *Cricketer Subman Gill was fined.

 * Tamil Nadu Premier League (TNPL) cricket started yesterday in Coimbatore with revised rules.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, June 11, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.06.23

  



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

விளக்கம்:
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

பழமொழி :

சிறு துளி பெரு வெள்ளம். 

A Penny saved is a penny gained

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது தரும் பழம் இனிப்பாக இருக்கும். அரிஸ்டாட்டில்

பொது அறிவு :

1. அம்சங் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது? 

அசாம்

2. ஐந்து கண்கள் உடைய பறக்கும் உயிரினம் எது? 

தேனீ

English words & meanings :

 Abundance - a very large quantity of something மிகுதி, ஏராளம்
chillax - calm down or relax ஓய்வெடு, அமைதிப்படு

ஆரோக்ய வாழ்வு :

நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்

நல்ல ஆரோக்கியம் என்பது நமது அன்றாட வாழ்க்கை முறையில் நாம் பின்பற்ற வேண்டிய முறையான உடற்பயிற்சி, சீரான ஊட்டச்சத்து மற்றும் போதுமான ஓய்வு ஆகியவை ஆகும்


ஜூன் 12


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது[1]. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது[3] உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.

  • உடல் ரீதியான பாதிப்பு
  • உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்
  • உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

நீதிக்கதை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டை கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும் தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாராக யோசித்து பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில்  கலந்து கொள்ள முன் வந்தான். போட்டியில் "தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்? என்றார்கள். அவன் சொன்னான்," ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரி ல்லையே" என்று கூறிவிட்டு கோட்டை கதவை இளைஞன் தள்ளினான். என்ன ஆச்சரியம்" கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டை கதவுகளில் தாழ்ப்பாள் போடவில்லை. திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ, என்று எதற்கும் முயற்சிக்காமலே விட்டுவிடுகிறார்கள். அனைவரும் அறிந்த " முயல்- ஆமை "கதையில் முயலின் தோல்விக்கு "முயலாமையே" காரணம்.

இன்றைய செய்திகள்

12.06.2023

*மதுரை-போடி இடையே வரும் 15ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ளனர்.

*பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் கொட்டி தீர்த்த மழை

*தமிழகத்தில் நிதி நெருக்கடி இருந்த போதிலும் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்- 
 முதலமைச்சர் 

*சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட்ட புறநகர் ரயில் பேஸின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது.

*ஜூன் 14ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையம் பார்க்கிங் கட்டணம் உயர்வு.

*மேட்டூர் அணை- திங்கட்கிழமை தண்ணீர் திறப்பு 

*இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.

*உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ஆஸ்திரேலியா வெற்றி

*ஆசிய கோப்பை- இந்திய ஜூனியர் மகளிர் அணி சாம்பியன்


Today's Headlines

* Train service between Madurai-Bodi will start from June 15th.

 * Heavy rains in northwest Pakistan.

 *Despite the financial crisis in Tamil Nadu, we are implementing new projects-
  Chief Minister announced.

 * A suburban train leaving Chennai Central for Thiruvallur derailed near the base bridge.

 *Metro station parking fee increase from 14th June.

 *Mettur Dam to be opened on Monday

 *Opening of schools from 6th to 12th class today.

 *World Test Championship - Australia won the Championship

 *Asia Cup- Indian Junior Women's Team is the Champions

 Prepared by

Covai women ICT_போதிமரம்